Tag Archives: ஆசிரியர்தெரிவு

கொழும்பில் 6 வீட்டுத் தொகுதிகள் விடுவிப்பு

கொழும்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த குடியிருப்பு தொகுதிகளில் சில, இன்று (12) முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. இன்று காலை 6 மணி முதல் அந்த குடியிருப்புத் தொகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ளன என லெப்டினன் ஜெனரல் இராணுவத்தளபதி ஷ​வேந்திர சில்வா அறிவித்துள்ளார். அதன்பிரகாரம். மட்டக்குளிய ரந்திய உயன முகத்துவாரம் (மோதர) மென்சத உயன முகத்துவாரம் (மோதர) மிஹிஜய ​செவன கிராண்ட்பாஸ் முவதொர உயன கிராண்ட்பாஸ் சமஹிபுர தெமட்டகொட மிஹது சென்புர உயன அந்த வீட்டுத் தொகுதியில் வாழும் மக்களிடத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் ...

Read More »

24 மணி நேரத்துக்குள் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்படும்

அமெரிக்காவில் முதல் கொரோனா தடுப்பூசி 24 மணி நேரத்துக்குள் வழங்கப்படும் என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தற்போது தினமும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதேபோல் பலியானவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டி இருக்கிறது. நேற்று ஒரே நாளில் 3 ஆயிரம் பேர் உயரிழந்துள்ளனர். இதனால் அமெரிக்காவில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்த மாதத்தில் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் ...

Read More »

சவுதியின் மதபோதகர்கள் இலங்கை முஸ்லீம்களின் மனதை மாற்றும் போதனைகளில்

சவுதிஅரேபியாவிற்கு செல்லும் இலங்கை முஸ்லீம்கள் அங்குள்ள மதபோதகர்ளால் மூளைச்சலவை செய்யப்படுகின்றனர் என உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சவுதிஅரேபிய போதகர் ஒருவர் இலங்கை முஸ்லீம் ஒருவருக்கு போதிக்கும் காணொளி குறித்து ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பிட்ட காணொளியில் காணப்படும் விடயங்கள் குறித்து ஏசிஜேயூ அமைப்பின் தலைவரிடம் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் விசாரித்துள்ளனர். குறிப்பிட்ட காணொளியில் சவுதிஅரேபிய மதகுரு இஸ்லாமை கைவிடுதல் கொலை செய்தல் போன்ற விடயங்கள் குறித்துகருத்து வெளியிட்டுள்ளார் என ஏசிஜேயூ அமைப்பின் தெரிவித்துள்ளார். இவ்வாறான சந்தர்ப்பங்களில் ...

Read More »

39 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன

இலங்கை முழுவதும் 10 காவல் துறை பிரிவுகள், 39 கிராம சேவகர் பிரிவுள் மற்றும் 04 தொடர்மாடி குடியிருப்புகள் முடக்கப்பட்ட நிலையிலுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில் மொத்தம் 09 காவல் துறை பிரிவுகள் முடக்கப்பட்ட நிலையிலுள்ளன. அவையாவன: முகத்துவாரம்(மோதர), கிராண்ட்பாஸ், ஆட்டுப்பட்டித்தெரு, டாம் வீதி, வாழைத்தோட்டம், மாளிகாவத்தை, மருதானை, தெமட்டகொட மற்றும் கொட்டாஞ்சேனை ஆகும். வேகந்த, வனாத்தமுல்ல, சாலமுல்ல, ஹுனுப்பிட்டி,60ஆம் தோட்டம் மற்றும் கோகிலா வீதி ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் முடக்கப்பட்டுள்ளன. மேலும் தொடர் மாடிகளில் ரன்திய உயன, ...

Read More »

சித்ரா தற்கொலைக்கு யார் காரணம்?

சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலைக்கு யார் காரணம் என்பது குறித்து காவல்துறையினர் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளனர். சின்னத்திரை நடிகை சித்ரா நேற்று முன்தினம் நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் தூக்கில் தொங்கியபடி பிணமாக மீட்கப்பட்டார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறப்பட்டு வந்தநிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் நடிகை சித்ராவின் மரணம் தற்கொலை தான் என போலீசார் உறுதிப்படுத்தினர். இதையடுத்து அவரை தற்கொலைக்கு தூண்டியது யார் என்ற கோணத்தில் போலீசார் அடுத்தகட்ட விசாரணையை நடத்தி வந்தனர். இந்நிலையில், நடிகை சித்ராவின் தற்கொலைக்கு அவரது ...

