முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் தாம் வெள்ளைவான் கடத்தல் சம்பவங்களுடன் ஈடுபடவில்லை என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்டவர்,
எனினும் யுத்தத்தில் வெற்றி கொள்ளும் விதமாகவும் அதனை முடிவுக்கு கொண்டுவரும் விதமாகவும் நான் நுண்ணறிவான செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தேன்.
எனினும் மக்களை பாதிக்கும் எந்தவொரு செயற்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை.
அவ்வாறான செயற்பாடுகள் மூலமாக 30 வருட காலமாக நாட்டில் இடம்பெற்ற போரை மஹிந்த ராஜபக்ச முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.
தற்போது அனைத்து மக்களும் மகிழ்ச்சியாக வாழும் சூழலை ஏற்படுத்தியுள்ளார் என கோத்தபாய ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal