மன்னார் மனித புதைகுழியிலிருந்து இதுவரை 230 மனித எச்சங்களை மீட்டுள்ளதாக் பேராசிரியர் ராஜ்சோமதேவ தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிகளில் மன்னார் மனித புதைகுழியே மிகப்பெரியது என அவர் தெரிவித்துள்ளார்.
எலும்புகள் சிதறிக்கிடக்கின்றன இதன் காரணமாக முழு உடலின் அமைப்பை கண்டுபிடிப்பது கடினமாக உள்ளது என பேராசிரியர் ராஜ்சோமதேவ தெரிவித்துள்ளார்.
சில எலும்புகளை காணவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மனித எச்சங்களிற்கு அப்பால் குழியிலிருந்து பீங்கான்கள் உலோகப்பொருட்கள் போன்றவற்றையும் மீட்டுள்ளோம் என குறிப்பிட்டுள்ள அவர் நகைகளும் மீட்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal