Tag Archives: ஆசிரியர்தெரிவு

தமிழ் மக்கள் பேரவையின் செய்தியாளர் மாநாடு!

தமிழ் மக்கள் பேரவையால் எதிர்வரும் 22ஆம் திகதி, இலங்கை மன்றக் கல்லூரியில் மாநாடொன்று நடாத்தப்படவுள்ளது. இம்மாநாடானது கடந்த செப்ரெம்பர் மாதம் 24ஆம் திகதி நடாத்தப்பட்ட ‘எழுக தமிழ்’ பேரணி தென்னிலங்கையில் ஏற்படுத்திய அதிருப்தியை தென்னிலங்கை மக்களுக்கு தெளிவுபடுத்தும் முகமாகவே நடாத்தப்படவுள்ளது என தமிழ் மக்கள் பேரவையால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது,வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் சிவில் பிரதிநிதிகளையும் கல்விமான்களையும் அரசியல் தலைவர்களையும் உள்ளடக்கியதான தமிழ் மக்கள் பேரவை எனும் அமைப்பு கடந்த 24.09.2016 இல் ‘எழுக தமிழ்’ என்ற நிகழ்வொன்றை ...

Read More »

அரசியமைப்பு பேரவை: ஜனவரியில் 3 நாட்கள் விவாதம்

அரசியலமைப்பு பேரவை வழிநடத்தல் குழுவின் கீழுள்ள ஆறு உப-குழுக்களின் அறிக்கை நாடாளுமன்றத்தில், நேற்று சனிக்கிழமை சமர்ப்பிக்கப்பட்டது. இந்நிலையில், அந்த அறிக்கைகளின் மீதான விவாதம், 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9,10 மற்றும் 11ஆம் திகதிகளில் இடம்பெறும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இதேவேளை, அரசியலமைப்பு பேரவையின் வழிநடத்தல் குழுவின் அடுத்த கூட்டம் டிசெம்பர் மாதம் 10ஆம் திகதியன்று, நாடாளுமன்றத்தில் இடம்பெறும் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார். அரசியலமைப்பு பேரவை வழிநடத்தல் குழுவின் கீழுள்ள உப-குழுக்களின் அறிக்கையை சமர்ப்பித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ...

Read More »

சிறீலங்காவில் இடம்பெற்ற போர் உள்ளிட்ட ஐந்து முக்கிய விவகாரங்களில் இந்தியா

சிறீலங்காவில் இடம்பெற்ற போர் உள்ளிட்ட ஐந்து முக்கிய விவகாரங்களில் இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை முடிவுகள் தொடர்பான உள்ளகத் தகவல்களை உள்ளடக்கிய நூல் ஒன்றை, இந்தியாவின் முன்னாள் சிவசங்கர் மேனன் எழுதி வெளியிட்டுள்ளார். இந்தியாவின் வெளிவிவகாரச் செயலராக 2006ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டு வரை பதவி வகித்த சிவ்சங்கர் மேனன், அந்தப் பதவியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர், 2010 ஜனவரி தொடக்கம் 2014 மே மாதம் வரை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றியிருந்தார். இவர் இந்திய வெளிவிவகாரக் கொள்கை தொடர்பான முடிவுகளை எடுக்கும் செயல்முறைகள் ...

Read More »

சர்வதேச நீதிமன்றம் கோரி ஐ.நா.மனித உரிமை ஆணையாளருக்கு மகஜர்!

சர்வதேச நீதிமன்றம் கோரி அரச சார்பற்ற நிறுவனங்கள் மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்த சர்வதேச நீதவான்கள் அடங்கிய விசேட நீதிமன்றமொன்று நிறுவப்பட வேண்டுமென அரச சார்பற்ற நிறுவனங்கள் கோரியுள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்னிடம், இலங்கை அரச சார்பற்ற நிறுவனங்களின் 40 செயற்பாட்டாளர்கள் இரகசியமாக இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர். இராணுவப் படையினருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச நீதவான்கள் அடங்கிய விசேட நீதிமன்றமொன்று ...

Read More »

சிறீலங்காவில் வெள்ளைவான் கடத்தல்கள் தொடர்கின்றன! -ஐ.நா

சிறீலங்காவில் கடந்த ஆண்டு புதிய அரசாங்கம் பதவிக்கு வந்தாலும், இன்னமும் அங்கே வெள்ளைவான் கடத்தல்கள் தொடர்கின்றன என சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் துணைத் தலைவர் பெலிஸ் காயர் தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் நடைபெற்றுவரும் சித்திரவதைகளுக்கெதிரான ஐநாவின் 59ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ‘கடந்த ஆண்டிலும் வெள்ளை வான் கடத்தல்கள் இடம்பெற்றிருப்பதாக அரசசார்பற்ற நிறுவனங்கள், சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவுக்கு முறையிட்டுள்ளன. 2012இலிருந்து 2016ஒக்ரோபர் வரையான காலப்பகதியில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டோர் கடுமையான சித்திரவதைகளுக்குட்படுத்தப்பட்டமை தொடர்பாக காவல்துறையினருக்கு எதிராக 100 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் ...

Read More »

நெல்சிப் ஊழல் அறிக்கை முடக்கி வைக்கப்பட்டிருந்ததா?

