யாழ்ப்பாண மாவட்டத்தின் புதிய அராசாங்க அதிபராக கணபதிப்பிள்ளை மகேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போதைய அரசாங்க அதிபர் வேதநாயகன் அரச சேவையிலிருந்து ஓய்வு பெறவுள்ளமை காரணமாக ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
புதிய அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ள இவர் முன்னதாக வாழைச்சேனை, வவுனத்தீவு மற்றும் செங்கலடி ஆகிய பிரதேச சபைகளின் சிறப்பு ஆணையாளராக பதவி வகித்துள்ளார்.
இதேவேளை, கென்யாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகரகத்தின் பதில் உயர்ஸ்தானிகராகவும் பணியாற்றியுள்ளதோடு, உணவு ஊக்குவிப்பு வாரியத்தின் உறுப்பினராகவும் கணபதிப்பிள்ளை மகேசன் செயற்பட்டுள்ளார்.
Eelamurasu Australia Online News Portal