Tag Archives: ஆசிரியர்தெரிவு

”ரோ” மீது மைத்திரி குற்றசாட்டு! வதந்தியை பரப்பியது யார்?

சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை கொல்வதற்கான சதி முயற்சியில் ரோ ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார் என்ற வதந்தி பரவுவதற்கு சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச காரணமாகயிருக்கலாம் என இந்தியாவின் எகனமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது. சிறிலங்கா அரசாங்க வட்டாரங்களை மேற்கோள்காட்டி எகனமிக் டைம்ஸ் இதனை தெரிவித்துள்ளது. சிறிலங்கா ஜனாதிபதி தொடர்பான வதந்திகள் பரவுவதற்கு இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக மேற்கொண்டுள்ள முயற்சிகளே காரணமாகயிருக்கலாம் என எகனமிக் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது. இந்தியாவிற்கும் சிறிலங்காவின் தற்போதைய ஆட்சியாளர்களிற்கும் இடையில் உள்ள நல்லுறவை குழப்பும் முயற்சியாகவே ...

Read More »

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் எதிர்காலஅரசியல் நிலைப்பாடு என்ன?

தமிழ்மக்களின் தற்போதய பிரதிநிதித்துவ அரசியலானது மக்கள் பங்களிப்புடன் கூடிய ஒரு அரசியல் பயணமாக மாற்றமடைய வேண்டிய காலகட்டத்திலுள்ளது. இந்தமாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கிலும் தமிழ்மக்களின் அரசியல் அபிலாசைகளை அடைந்து கொள்வதற்கான வழித்தடம் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பிலும், இதில் தமிழ் மக்கள் பேரவையின் வகிபாகம் தொடர்பிலும் சிலதீர்மானங்களை மேற்கொள்ளும் மாபெரும் மக்கள் ஒன்று கூடல 24-10-2018 (புதன்கிழமை) அன்றுகாலை 9.30மணிக்கு யாழ்ப்பாணம் ; நல்லூர் ஆலய வடக்கு வீதியில அமைந்துள்ள நடராஜா பரமேஸ்வரி மண்டபத்தில நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் வடமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள்பேரவையின் இணைத் ...

Read More »

‘பேஸ்புக்’கின் வீடியோ கால் கருவிகள்!

‘அமேசான், கூகுள்’ போன்றவை, செயற்கை நுண்ணறிவு கொண்ட, ‘புத்திசாலி ஸ்பீக்கர்’களை அறிமுகப்படுத்தி, சந்தையை கலக்கி வருகின்றன. ஆனால், பேஸ்புக் இப்போது தான், ‘போர்ட்டல், போர்ட்டல் பிளஸ்’ என்ற இரண்டு கருவிகளை களமிறக்குகிறது. ஆனால், இந்த இரண்டும், ‘வீடியோ காலிங்’ வசதியை மேம்படுத்துவதற்காக மட்டுமே உருவாக்கப்பட்டவை. பேஸ்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே, இதை பயன்படுத்த முடியும். பேஸ்புக்கின் மெசஞ்சர் வசதியின் விரிவாக்கமாகவே, போர்ட்டல் கருவிகள் இருக்கும். ஒரு கருவி, 10 அங்குல திரையுடனும்; இன்னொன்று, 15 அங்குல திரையுடனும் உள்ளது. செயற்கை நுண்ணறிவு மென்பொருள் மூலம் ...

Read More »

சீனாவில் தெரு விளக்குகளுக்கு பதிலாக செயற்கை நிலவை செயல்படுத்த திட்டம்!

சீனாவில் தெரு விளக்குகளுக்கு பதிலாக செயற்கை நிலவை 2022-ம் ஆண்டுக்குள் அறிமுகப்படுத்த சீனா திட்டமிட்டுள்ளது. உலகில் உள்ள பெரும்பாலான பொருட்களுக்கு சீனாவில் டூப்ளிகேட் மாதிரிகள் உள்ளன. அந்த வகையில், சீனாவில் தெரு விளக்குகளுக்கு பதிலாக செயற்கை நிலவை உருவாக்கும் முயற்சியில் சீன விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இயற்கை நிலவு சூரியனிலிருந்து சக்தியை பெருவது போல, இந்த செயற்கை நிலவுகளுக்கு செயற்கை கோள்கள் மூலம் சக்தி கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. இதற்கான முதல் சோதனை வெற்றிகரமாக முடிவடைந்தால், 2022-ம் ஆண்டு இந்த செயற்கை நிலவுகள் அறிமுகப்படுத்தப்படும் என ...

Read More »

அவுஸ்திரேலியாவில் இந்து ஆலயம் ஒன்றின் மீது தாக்குதல்!

அவுஸ்திரேலியாவில் சிட்னி நகரில் உள்ள இந்து ஆலயம் ஒன்றின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக  ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன், ஆலயத்தில் உள்ளேயிருந்த சுமார் முப்பது கடவுள் சிலைகள் அடித்து உடைக்கப்பட்டுள்ளதாகவும், தாக்குதல் நடத்தியவர்கள் ஆலய சுவரில் JESUS என்று எழுதிவிட்டு சென்றுள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. கடந்த18 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிட்னி Regent Park பகுதியில் அமைந்துள்ள பாரதிய மந்திர் ஆலயமே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. முன்பு கிறிஸ்தவ தேவாலயமாக பயன்படுத்தப்பட்டுவந்த இந்த மண்டபம் ...

Read More »

விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிரான வழக்கு டிசம்பர் 07ம் திகதி!