வடமாகாணசபையில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடியான நெல்சிப் ஊழல் அறிக்கையினை சுமார் ஒருவருட காலம் மறைத்து வைத்திருந்து தற்போதே அதனை வெளியிட்டமை அம்பலமாகியுள்ளது. நெல்சிப் ஊழல் தொடர்பில் வடமாகாணசபை உறுப்பினர்கள் மூவரை கொண்ட குழுவொன்று 2015ம் ஆண்டின் பெப்ரவரி நியமிக்கப்பட்டிருந்த போதும் அதன் அறிக்கை அதே ஆண்டின் நவம்பர் மாதம் வடமாகாணசபை வசம் கையளிக்கப்பட்டிருந்ததாகத் தெரியவருகின்றது. இந்நிலையில் நெல்சிப் ஊழல்கள் தொடர்பில் வடமாகாண பிரதம செயலாளரால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவும் தனது அறிக்கையினை ஆளுநரிற்கு அனுப்பியுள்ளது. இதனிடையே வடமாகாணசபையால் நியமிக்கப்பட்ட குழுவினது அறிக்கையும் கிடைக்கப்பெற்று ஒருவருடம் ...

Read More »

எழுக தமிழை முடக்க முயற்சி! – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழ் மக்களின் பேரெழுச்சியுடன் கடந்த செப்டெம்பர் மாதம் 24 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற எழுக தமிழ் பேரணியினை தொடர்ச்சியாக மட்டகளப்பு மற்றும் வவுனியாவினில் நடத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தடுத்து நிறுத்தப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. எனினும் ஜனநாயக ரீதியாக தமது தரப்பு நியாயத்தை கூறி மக்கள் அணி திரள தயாரகவுள்ளனரோ அங்கே அரசியல் ரீதியாக அழுத்தத்தை பிரயோகிக்க முடியும் என்ற நிலைப்பாட்டை பேரவையின் முக்கிய தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலுக்குப் பின்னர் மிகவும் மோசமாக தமிழ் மக்கள் ஏமாற்றப்படுவதாக தெரிவித்துள்ள ...

Read More »

சிங்கள மேலாண்மைப் பார்வையில் டொனால்ட் ட்ரம்பின் வெற்றி!

அரசியல் கட்சி ரீதியாக மாறுபட்டிருப்பினும் மைத்திரியும் ரணிலும்கூட ராஜபக்சக்களின் இனத்துவ மனப்பாங்குக்கு வேறுபட்டவர்களாக இருக்க மாட்டார்கள். அமெரிக்க வல்லரசின் 45வது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் கடந்த 8ம் திகதி மக்கள் அளித்த வாக்குகளால் தெரிவானார். கருத்துக் கணிப்புகளையும், அரசியல் பகுப்பாய்வுகளையும், சர்வதேச ஊடகங்களின் ஆருடங்களையும் பொய்யாக்கி ஒரு சாதனை படைத்துள்ளார் ட்ரம்ப். அமெரிக்க அரசியலில் முன்னர் எந்தவொரு பதவியும் வகித்திராத இவர், ஜனாதிபதிப் பதவிக்கு வந்துள்ள முதலாவது கோடீஸ்வர வர்த்தகர் என்பது இன்னொரு சாதனை. தேர்தல் பரப்புரைக் காலத்தில் சர்ச்சைகளின் நாயகன் என்று ஊடகங்களால் ...

Read More »

விடிவு தேடி களமிறங்கி வீறுநடைபோட்டஓர் இளம் தலைவன் மாமனிதர் நடராஜா ரவிராஜ்!

நடராஜா ரவிராஜ் (ஆனி 25, 1962 – கார்த்திகை 10, 2006) சட்டத்தரணியும் யாழ்ப்பாண மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமாவார். வாழ்க்கைக் குறிப்பு யாழ்ப்பாணம் தென்மராட்சி சாவகச்சேரியை பிறப்பிடமாகக் கொண்ட ரவிராஜ் யாழ்ப்பாணம் டிறிபேர்க் கல்லூரி மற்றும் யாழ் பரி யோவான் கல்லூரிகளில் கல்வி கற்றார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் 1987 ஆம் ஆண்டு இலங்கையின் உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக பதிவு செய்தார் . ரவிராஜின் “ரவிராஜ் அசோசியேட்ஸ்” எனும் சட்ட நிறுவனமானது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழான வழக்குகள், ...

Read More »

அமெரிக்க அதிபர் ஆனார் டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலில், கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப், ஹிஅமெரிக்க அதிபர் தேர்தலில், கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப், ஹிலாரியை தோற்கடித்து அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.லாரியை தோற்கடித்து அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பல மாதங்களாக நடந்த பிரச்சாரத்தில் ஹிலரிக்கு ஆதரவாக தென்பட்ட பல முக்கிய ஊசல் நிலை மாநிலங்களில் பலவற்றை வென்றதன் மூலம் குடியரசுக் கட்சியை சேர்ந்த டொனால்ட் டிரம்ப்பின் வெற்றி உறுதியானது. ஃபுளோரிடா, ஒஹையோ, வடக்கு கரோலினா போன்ற கடும் போட்டி ...

Read More »