தமிழ்மக்களின் தற்போதய பிரதிநிதித்துவ அரசியலானது மக்கள் பங்களிப்புடன் கூடிய ஒரு அரசியல் பயணமாக மாற்றமடைய வேண்டிய காலகட்டத்திலுள்ளது.
இந்தமாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கிலும் தமிழ்மக்களின் அரசியல் அபிலாசைகளை அடைந்து கொள்வதற்கான வழித்தடம் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பிலும், இதில் தமிழ் மக்கள் பேரவையின் வகிபாகம் தொடர்பிலும் சிலதீர்மானங்களை மேற்கொள்ளும் மாபெரும் மக்கள் ஒன்று கூடல 24-10-2018 (புதன்கிழமை) அன்றுகாலை 9.30மணிக்கு யாழ்ப்பாணம் ; நல்லூர் ஆலய வடக்கு வீதியில அமைந்துள்ள நடராஜா பரமேஸ்வரி மண்டபத்தில நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் வடமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள்பேரவையின் இணைத் தலைவருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் விசேட உரையாற்றவுள்ளதோடு தனது எதிர்காலஅரசியல் நிலைப்பாடு தொடர்பிலும் தமிழ்மக்களுக்கு அறிவிக்கவுள்ளார்.
சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் போருக்குப் பின்னரான தமிழ் சமூகத்தில் பிரதிநிதித்துவ அரசியல் மற்றும் மக்கள் அணிதிரள் அரசியல் ஆகியவற்றின் வகிபாகமும் தொடர்புறு நிலையும் என்றதலைப்பில் உரையாற்றுவார்.
மேற்படி ஒன்றுகூடலுக்கு அரசியல் வேறுபாடுகளைக் கடந்து பொதுமக்கள், பொது அமைப்புக்கள், தொழில் சங்கங்கள் கல்விச் சமுகத்தினர் ஊடகவியலாளர்கள் மற்றும் இளைஞர்- யுவதிகள், போன்ற அனைத்துத் தரப்பினரையும் கலந்து பங்களிக்குமாறு தமிழ் மக்கள் பேரவைஅழைப்புவிடுக்கின்றது.