சாரதி அனுமதிப்பத்திரங்களை தயாரிக்கும் நடவடிக்கைகளை இராணுவத்தினரிடம் வழங்குவது அரசாங்கம் கவனம் செலுத்திவருகின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடுத்த வருடம் முதல் இந்த நடவடிக்கையை இராணுவத்தினரிடம் ஒப்படைப்பது குறித்து அரசாங்கம் ஆராயந்து வருகின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று இது குறித்;து விசேட கலந்துரையாடல் இடம்பெற்றதாக போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.
வாகனசாரதி அனுமதிப்பத்திரமொன்றிற்காக 1340 ரூபாயை கட்டணமாக செலுத்தவேண்டியுள்ளது,வாகனச்சாரதி அனுமதிப்பத்திரத்தை தயாரித்து வழங்கும் நடவடிக்கையை வெளிநாட்டு நிறுவனமொன்றிடம் வழங்கியுள்ளதால் நாட்டுக்கு கிடைக்கவேண்டிய பணம் வெளிநாட்டுக்கு செல்கின்றது என நேற்றைய சந்திப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மிகக்குறைந்த செலவில் வாகனசாரதி அனுமதிப்பத்திரத்தினை இராணுவத்தினால் தயாரிக்க முடியும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ண தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இராணுவம் மற்றும் பாதுகாப்பு செயலாளருடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக போக்குவரத்து அமைச்சர் குழுவொன்றை நியமித்துள்ளார்.