வன்னி மாவட்டத்தில் புனர்வாழ்வுக் கடனுக்கான விண்ணப்பம் !

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வினியோகிக்கப்படும் சொத்தழிவு விண்ணப்பங்கள், பாதிக்கப்பட்ட வணக்கஸ்தலங்களை புனரமைப்பதற்கான விண்ணப்பங்கள் மற்றும் புனர்வாழ்வுக் கடன் வழங்கும் விண்ணப்பங்கள் ஆகியன புனர்வாழ்வு மீள்குடியேற்றம் வடக்கு அபிவிருத்தி அமைச்சின் கீழுள்ள புனர்வாழ்வு அதிகார சபையினால் தற்பொழுது வன்னி மாவட்டத்தில் பல இடங்களில் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.’

இப் படிவங்களை மாவட்டச் செயலகங்களில் செயற்படும் புனர்வாழ்வு அதிகாரசபை உத்தியோகத்தர்களிடமும் எனது மாவட்ட அலுவலகங்களிலும் இலவசமாக பெற்றுக் கொள்ள முடியும்.

அவ்வாறு தான் பாதிக்கப்பட்ட மக்களும் மேற்படி நிலையங்களிலிருந்து இப்படிவங்களை இலவசமாகவே பெற்று வருகின்றனர்.

இதே வேளையில் வன்னி மாவட்டத்தில் இயங்கும் சில தீய சக்திகள் இப்படிவங்களை அதிகாரிகள் பணத்துக்கு வினியோகிப்பதாக பொய்யான வதந்தியொன்றை இட்டுக்கட்டி புனர்வாழ்வு அதிகார சபைக்கும், எமது அமைச்சுக்கும் கலங்கத்தை ஏற்படுத்த முனைந்துள்ளமை தெரிய வந்துள்ளது.

இது எமது அமைச்சுக்கு கலங்கத்தை உருவாக்க சிலர் மேற்க்கொண்ட சதி முயற்சி என்பது வெளிப்படையானதெனினும் இவ்வாறு அரசாங்க புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு எவரேனும் பணம் பெற முயற்சித்தால் உடனடியாக எனக்கோ அல்லது அருகிலுள்ள காவல் துறை நிலையத்திற்கோ அவசரமாக அறிவிக்கும்படி பணிவன்புடன் வேண்டுகிறேன் என மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.