உள்நாட்டில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச்செயலில் ஈடுபட்டு, 1 ஆண்டு அல்லது அதற்கு மேல் சிறை தண்டனை பெற்றவர்கள் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முடியாது என அந்நாடு தெரிவித்துள்ளது.
உள்நாட்டில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச்செயலில் ஈடுபட்டு, 1 ஆண்டு அல்லது அதற்கு மேல் சிறை தண்டனை பெற்றவர்கள் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முடியாது என அந்நாடு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நாட்டின் குடியுரிமை மந்திரி டேவிட் கோல்மேன் கூறுகையில், “உள்நாட்டில் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை ஆஸ்திரேலியா ஒருபோதும் சகித்துக்கொள்ளாது. அவர்கள் ஆஸ்திரேலியாவில் வரவேற்கப்படமாட்டார்கள்” என கூறினார். மேலும் அவர், “விசா நடைமுறைகளை கடுமையாக்கும் இந்த புதிய சட்டம் உடனடியாக கடந்த வாரம் அமலுக்கு வந்தது. இதன் மூலம், உள்நாட்டில் சிறை தண்டனை பெற்று, ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் அயல்நாட்டை சேர்ந்தவர்கள் நாடு கடத்தப்படுவார்கள்” எனவும் தெரிவித்தார்.