கிளிநொச்சி கண்ணகிபுரம் பகுதியில் ஒரு தொகை வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியல் வெடிபொருட்கள் இருப்பதாக தெரிவித்து காவல் துறை நீதிமன்ற அனுமதியை கோரியிருந்த நிலையில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கமைவாகவே மேற்படி தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தேடுதல் நடவடிக்கையின்போதே மேற்படி வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
ராஜீவ் காந்தியின் மரணம் படுகொலையா, விபத்தா?
புல்வாமா தாக்குதலை ஒரு விபத்து என்று குறிப்பிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்குக்கு பதிலடி தரும் வகையில் ‘ராஜீவ் காந்தியின் மரணம் படுகொலையா, விபத்தா?’ என மத்திய மந்திரி வி.கே. சிங் கேள்வியெழுப்பியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மத்தியப்பிரதேசம் மாநில முன்னாள் முதல் மந்திரியுமான திக்விஜய் சிங். சர்ச்சை கருத்துகளால் அவ்வப்போது அக்கட்சியை தர்மசங்கடமான நிலைக்கு தள்ளுவதுண்டு. அவ்வகையில், தற்போது புல்வாமா தாக்குதல் ஒரு விபத்து என அவர் சமீபத்தில் வெளியிட்ட கருத்து பொதுமக்களிடையில் கொந்தளிப்பை உண்டாக்கியதுடன் அரசியல் வட்டாரத்திலும் ...
Read More »சிறை தண்டனை பெற்றவர்கள் அவுஸ்ரேலியா வரத்தடை!
உள்நாட்டில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச்செயலில் ஈடுபட்டு, 1 ஆண்டு அல்லது அதற்கு மேல் சிறை தண்டனை பெற்றவர்கள் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முடியாது என அந்நாடு தெரிவித்துள்ளது. உள்நாட்டில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச்செயலில் ஈடுபட்டு, 1 ஆண்டு அல்லது அதற்கு மேல் சிறை தண்டனை பெற்றவர்கள் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முடியாது என அந்நாடு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டின் குடியுரிமை மந்திரி டேவிட் கோல்மேன் கூறுகையில், “உள்நாட்டில் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை ஆஸ்திரேலியா ஒருபோதும் சகித்துக்கொள்ளாது. அவர்கள் ஆஸ்திரேலியாவில் வரவேற்கப்படமாட்டார்கள்” என கூறினார். ...
Read More »பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் போராட்டத்திற்கு அழைப்பு!
ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கோரி எதிர்வரும் 16 ஆம் திகதி போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. இப்போராட்டம் குறித்து யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போராட்டத்திற்காக அணி திரளுமாறு பொது அமைப்புகள் மற்றும் மதகுருமாரை யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கேட்டுள்ளதுடன், ஈழத் தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைகள், இலங்கையில் நீண்ட காலமாக கட்டமைக்கப்பட்ட ரீதியில் இடம்பெற்று வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தகைய அடக்குமுறைகள் இலங்கைத்தீவில் திட்டமிடப்பட்ட ரீதியிலான ...
Read More »அணு ஆயுதங்களை கைவிடும் வரையில் வடகொரியாவுக்கு எதிர்காலம் இல்லை!
அணு ஆயுதங்களை கைவிடும் வரை வடகொரியாவுக்கு எதிர்காலம் கிடையாது என டிரம்ப் திட்டவட்டமாக கூறினார். அணுஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகள் மூலம் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கி வந்த வடகொரியாவுடன் அமெரிக்கா, கடந்த ஆண்டு பேச்சுவார்த்தை நடத்தியது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் சிங்கப்பூரில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்புக்கு பின்னர் அணுஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனை செய்வதை வடகொரியா நிறுத்தி வைத்தது. எனினும் கொரிய தீபகற்பத்தை அணுஆயுதமற்ற பிரதேசமாக மாற்றும் வகையில் வடகொரியா அணுஆயுதங்களை முழுமையாக கைவிட ...
Read More »அவுஸ்ரேலியாவில் கிரிக்கெட் அணியில் தமிழ்ப்பெண்!
பதினைந்து வயதுக்குக் கீழ்ப்பட்ட நியுஸ் சவுத்வெல் (NSW) மாநில பெண்கள் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்துள்ளார் சிந்துஜா சுரேஷ்குமார். கிரிக்கெட் மாத்திரமன்றிப் பல விளையாட்டுகளில் விருதுகளை பெற்றுள்ளார். இவ் வருடம் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறார். பல விளையாட்டுகளில் பங்குபற்றுவதால் நேரத்தை முகாமை செய்யும் முகமாக தமது சுய கற்றலை புகையிரதவண்டிலும் மகிழுர்திலும் பயணிக்ககும் போது மேற்கொள்கின்றார். தனது தம்பி விளையாடும் போது பந்து எடுத்துக் கொடுத்து உதவி செய்த போது கிறிக்கெட்பயிற்றுவிப்பாளரால் தன்னையும் அழைத்து வியையாடச் செய்தமையால் கிறிக்கெட்டில் பங்கேற்கும் சந்தர்பம் ஏற்பட்டது என்றார். ...
Read More »அவுஸ்திரேலியாவில் காட்டுத் தீ! சொத்துக்கள் பல சேதம்!
அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக பாரியளவிலான சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் மேலும் அழிவுகள் ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த எச்சரிக்கையினை அந்நாட்டு அவசரகால சேவைகள் மையம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுத்துள்ளது. அவுஸ்திரேலியாவில் கடந்த புதன்கிழமை முதல் பரவிவரும் காட்டுத்தீயினால் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. தென்கிழக்கு மெல்போர்ன் பகுதியில் இருந்து 100 கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஸ்டேட் பார்க் பகுதியில் பாரிய தீப்பரவல் பதிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் விக்டோரியா மாகாணத்தில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் தீ பரவல் ...
Read More »வெள்ளை வான் கடத்தல் தொடர்பில் கோத்தபாய ….!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் தாம் வெள்ளைவான் கடத்தல் சம்பவங்களுடன் ஈடுபடவில்லை என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கருத்து வெளியிட்டவர், எனினும் யுத்தத்தில் வெற்றி கொள்ளும் விதமாகவும் அதனை முடிவுக்கு கொண்டுவரும் விதமாகவும் நான் நுண்ணறிவான செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தேன். எனினும் மக்களை பாதிக்கும் எந்தவொரு செயற்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை. அவ்வாறான செயற்பாடுகள் மூலமாக 30 வருட காலமாக நாட்டில் இடம்பெற்ற போரை மஹிந்த ...
Read More »பின்லேடன் மகன் பெயரை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்தது ஐ.நா!
சவுதி அரேபிய அரசு குடியுரிமையை ரத்து செய்துள்ள நிலையில், ஐநா பாதுகாப்புக்குழு பின்லேடன் மகன் ஹம்ஸா பெயரை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்துள்ளது. அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவராக இருந்த பின்லேடன் 2011-ம் ஆண்டு பாகிஸ்தானில் அமெரிக்க அதிரடிப்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதற்கு பழி வாங்கும் வகையில் அமெரிக்கா மீதும், அதன் நட்பு நாடுகள் மீதும் தாக்குதல் நடத்துவேன் என அவரது இளைய மகன் ஹம்ஸா பின்லேடன் 2015-ம் ஆண்டில் அறிவித்தார். அதைத்தொடர்ந்து அவரை சர்வதேச பயங்கரவாதி என அமெரிக்கா அறிவித்தது. மேலும் ஹம்ஸா ...
Read More »யாழில் எழுச்சி கொண்ட பெண்கள்!
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணியின் ஏற்பாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட சர்வதேச மகளிர் தின பெண்கள் எழுச்சி மாநாடு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (03) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி மகளிர் பிரிவு தலைவியும் நலலூர் பிரதேச சபை உறுப்பினருமான திருமதி வாசுகி சுதாகரன் தலைமையில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின பெண்கள் எழுச்சி மாநாட்டின் ஆரம்ப நிகழ்வாக யாழ்ப்பாணம் முன்னியப்பர் ஆலய முன்றலில் இருந்து பேரிகை இசை முழங்க விருந்தினர்கள் அழைத்துவரப்பட்ட நிலையில் ...
Read More » Eelamurasu Australia Online News Portal
Eelamurasu Australia Online News Portal
				 
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			