பொதுத் தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் சுயேச்சைக் குழுவில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்கள் உயிரிழந்துள்ளனர். நேற்றைய தினத்திலேயே இவர்கள் இருவரும் உயிரிழந்ததாக யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து காரணமாக ஒருவரும் மாரடைப்பால் மற்றவரும் நேற்று புதன்கிழமை உயிரிழந்தனர்.
விடுதலைப் புலிகள் மக்கள் பேரவை சார்பாக சுயேச்சைக் குழு 14 இல் போட்டியிடும் வேட்பாளர் அகஸ்தீன் மக்டொனால்ட் என்ற 58 வயதுடைய நபர் மாரடைப்பால் காலமானார்.
கடந்த 8ஆம் திகதி பூநகரியில் இடம்பெற்ற டிப்பருடனான விபத்தில் சிக்கிச் சிகிக்சை பெற்றுவந்த பிரியதர்சன் என்ற சுயேச்சைச்குழு 3 இல் போட்டியிடும் வேட்பாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மற்றவராவார்.
Eelamurasu Australia Online News Portal