Read More »

கொரோனாவைரசினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் போது மனிதஉரிமைகளிற்கு முக்கியத்தும் வழங்குங்கள்

கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளின் போது மனித உரிமைக்கு முன்னுரிமை வழங்குங்கள் என ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோகுடரெஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். மனித உரிமைகள் தினத்தை குறிக்குமுகமாக வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை மற்றும் அதிலிருந்து மீள்வதற்கான முயற்சிகளின் போது மக்களிற்கும் மனித உரிமைகளிற்கும் முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா வைரசினை தோற்கடித்து அனைவரையும் காப்பாற்றுவதற்கு உலகளாவிய உரிமைiயை அடிப்படையாக கொண்ட கட்டமைப்பு அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மனித ...

Read More »

வவுனியாவிலும் காணாமல் ஆக்கப்பட்டோருக்காக போராட்டம்!

சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று (10) வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் உண்மை நிலையினை வெளிப்படுத்தக் கோரி, வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக காலை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Read More »

மனிதர்களுக்கு மத்தியில் மறைந்து வாழும் வேற்று கிரகவாசிகள்?

வேற்று கிரகவாசிகள் மனிதர்களுக்கு மத்தியில் மறைந்து வாழ்வதாக இஸ்ரேலின் முன்னாள் விண்வெளி பாதுகாப்பு தலைவர் தெரிவித்துள்ள கருத்து, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 1981 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை இஸ்ரேலின் விண்வெளி பாதுகாப்புக்கு தலைமை வகித்த ஹைம் எஷெட் (Haim Eshed)அமெரிக்க வார இதழுக்கு அளித்த பேட்டியில், வேற்று கிரக வாசிகள் பூமியின் தன்மை குறித்து ஆராய்வதற்காக, அமெரிக்க அரசுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், அமெரிக்க  ஜனாதிபதி ட்ரம்ப், வேற்று கிரக வாசிகளின் இருப்பை உலகிற்கு பிரகடனப்படுத்த முற்பட்டபோது, மனிதர்கள் அச்சமடைவார்கள் என்பதற்காக ...

Read More »

செம்பியன்பற்று கடற்கரையில் கரை ஒதுங்கிய எலும்புக்கூடு

வடமராட்சி கிழக்கு – செம்பியன்பற்று கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் எலும்புக்கூடாக சடலமொன்று நேற்று (08) மாலை கரையொதுங்கியுள்ளது. செம்பியன்பற்று கிராமத்துக்கும் தனிப்பனை கிராமத்துக்கும் இடைப்பட்ட கடற்கரைப் பகுதியில் இவ்வாறு ஒதுங்கிய உருக்குலைந்த சடலம் அடையாளம் காண முடியாதவாறு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனை அவதானித்த பிரதேசவாசிகள் பளை பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர். இதையடுத்து சம்பவம் தொடர்பில் மேலதிக நடவடிக்கையை பளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Read More »

யாழில் ஆயிரம் கடற்படையினர் தனிமைப்படுத்தலில்

யாழ்ப்பாணக் குடாநாட்டில் மட்டும் ஆயிரம் கடற்படையினர் அவர்களது முகாம்களில் தற்போது தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் பணியாற்றும் கடற்படையினர் விடுமுறையில் வீடுகளுக்குச் சென்று விடுமுறையைக் கழித்த பின்பு பணிக்குத் திரும்பும் சமயம் 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு பிசிஆர் பரிசோதனையின் பின்பே பணிக்கு அமர்த்தப்படுகின்றனர். இவ்வாறு தனிமைப்படுத்தல்களுக்கு உட்பட்டவர்கள் காலி, காங்கேசன்துறை, நெடுந்தீவு, மாதகல், வெற்றிலைக்கேணி எனப் பல இடங்களிலும் உள்ளனர். இவ்வாறு சகல இடங்களிலும் தனிமைப்படுத்தலில் உள்ள கடற்படையினரே ஆயிரம் பேர் எனக் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு தனிமைப்படுத்தலிலுள்ள ஆயிரம் பேரில் பலரது ...

Read More »