ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் அவுஸ்திரேலிய அகதியாம்!

அவுஸ்திரேலியாவின் முன்னாள் அகதி தானென்று ஐக்கிய நாடுகள் சபையின் புதிய மனித உரிமைகள் ஆணையாளர் Michelle Bachelet தெரிவித்துள்ளார்.

சிலி நாட்டின் முன்னாள் அதிபர் Michelle Bachelet 70 ஆம் ஆண்டு காலப் பகுதியில் அந்நாட்டின் சர்வாதிகார ஆட்சியாளரின் பிடியிலிருந்து வெளியேறினார்.

1975 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு அகதியாக புகலிடம் கோரி வந்த நிலையில் பின் ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்து அங்கு பல காலம் வாழ்ந்தார்.

இவர் அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய போது அவுஸ்திரேலியாவின் அகதிகள் கொள்கை மிக நெகிழ்சியுடன் இருந்ததாக கூறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியா தற்போது அகதிகள் விவகாரத்தில் கடும்போக்கினை கடைப்பிடிக்கிறது.

இதுபற்றி அவர் கூறுகையில்;

இது வித்தியாசமாக உள்ளதாகவும் அகதிகளின் அடிப்படை உரிமைகளையும் மனித உரிமைகளையும் மதிப்பளிக்கும் விதத்தில் அவஸ்திரேலியாவின் அகதிகள் கொள்கை அமையவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.