தாய்லந்திலிருந்து கடத்தி வரப்பட்ட 840 மில்லியன் டொலர் மதிப்புள்ள ‘Ice’ போதைப்பொருள் அவுஸ்திரேலியாவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்தப் போதைப்பொருள் ஒலிபெருக்கிகளுக்குள் மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது. மெல்பர்ன் துறைமுகத்துக்குள் கடத்தப்பட்ட அந்த ஒலிபெருக்கிகளில் 1.6 டன் ‘மெத்’தும் (meth) 37 கிலோகிராம் போதைமிகு அபினும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவுஸ்திரேலியாவில் பறிமுதல் செய்யப்பட்ட ஆக அதிக அளவு ‘மெத்’ இதுதான் என்று எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் கூறினர். X-ray எனப்படும் ஊடுகதிர்ச் சோதனையின்போது, வழக்கத்துக்கு மாறாக ஏதோ இருப்பதைப் பார்த்த அதிகாரிகள், ஒலிபெருக்கியைத் திறந்து பார்த்தபோது அதற்குள் ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
மல்வத்து தேரருடன் பேச்சு நடத்துவேன்!
முஸ்லிம் பிரதிநிதிகள் தொடர்பில் பௌத்தபீடங்களின் தேரர்கள் விடுத்துள்ள கோரிக்கையுடன் நாங்கள் இணைந்து கொள்கின்றோம். அவ்வாறு கோரிக்கை விடுத்தமைக்காக நன்றி தெரிவிக்கின்றோம். அத்துடன் மல்வத்து பீடத்தின் தேரர் நியங்கொட விஜிதசிறியை சந்தித்து இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்க்கின்றேன் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இன ரீதியில் நாங்கள் பிரிந்து செயற்படக்கூடாது. சுதந்திரத்தின் பின்னர் முஸ்லிம் பிரதிநிதிகளும் அங்கம் வகித்தனர். புலிகளின் யுத்த காலத்திலும் முஸ்லிம் அமைச்சர்கள் அங்கம் வகித்தனர் என்றும் அவர் குறிப்பிட்டார். நேற்று நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் ஆளும் கட்சி ...
Read More »சிறிலங்காவிற்கு உதவும் 20 அவுஸ்திரேலிய புலனாய்வாளர்கள்!
ஈஸ்டர் ஞாயிறு தீவிரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு உதவுவதற்காக அவுஸ்திரேலியா 20 புலனாய்வு நிபுணர்களை சிறிலங்காவிற்கு அனுப்பியிருப்பதாக, அந்த நாட்டின் உள்துறை அமைச்சர் பீற்றர் டட்டன் தெரிவித்தார். சிறிலங்காவிற்கு பயணம் மேற்கொண்டிருந்த அவர், செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பின்போதே இந்த தகவலை வெளியிட்டார். ”தீவிரவாத தாக்குதல்கள் குறித்த விசாரணையில் ஈடுபட்டுள்ள ஸ்ரீலங்கா புலனாய்வுக் குழுக்களுக்கு உதவுவதற்காக அவுஸ்திரேலியா 20இற்கும் அதிகமான புலனாய்வு அதிகாரிகளைக்கொண்ட குழுவொன்றை இங்கு அனுப்பியுள்ளது. அவர்கள் இப்போதும், இலங்கை அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக தடயவியல் பக்கத்தில் ...
Read More »அவுஸ்திரேலிய துப்பாக்கிதாரி யார்?
கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் டார்வின் பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் துப்பாக்கிதாரி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. டார்வினில் தாக்குதல் நடத்திய நபர் நகரத்தின் மதிப்புமிக்க குடும்பத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. அவர் சில நாட்களுக்கு முன்னர் தான் வேலைக்கு ஒழுங்காக சமூகமளிக்காத காரணத்திற்காக பணிநீக்கம் செய்யப்பட்டவர் என்றும் செய்திகள் தெரிவித்துள்ளன. குறிப்பிட்ட நபர் பணிநீக்கம் செய்யப்பட்டதை அடுத்து அவரது தாயார் வேலைத்தளத்துக்கு அழைப்பெடுத்து தனது மகனுக்கு இன்னொரு சந்தர்ப்பம் வழங்கி உதவுமாறு கெஞ்சியதாகவும் கூறப்படுகிறது. 45 வயதான குறிப்பிட்ட நபர் இந்த வருட ஆரம்பத்தில் ...
