Tag Archives: ஆசிரியர்தெரிவு

இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன்!

ஐசிசி பெண்கள் டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது.  ஐசிசி பெண்கள் டி20 உலகக்கோப்பை வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்ற இறுதிப் போட்டியில் இங்கிலாந்து – ஆஸ்திரேலியா வீராங்கனைகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீராங்கனை டெனியல் வியாட் 43 ரன்களும், கேப்டன் நைட் 25 ரன்களும் அடித்தனர். மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேற இங்கிலாந்து 19.4 ஓவரில் 105 ரன்னில் ...

Read More »

மாவீரர் நாள் நிகழ்விற்கே தடை நினைவேந்தலுக்கல்ல : யாழ் நீதவான் நீதிமன்றம்

“யாழ்ப்பாணம் கோப்பாயில் 51ஆவது படைத் தலைமையகம் உள்ள காணிக்கு (மாவீரர் துயிலும் இல்லம்) எதிரே உள்ள வீரசிங்கம் சிறிதரன் என்பவருடைய காணியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடிகள் மற்றும் சின்னங்களைப் பயன்படுத்தி மாவீரர் நாள் நிகழ்வை நடத்த யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் தடை விதித்தது.எனினும் நினைவுகூருவதற்கு எந்த தடையையும் நீதிமன்றம் வழங்கவில்லை. “வீரசிங்கம் சிறிதரன் என்பவருடைய காணியில் தடை செய்யப்பட்ட இயக்கம் ஒன்றின் சின்னங்கள், கொடிகள் மற்றும் வரைபடங்கள் பயன்படுத்தப்பட்டு நிகழ்வு நடத்தப்படவுள்ளதாக பொலிஸாரின் புலன் விசாரணையின் அடிப்படையில் அறியப்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ...

Read More »

பைசா நகர் சாய்ந்த கோபுரம் மேலும் 4 செ.மீ. நிமிர்த்தப்பட்டது!

பைசா நகரத்தில் உள்ள சாய்ந்த கோபுரம் மேலும் 4 சென்டி மீட்டர் அளவுக்கு நிமிர்த்தப்பட்டதையடுத்து,  அதற்கு இனி ஆபத்து இல்லை என பொறியியலாளர்கள்  தெரிவித்துள்ளனர். இத்தாலி நாட்டில் உள்ள பைசா நகரத்தில் உள்ள சாய்ந்த கோபுரம் உலக அதிசயங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்த கோபுரம் கட்டுமான பணி கி.பி. 1173-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 1372-ம் ஆண்டு முடிக்கப்பட்டது. 186 அடி உயரத்தில் 7 மாடிகளுடன் இதை கட்டி இருந்தனர். கட்டுமான பணிகள் முடிந்ததில் இருந்தே கோபுரம் சிறிது சிறிதாக சாயத் தொடங்கியது. ஆனாலும் அது ...

Read More »

சிட்னியில் காவல் துறை அதிகாரி கொலை! உதவிய நபருக்கு 38 வருட சிறை!

சிட்னியில் 22 வயது நபர் ஒருவருக்கு NSW நீதிமன்றம் 38 வருட சிறைத்தண்டனை வழங்கியுள்ளது. காவல் துறை  அதிகாரி ஒருவர் மீது தாக்குதல் நடத்துவதற்கு சிறுவன் ஒருவரை ஏவிவிட்டமை மற்றும், அந்த சிறுவனின் சகோதரிக்கு பணம் கொடுத்து அவரை சிரியாவுக்கு சென்று பயங்கரவாத செயற்பாடுகளுக்கு பயிற்சியெடுக்க தூண்டினார் என்ற குற்றச்சாட்டில் இந்த தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு சிட்னி பரமட்டா பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலேயே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. Curtis Cheng என்ற காவல் துறை உத்தியோகத்தர் மீது தாக்குதல் ...

Read More »

வீழ்ச்சியடைந்தது ரூபாவின் பெறுமதி!

இலங்கை மத்திய வங்கியின் அறிக்கைப்படி அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிக்கான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் படி அமெரிக்க டொலர் ஒன்றிற்கான இலங்கை ரூபாவின் விற்பனை மற்றும் கொள்வனவு விலை ரூபாவாக 180 ரூபா 66 சதமாக பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் இறுதியாக வெளியிடப்பட்ட அறிக்கையின்படி அமெரிக்க டொலர் ஒன்றுக்கான இலங்கை ரூபாவின் விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதி  179 ரூபா 4 சதமாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அண்மைக்காலமாக அமெரிக்க ...

Read More »

மஹிந்த அணி இல்லாது வாக்கெடுப்பு நிறைவேற்றம் – 121 பேர் ஆதரவாக வாக்களிப்பு!

