Tag Archives: ஆசிரியர்தெரிவு

எழுக தமிழ் செயற்பாட்டாளர் அலெக்ஸ் கைது- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

எழுக தமிழிற்கு பின்னரும் மாணவர்கள் படுகொலைக்குப் பின்னரும் தோன்றியிருக்கும் மக்கள் எழுச்சியினால் மிரண்டு போயுள்ள அரசாங்கம் மாணவர்கள் மீதான படுகொலையை நியாயப்படுத்த வேண்டிய சங்கடமான சூழ்நிலையில் யாழில் அசாதாரண கூழல் நிலவுவதாக காட்ட முனைவதாகவும் அதன் ஒரு அங்கமாகவே  தமது கட்சியின் தீவிர செயற்பாட்டாளரும் , எழுக தமிழ் நிகழ்வில் முன்னின்று செயற்பட்ட செயற்பாட்டாளர்களில் ஒருவருமான அலெக்ஸ் அரவிந்தன் பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிசார் கைது செய்துள்ளனர் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் தெரிவித்துள்ளார். யாழில் உள்ள தமிழ் தேசிய மக்கள் ...

Read More »

கொழும்பில் மாபெரும் கையெழுத்து போராட்டம்

கொழும்பில் மாபெரும் கையெழுத்து போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு பல வருட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி, இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டில், கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் இன்று மாலை 3 மணிமுதல் 6 மணிவரை இடம்பெறவுள்ள இக் கையெழுத்து போராட்டத்தில், அனைவரையும் கலந்துகொண்டு ஆதரவு வழங்குமாறு கேட்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள இச்செயற்பாட்டின் இறுதியில், சேகரிக்கும் கையெழுத்துக்களை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருக்கு ...

Read More »

புதிய அரசியலமைப்பில் 13வது திருத்தம் உள்வாங்கப்பட்டுள்ளது

புதிய அரசியலமைப்பின் மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் தொடர்பில் முன்னைய யாப்பின் 13வது திருத்தச்சட்டத்தில் காணப்பட்ட அனைத்து உரிமைகளும் அப்படியே உள்வாங்கப்பட்டுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அரசியல் அமைப்பு வரைபின் ஊடாக மாகாண சபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மாகாண சபைகள் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களைக் கொண்டிருக்கும் வகையில் அதிகாரப் பரவலாக்கல் மேற்கொள்ளப்படும். அத்துடன் ஜனாதிபதி பதவியில் உள்ளவர் நினைத்த மாத்திரத்தில் மாகாண சபைகளைக் கலைக்கும் வகையில் இதுவரை காலமும் வழங்கப்பட்டிருந்த அதிகாரமும் புதிய அரசியல் அமைப்பின் ஊடாக ...

Read More »

வரலாறாய் வாழும் தமிழ்ச்செல்வன்! – ச.பொட்டு அம்மான்

தமிழ்ச்செல்வனைப் பற்றியும் நினைவுக்குறிப்பொன்றை எழுதவைப்பதாக காலம் கட்டளையிட்டுவிட்டது. காலத்தின் ஓட்டத்தில் மாற்றங்கள் வரும். சில மாற்றங்களை நாம் கற்பனை செய்தும் பார்ப்பதில்லை. மாற்றம் நிகழ்ந்துவிட்ட போதிலும் அந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் மனம் கிடந்து மறுகும். அப்படிப்பட்ட மாற்றம்தான் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் மறைவு. சபையில் புன்சிரிப்பும், எம்மிடையே கலகலத்த அதிரடிச் சிரிப்புமாக உலாவந்த தமிழ்ச்செல்வன், பிரிகேடியர் தமிழ்ச்செல்வனாக வணக்கத்திற்கு உரியவனாகிவிட்டான். தமிழ்ச்செல்வனைப் பற்றி எதிலிருந்து தொடங்குவது? அவனது வீரச்சாவிற்கு முந்திய பின்மாலைப்பொழுது…, அநுராதபுர எல்லாளன் நடவடிக்கையாளர்களுக்கான வீரப் பதக்கம் வழங்கும் நிகழ்வு…, தலைவர் ...

Read More »

அவுஸ்ரேலியாவில் வாழும் மாவீரர் குடும்பங்களே! வீரர்களின் விபரங்களை பதிவு செய்க!

தமிழீழ விடுதலைக்காக தம்முயிரை அர்ப்பணித்துப் போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களை எழுச்சியுடன் நினைவுகொள்ளும் தேசிய நினைவெழுச்சிநாள் ஏற்பாடுகள் தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் நடைபெற்று வருகின்றன. அவ்வகையில் அவுஸ்ரேலிய நாட்டிலும், 2016ம் ஆண்டு மாவீரர் நினைவுநாள் நிகழ்வுகள் நவம்பர் மாதம் 27ம் நாள் ஞாயிற்றுக்கிழமை அன்று அனைத்து மாநிலங்களிலும் நடைபெறவிருக்கின்ற நிலையில், அவுஸ்ரேலியாவில் வாழும் மாவீரர் குடும்பங்களை சேர்ந்தோர் அல்லது உரித்துடையோர் தமது விபரங்களை பதிவுசெய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். இதுவரை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் விபரப்பட்டியலில் இல்லாத, மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், குறிப்பாக அண்மையில் குடிபுகுந்தவர்கள் தயவு ...

