யாழில், ஒருவரை கொலை செய்யும் திட்டத்துடன் செயற்பட்ட சந்தேகநபரை யாழ் குற்றத்தடுப்பு காவல் துறை பிரிவினர் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்ப்பட்ட நபர் பல்வேறு கொள்ளை மற்றும் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் என யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு காவல் துறையினர் தெரிவித்தனர் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வழிப்பறி, கொள்ளை மற்றும் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய 22 வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள நிலையில் குறித்த நபர் காவல் துறையால் தேடப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், குறித்த நபர் வவுனியாவில் ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு ஏற்பாட்டில் ஐ.நா. வில் கல்வி கருத்தரங்கம்
உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு மற்றும் ACCP இணைந்து, அடுத்த ஆண்டு 2021 ல் உயர் கல்விக்கான கல்வி கருத்தரங்கம் 2021 நடைபெறவுள்ளது. அந்நிகழ்வை முன்னிட்டு முதல் ஆலோசனை கூட்டம் இணைய வழியில் ZOOM ல் ஜூலை 18 சனிக்கிழமை இந்திய- இலங்கை நேரப்படி மாலை 6.00 மணி மற்றும் கனடா நேரம் காலை 8.30 மணி அளவில் நடைபெறவுள்ளது. அந்நிகழ்வில் தமிழக அரசு முதன்மை செயலாளர் ஜே.ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் மற்றும் வேந்தர் விஸ்வநாதன், பப்புவா நியூ கினியின் அமைச்சர் முத்துவேல் சசிதரன், ...
Read More »சுனில் ரத்நாயக்கவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு; எதிர்த்துத் தாக்கலான வழங்கு ஒத்திவைப்பு
மிருசுவிலில் 8 அப்பாவிகளைப் படுகொலை செய்த குற்றத்துக்காக மரணத ண்டனை விதிக்கப்பட்ட இராணுவச் சிப்பாயான சுனில் ரட்ணாயக்காவிற்கு ஜனாதிபதி மன்னிப்பளித்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நான்கு அடிப்படை உரிமை மீறல் வழக்கு இன்று உயர்நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டு, செப்டம்பர் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2000.12.19 ஆம் ஆண்டு மிருசுவிலில் பகுதியில் 5 வயதுச் சிறுவன் உள்ளிட்ட 4 சிறுவர்களும் 4 ஆண்களுமாக 8 பேரைப் படையினர் படுகொலை செய்த வழக்கில் ;ட்ரயல் அட் பார் விசாரணை மூலம் 2015 ஜூலையில் குற்றவாளி எனக் காணப்பட்டு ...
Read More »யாழ். பல்கலையின் விரிவுரையாளர் குருபரன் இராஜினாமா செய்தாரா?
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்ட முதுநிலை விரிவுரையாளர் குமாரவடிவேல் குருபரன் தமது பதவியிலிருந்து விலகுவதற்கான இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார். யாழ். பல்கலைக்கழகத்தின் தகுதிவாய்ந்த அதிகாரிக்கு, கலைப் பீடாதிபதி மற்றும் சட்டத்துறைத் தலைவர் ஊடாக அவர் இவ் இராஜினாமா கடிதத்தை இன்றையதினம் அனுப்பி வைத்துள்ளதாகப் பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்கலைக்கழக பேரவை அவரை சட்டத் தொழிலில் ஈடுபடுவதற்குத் தடை விதித்துள்ளமையை காரணமாகக் காட்டியே அவர் பதவி விலகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தன்னால் உயர் நீதிமன்றில் தொடரப்பட்டிருக்கும் வழக்கு பல்வேறு காரணங்களுக்காக விவாதத்திற்கு எடுக்கப்படாமல் ஒத்திவைக்கப் பட்டுக் கொண்டிருக்க ...
Read More »ஆஸ்திரேலிய கேளிக்கை விடுதியில் கொரோனா….!
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள Crossroads கேளிக்கை விடுதிக்கு சென்ற பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள சூழலில், வில்லாவுட் குடியேற்ற தடுப்பு முகாமில் பணியாற்றிய ஊழியர்கள் சுய-தனிமைப்படுத்தலில் இருப்பதாக அகதிகள் நல அமைப்பு ஒன்று தெரிவித்திருக்கிறது. இந்த நிலையில், இதை உறுதிப்படுத்தும் விதமாக கொரோனா பரவியதாகக் கூறப்படும் கேளிக்கை விடுதிக்கு சென்ற தடுப்பு முகாம் ஊழியர் தனிமைப்படுத்திக்கொண்டதாக ஆஸ்திரேலிய எல்லைப்படை தெரிவித்துள்ளது. “அண்மையில், விடுதிக்குச் சென்ற வில்லாவுட் ஊழியர்கள் நியூ சவுத் வேல்ஸ் சுகாதாரத்துறை அறிவுரையின்படி சுய-தனிமைப்படுத்தலில் இருக்கின்றனர்,” எல்லைப்படையின் பேச்சாளர் ...