நாடாளுமன்றம் இன்று காலை சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது.   இதையடுத்து நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் 5 உறுப்பினர்களும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் 5 உறுப்பினர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் ஒரு உறுப்பினரும் மக்கள் விடுதலை முன்னணி சார்பில் ஒரு உறுப்பினரும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் மன்றில் அறிவித்திருந்தார். இந்நிலையில், நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இடம்பெறும் அங்கத்தவர்கள் தொடர்பாக தற்போது நாடாளுமன்றில் நடத்தப்பட்ட இலத்திரனியல் வாக்கெடுப்பின் போது ஐக்கிய தேசிய முன்னணியில் உள்ளவர்களே அதிகமாக இடம்பெற வேண்டும் என்பதற்காக ...

Read More »

ஆஸ்திரேலியாவில் கடும் புழுதிப்புயல்: வானம் நிறம் மாறியது – பொது மக்களுக்கு எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவில் கடும் புழுதிப்புயல் காரணமாக வானம் நிறம் மாறியது. இதனால் அங்குள்ள பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவில் நாட்டின் தென் கிழக்கு பகுதி முழுமைக்கும் நேற்று கடுமையான புழுதிப்புயல் வீசியது. இதன் காரணமாக வானம் ஆரஞ்சு நிறமாக (செம்மஞ்சள் நிறமாக) மாறியது. 500 கி.மீ. பரப்புக்கு இந்தப் புழுதிப்புயல் வீசியது. சிட்னி தொடங்கி பல நகரங்கள் புழுதிப்புயலால் பாதிக்கப்பட்டன. காற்றின் தரம் மிகக்குறைவானதாக மாறியதால் பொது மக்கள் இடையே அச்சம் ஏற்பட்டது. நியூ சவுத் வேல்ஸ் மாகாணம் உள்பட பல பகுதிகளில் சாலைகளே கண்களுக்கு ...

Read More »

குடியுரிமை பெறுவதற்காக அரங்கேறுகிறது போலி திருமணங்கள்!

குடியுரிமைக்காக போலி திருமணங்கள் செய்துகொள்ளும் தெற்காசிய மக்களுக்கு அவுஸ்திரேலியா உயர் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அவுஸ்திரேலியாவில் குடியுரிமை பெற்ற 4 பேர் கொண்ட கும்பல் சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவில் குடியுரிமை பெற விரும்புவர்களுக்கு திருமணம் மூலம் குடியுரிமை பெற்றுக் கொடுத்துள்ளது. இச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததாக 32 வயதான இந்தியரை அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு படையினர் சிட்னியில் கைது செய்தனர். இதனையடுத்து அதிரடி நடவடிக்கையாக 164 பேரின் பார்ட்னர் விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இக் குற்றச்சாட்டில் ஈடுபட்டவர்கள் அனைவருக்கும் நிரந்தர முகவரி கிடையாது ...

Read More »

மன்னார் மனித புதைகுழியிலிருந்து இதுவரை 230 மனித எச்சங்கள் மீட்பு!

மன்னார் மனித புதைகுழியிலிருந்து இதுவரை 230 மனித எச்சங்களை மீட்டுள்ளதாக் பேராசிரியர் ராஜ்சோமதேவ தெரிவித்துள்ளார். இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிகளில் மன்னார் மனித  புதைகுழியே மிகப்பெரியது என அவர் தெரிவித்துள்ளார். எலும்புகள் சிதறிக்கிடக்கின்றன இதன் காரணமாக முழு உடலின் அமைப்பை கண்டுபிடிப்பது கடினமாக உள்ளது என பேராசிரியர் ராஜ்சோமதேவ தெரிவித்துள்ளார். சில எலும்புகளை காணவில்லை  எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.   மனித எச்சங்களிற்கு அப்பால் குழியிலிருந்து பீங்கான்கள் உலோகப்பொருட்கள் போன்றவற்றையும் மீட்டுள்ளோம் என குறிப்பிட்டுள்ள அவர் நகைகளும் மீட்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.

Read More »

ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் அவுஸ்திரேலிய அகதியாம்!

அவுஸ்திரேலியாவின் முன்னாள் அகதி தானென்று ஐக்கிய நாடுகள் சபையின் புதிய மனித உரிமைகள் ஆணையாளர் Michelle Bachelet தெரிவித்துள்ளார். சிலி நாட்டின் முன்னாள் அதிபர் Michelle Bachelet 70 ஆம் ஆண்டு காலப் பகுதியில் அந்நாட்டின் சர்வாதிகார ஆட்சியாளரின் பிடியிலிருந்து வெளியேறினார். 1975 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு அகதியாக புகலிடம் கோரி வந்த நிலையில் பின் ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்து அங்கு பல காலம் வாழ்ந்தார். இவர் அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய போது அவுஸ்திரேலியாவின் அகதிகள் கொள்கை மிக நெகிழ்சியுடன் இருந்ததாக கூறிப்பிட்டுள்ளார். அவுஸ்திரேலியா தற்போது ...

Read More »