Read More »

அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் நிதித்திட்டத்தின்கீழ் தாயகத்தில் நிமிர்ந்த யாழ். இளைஞன்

அவுஸ்ரேலியாவுக்கு சென்று அகதி அந்தஸ்துக்கோரிய நிலையில், அதில் தோல்வியை கண்ட யாழ்ப்பாண இளைஞர் ஒருவர் இன்று சொந்த தொழிலில் சிறப்பாக வாழ்ந்துவருவதாக தெ ஒஸ்ரேலியன் செய்தித்தாள் தெரிவித்துள்ளது. 2012ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இருந்து படகு ஒன்றின்மூலம் அவுஸ்ரேலியாவுக்கு தப்பிச்சென்ற மார்க்கஸ் பிரீசன் என்பவருக்கு இந்த வாழ்க்கை வாய்த்திருப்பதாக செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது. அவுஸ்ரேலியாவுக்கு சென்ற இவருக்கு அங்கு அகதி அந்தஸ்து வழங்கப்படவில்லை. முயற்சியில் தோல்விக்கண்டார். இதனையடுத்து நாடு திரும்ப இணங்கினார். தமது சொந்த விருப்பத்தின்பேரில் நாடு திரும்பிய இவருக்கு அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் நிதித்திட்டத்தின்கீழ் சர்வதேச புலம்பெயர்ந்தோர் ...

Read More »

வடக்கில் அவதூறு பரப்பும் இணையத்தளம் ஒன்றுக்கு தடை

வடக்கில் நீதித்துறை தொடர்பாக பொய்யானதும், அவதூறு பரப்புவதுமான செய்தியை வெளியிட்டுவந்த தமிழ் இணையத்தளமொன்று நேற்றையதினம் சிறீலங்கா தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவினால் தடை செய்யப்பட்டுள்ளது. ஊடகத்துறை மற்றும் நீதி அமைச்சின் முறைப்பாட்டிற்கமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் சுனில் சிறிலால் தெரிவித்துள்ளார். ‘குறித்த இணையத்தளமானது, வடக்கில் நீதித்துறையின் நடவடிக்கைகள் தொடர்பாக பொய்யான தகவல்களை வெளியிட்டு வந்ததாகவும், நீதிபதிகள் மற்றும் சட்டவாளர்கள் தொடர்பாக அவதூறான செய்திகளை வெளியிட்டு வருவதாகவும், வடக்கில் பொதுமக்களைத் தூண்டி விடும் வகையில் செயற்படுவதாகவும், இந்த இணையத்தளம் மீது ...

Read More »

சுவிஸில் ஈழத்தமிழ் இளைஞர்கள் மீது துப்பாக்கிச்சூடு- ஒருவர் பலி

வெண்பனி தேசமென செல்லமாக அழைக்கப்படும் சுவிட்சலாந்து நாட்டின் சொலத்துாண் மாநிலத்தில் ரயில் நிலையத்தின் கீழ்த் தளத்தில் உள்ள தமிழர் ஒருவருக்குச் சொந்தமான கடையில் தொழில் ரீதியில் நண்பர்களாக இருந்த இருவரிடம் ஏற்பட்ட தகராறு நேற்று முன்தினம் இரவு துப்பாக்கிச் சூட்டில் முடிந்துள்ளது. சொலத்தூண் மாநகரில் பிரபலமான சோலோ மூவி உரிமையாளர் வசி என்பவராலேயே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சோலோ மூவியில் சில ஆண்டுகளுக்கு முன் வேலை செய்து தற்சமயம் தனியாக தொழில் புரியும் நீதன் என்பவருடன் நீண்டநாட்களாக முறுகல் நிலையில் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ...

Read More »

பூரண கர்த்தாலால் முடங்கியது யாழ் நகர்

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு நீதி கோரி இன்றைய தினம் வடக்கு முழுவதும் பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்க ஆரம்பிக்கப்பட்டுள்ளது.. யாழ்.நகர் உட்பட அனைத்து இடங்களிலும் சன நடமாட்டம் மிக மிக குறைவாக காணப்படுகின்றது. இந்நிலையில் இன்றைய தினம் காலை ஆறு மணிமுதல் இரவு வரை வடக்கில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்கள் அனைத்தையும் மூடுமாறு வர்த்தக சங்கங்களும், தனியார் அரச பேரூந்துகள் சேவையில் ஈடுபட வேண்டாம் என வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சும் கோரியுள்ளது. யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் துப்பாக்கி சூட்டில் படுகொலை செய்யப்பட்டதனை அடுத்து, ...

Read More »

மாணவர்கள் படுகொலை! யாழ் மாவட்ட செயலகம் முன்பாக மாணவர்கள் போராட்டம்!

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து யாழ் மாவட்ட செயலகம்  முன்பாக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கண்டனப் போராட்டம் ஒன்றை நடாத்துகின்றனர். அதேநேரம் மாணவர்களால் மாவட்ட செயலகத்தின் கதவுகள் இழுத்து மூடப்பட்டு போராட்டம் முன்னெடுக்கப்படுவதால் அரச செயலக ஊழியர்கள் அரச கட்டடத்திற்குள் செல்ல முடியாது வெளியே காத்திருக்கின்றனர். இதனால் அரச செயலத்தின் பணிகள் முடக்கப்பட்டுள்ளன. இதேநேரம் மாணவர்கள் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள காவல்துறையினர் ஐவரையும் இன்று விசாரணைக்காக நீதி மன்றம் முன்நிறுத்துவற்கு ஏற்பாடுகள் செய்யட்ட நிலையில் மாணவர்களின் போராடங்கள் மற்றும் கதவடைப்புப் ...

Read More »