தமிழீழ விடுதலைப் புலிகளின் கை மேலோங்க வேண்டும் என சர்ச்சைக்குறிய கருத்தை வௌியிட்ட விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிரான வழக்கை டிசம்பர் 07ம் திகதி மீண்டும் விசாரணைக்கு அழைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் இன்று இது தொடர்பான வழக்கு அழைக்கப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டு அனைத்து அறிக்கைகளும் சட்டமா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக திட்டமிட்ட குற்ற விசாரணைப் பிரிவு நீதிமன்றில் தெரிவித்துள்ளது. அதன்படி வழக்கை ஒத்திவைத்த நீதிமன்றம் அன்றைய ...

Read More »

வன்னி மாவட்டத்தில் புனர்வாழ்வுக் கடனுக்கான விண்ணப்பம் !

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வினியோகிக்கப்படும் சொத்தழிவு விண்ணப்பங்கள், பாதிக்கப்பட்ட வணக்கஸ்தலங்களை புனரமைப்பதற்கான விண்ணப்பங்கள் மற்றும் புனர்வாழ்வுக் கடன் வழங்கும் விண்ணப்பங்கள் ஆகியன புனர்வாழ்வு மீள்குடியேற்றம் வடக்கு அபிவிருத்தி அமைச்சின் கீழுள்ள புனர்வாழ்வு அதிகார சபையினால் தற்பொழுது வன்னி மாவட்டத்தில் பல இடங்களில் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.’ இப் படிவங்களை மாவட்டச் செயலகங்களில் செயற்படும் புனர்வாழ்வு அதிகாரசபை உத்தியோகத்தர்களிடமும் எனது மாவட்ட அலுவலகங்களிலும் இலவசமாக பெற்றுக் கொள்ள முடியும். அவ்வாறு தான் பாதிக்கப்பட்ட மக்களும் மேற்படி நிலையங்களிலிருந்து இப்படிவங்களை இலவசமாகவே பெற்று வருகின்றனர். இதே வேளையில் வன்னி ...

Read More »

சிறிலங்கா மாணவருக்கு எதிரான குற்றச்சாட்டை ஆஸி. காவல் துறை மீளப் பெற்றது!

ஆஸ்திரேலியாவில் பயங்கரவாதத்தாக்குதல்களை மேற்கொள்வதற்கு திட்டமிட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சிறிலங்கா மாணவர் நிஸாம்தீனுக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுக்களையும் ஆஸ்திரேலிய காவல் துறை வாபஸ் பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது ஆஸ்திரேலியாவின் முக்கிய இடங்களில் பயங்கரவாத தாக்குதல்களை மேற்கொள்வதற்கு திட்டமிட்டார் என்றும் முன்னாள் பிரதமர் Malcolm Turnbull உட்பட முக்கிய அரசியல் தலைவர்களை படுகொலை செய்வதற்கும் திட்டமிட்டிருந்தார் என்றும் குற்றச்சாட்டப்பட்டு கடந்த ஓக்ஸ்ட் மாதம் சிட்னியில் வைத்து கைது செய்யப்பட்ட சிறிலங்கா மாணவர் நிஸாம்தீன் உயர்பாதுகாப்பு சிறையில் தடுத்துவைக்கப்பட்டு ஆஸ்திரேலியாவின் பல்வேறு பாதுகாப்பு ஏஜென்ஸிகளினாலும் விசாரணைக்கு ...

Read More »

அவுஸ்திரேலியாவுக்கு ரகசியமாக கொண்டு வரப்பட்ட அகதிகள்!

நவுறு தடுப்பு முகாமிலுள்ள பல அகதிகளை இரகசியமாக அரசு, அவுஸ்திரேலியாவுக்கு கொண்டுவந்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது. குறித்த அகதிகள் தொடர்பில் பல அழுத்தங்களுக்கு முகம் கொடுத்துவரும் ஆளும் Morrison அரசு இந்த பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக இந்த இரகசிய நடவடிக்கையை முன்னெடுத்துள்ளாக கூறப்படுகிறது. நவுறு தீவில் உள்ள அகதிகளை நியூஸிலாந்து அரசு ஏற்றுக்கொள்வதாக தொடர்ந்து சம்மதம் தெரிவித்துள்ள நிலையில் அதனை அவுஸ்திரேலிய அரசு மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையிலேயே முக்கியமாக சிறுவர்கள் குழந்தைகளுடன் உள்ள குடும்பங்களை முதற்கட்டமாக ரகசியமாக அவுஸ்திரேலியாவுக்கு கொண்டுவந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...

Read More »

10 வயதில் சாதித்த பஞ்சாப் சிறுவன்!

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவன் அர்ஷ்தீப் சிங், இங்கிலாந்தின் நேச்சுரல் ஹிஸ்டரி அருங்காட்சியகம் நடத்திய போட்டியில் கலந்துகொண்டு `வைல்ட் லைஃப் போட்டோகிராபர் ஆஃப் தி இயர்’ விருதை வென்று சாதித்திருக்கிறார். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த போட்டோகிராபர் ரன்தீப் சிங் என்பவரின் மகனான அர்ஷ்தீப் சிங், தனது 6 வயதாக இருக்கும்போது கடந்த 2012-ம் ஆண்டு வைல்ட் லைஃப் போட்டோகிராபியைத் தொடங்கியிருக்கிறார். அவரது தந்தையான ரன்தீப் சிங்கும் போட்டோகிராபர் என்பதால், அவருடன் இணைந்து பல்வேறு பகுதிகளுக்கும் பயணித்து இயற்கை அழகைத் தனது கேமராவில் ...

Read More »