Read More »கூட்டமைப்பை உடைப்பதற்கான ஆரம்ப புள்ளி விக்னேஸ்வரன்
வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் கட்சியை வன்னி நிலம் முற்றாக புறக்கணிக்கும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூடதமிழ் மக்களுக்கு செய்தது துரோகமே என அவர் தெரிவித்துள்ளார். எம்மை உடைப்பதற்கான ஆரம்பபுள்ளியாக விக்னேஸ்வரன் பாவிக்கமுற்பட்டுள்ளனர் என சிவமோகன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் பொருளாதார மத்தியநிலையம் இழுத்தடிக்கப்பட்டது,இறுதியில் அவரது கையில் விடப்பட்டவேளை அவர் சரியான தீர்வை முன்வைக்கவில்லை என சிவமோகன் தெரிவித்துள்ளார்.
Read More »யாழ்ப்பாணத்த்தில் போட்டியிடும் இரு வேட்பாளர்கள் ஒரே நாளில் மரணம்
பொதுத் தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் சுயேச்சைக் குழுவில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்கள் உயிரிழந்துள்ளனர். நேற்றைய தினத்திலேயே இவர்கள் இருவரும் உயிரிழந்ததாக யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து காரணமாக ஒருவரும் மாரடைப்பால் மற்றவரும் நேற்று புதன்கிழமை உயிரிழந்தனர். விடுதலைப் புலிகள் மக்கள் பேரவை சார்பாக சுயேச்சைக் குழு 14 இல் போட்டியிடும் வேட்பாளர் அகஸ்தீன் மக்டொனால்ட் என்ற 58 வயதுடைய நபர் மாரடைப்பால் காலமானார். கடந்த 8ஆம் திகதி பூநகரியில் இடம்பெற்ற டிப்பருடனான விபத்தில் சிக்கிச் சிகிக்சை பெற்றுவந்த பிரியதர்சன் என்ற சுயேச்சைச்குழு 3 ...
Read More »மரினாவை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி
தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு, 7 வயதில் இருந்து வளர்த்து வந்த வளர்ப்பு மகனை திருமணம் செய்து கொண்ட ரஷிய பெண், கர்ப்பிணியாக உள்ளார். ரஷியாவைச் சேர்ந்த பெண் மரினா பால்மாஷேவா. இவரை இன்ஸ்டாகிராமில் 4,20,000 பேர் பின்தொடர்கிறார்கள். கடந்த மே மாதம் 7 வயது சிறுவனுடன் இருக்கும் படத்தையும், அதன்பின் 20 வயதாகிய அந்த பையனை கட்டிப்பிடித்து நிற்பது போன்ற படத்தையும் வெளியிட்டிருந்தார். இன்ஸ்டாகிராமில் இந்த படத்திற்கு ஆதரவான கருத்து வரும் என்று அவர் நினைத்திருந்தார். ஆனால் எதிர்மறையான கருத்துகளே வந்தன. என்றாலும் ...
Read More »இராணுவத்தினரிடம் கைமாறும் சிவி்ல் நடவடிக்கைகள்
சாரதி அனுமதிப்பத்திரங்களை தயாரிக்கும் நடவடிக்கைகளை இராணுவத்தினரிடம் வழங்குவது அரசாங்கம் கவனம் செலுத்திவருகின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த வருடம் முதல் இந்த நடவடிக்கையை இராணுவத்தினரிடம் ஒப்படைப்பது குறித்து அரசாங்கம் ஆராயந்து வருகின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று இது குறித்;து விசேட கலந்துரையாடல் இடம்பெற்றதாக போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. வாகனசாரதி அனுமதிப்பத்திரமொன்றிற்காக 1340 ரூபாயை கட்டணமாக செலுத்தவேண்டியுள்ளது,வாகனச்சாரதி அனுமதிப்பத்திரத்தை தயாரித்து வழங்கும் நடவடிக்கையை வெளிநாட்டு நிறுவனமொன்றிடம் வழங்கியுள்ளதால் நாட்டுக்கு கிடைக்கவேண்டிய பணம் வெளிநாட்டுக்கு செல்கின்றது என நேற்றைய சந்திப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் ...
Read More »இளைஞர்கள் சிலர் மீது கொலைவெறித் தாக்குதல்
வேலணைவங்களாவடி பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஒரு கட்சியின் ஆதரவாளர்கள் அப்பகுதி இளைஞர்கள் சிலர் மீது கொலைவெறித் தாக்குதல் மேற்கொண்டதால் இருவர் கடுமையாக காயமடைந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று மாலை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது வங்களாவடி பகுதியில் பிரச்சர நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த குழுவினர், அப்பகுதியில் இருந்த சில இளைஞர்களை இடைமறித்து தமது துண்டுப்பிரசுரங்களை கொடுத்துள்ளனர். அதன்போது அவ் இளைஞர்கள் காராசரமாக கேள்விகளைத் தொடுத்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது கடும் வாக்குவாதமாக மாறி கைகலப்பு வரை சென்றுள்ளது. கோபமடைந்த குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்தவர்கள் ...
Read More »