குடியுரிமைக்காக போலி திருமணங்கள் செய்துகொள்ளும் தெற்காசிய மக்களுக்கு அவுஸ்திரேலியா உயர் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் குடியுரிமை பெற்ற 4 பேர் கொண்ட கும்பல் சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவில் குடியுரிமை பெற விரும்புவர்களுக்கு திருமணம் மூலம் குடியுரிமை பெற்றுக் கொடுத்துள்ளது.
இச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததாக 32 வயதான இந்தியரை அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு படையினர் சிட்னியில் கைது செய்தனர்.
இதனையடுத்து அதிரடி நடவடிக்கையாக 164 பேரின் பார்ட்னர் விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இக் குற்றச்சாட்டில் ஈடுபட்டவர்கள் அனைவருக்கும் நிரந்தர முகவரி கிடையாது என்று கூறப்படுகிறது.
மேலும் மோசடிகளில் ஈடுபட்ட பெண்கள் பலரும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களாகவும், குடும்ப வன்முறை மற்றும் நிதிநெருக்கடியில் சிக்கியுள்ளவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் அவுஸ்திரேலிய பணியகத்தின் புள்ளிவிவரத்தின் படி, 2000 முதல் 2016 வரை மட்டும் 3 லட்சம் இந்தியர்கள் அவுஸ்திரேலியாவில் குடியேறியுள்ளனர்.