Read More »பார்வையற்ற தமிழ் அகதியை ஓன்பது வருடங்களாக தடுத்துவைத்துள்ளது அவுஸ்திரேலியா!
பார்வையற்ற மனோநிலை பாதிக்கப்பட்ட தமிழ் அகதியொருவரை ஒன்பது வருடங்களாக அவுஸ்திரேலியா தடுத்து வைத்திருப்பதற்கு தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள ஐநா குறிப்பிட்ட தமிழ் அகதியை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. ஐக்கியநாடுகளின் குழுவொன்று இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது. ஒரு தசாப்தகாலமாக சிறையில் வாடும் கண்பார்வையற்ற மனோநிலை பாதிக்கப்பட்ட தமிழ் அகதியை அவுஸ்திரேலியா உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என ஐநா தெரிவித்துள்ளது. ஒன்பது வருடங்களாக நபர் ஒருவரை தடுத்து வைத்திருப்பதன் மூலம் அவுஸ்திரேலியா சர்வதேச சட்டங்களை மீறியுள்ளது என ஐநா தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட ...
Read More »சிறப்பு தொழுகை நடத்த ஹபீஸ் சயீத்துக்கு அனுமதி மறுப்பு!
பாகிஸ்தானில் ஹபீஸ் சயீத் கடாபி மைதானத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடத்துவதற்கு அனுமதி கேட்டபோது அரசு மறுத்து விட்டது. மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்களில் 166 பேர் பலியாகினர். இந்த தாக்குதல்களுக்கு பின்னணியாக செயல்பட்டவர் ஹபீஸ் சயீத். ஜமாத்-உத்-தவா என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவரான ஹபீஸ் சயீத்துக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்தது. மேலும் அவரது பெயர் பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டது. தற்போது ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் வீட்டுக்காவலில் இருக்கிறார். ஹபீஸ் சயீத் கடந்த சில வருடங்களாக ரம்ஜான் ...
Read More »ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி பீல்டிங் தேர்வு!
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பீல்டிங்கைத் தேர்வு செய்தது. இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் 10-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வெஸ்ட் இண்டீஸ்சை எதிர்கொள்கிறது. இப்போட்டி நாட்டிங்காம் நகரில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இதையடுத்து ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்கிறது. ஆரோன் பிஞ்ச் , டேவிட் வார்னர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இப்போட்டியில் விளையாடும் இரு அணிகளின் வீரர்கள் விவரம் ...
Read More »அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முழு ஆதரவு!
ஐக்கிய தேசிய கட்சியின் முறையற்ற செயற்பாடுகளின் விளைவே இன்று அனைத்து தரப்பினருக்கும் தாக்கம் செலுத்துகின்றது என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முழுமையான ஆதரவு வழங்குவோம் என்றும் குறிப்பிட்டார். விஜயராம மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சி தலைவரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஒரு தனி நபரை இலக்கு வைத்து நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரவில்லை. ஐக்கிய தேசிய கட்சி ...
Read More »இராஜினாமா செய்தால் எனக்கு தூதுவர் பதவியை வழங்க சிறிசேன முன்வந்தார் !
உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகளிற்கு எனது தவறுகளே காரணம் என நான் ஒப்புக்கொண்டால் எனக்கு வெளிநாட்டு தூதுவர் பதவியை வழங்குவதற்கு சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வந்தார் என காவல் துறை மா அதிபர் பூஜித்ஜயசுந்தர தெரிவித்துள்ளார். உயிர்த்தஞாயிறு குண்டுவெடிப்புகள் குறித்து விசாரணை செய்யும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கையில் குண்டுவெடிப்புகளிற்கு எனது தவறே காரணம் என்பதை ஏற்றுக்கொண்டு நான் பதவியை இராஜினாமா செய்தால் எனக்கு தூதுவர் பதவியை வழங்க சிறிசேன முன்வந்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார். குண்டுவெடிப்புகளிற்கு எனது தவறே காரணம் என்பதை ஏற்றுக்கொண்டால் ...
Read More »அரசியல் செயற்பாடுகளைத் தீர்மானிக்கும் சக்தியாகப் பேரினவாதம்!
பேரினவாதம் என்பது ஏனைய சிறுபான்மை இனத்தவர்களை அடக்கியொடுக்குவதற்கான சக்தியாக இருந்துவந்துள்ள அதேவேளை, அதனை சில அரசியல்வாதிகள் தமது தனிப்பட்ட நலன்களுக்காகப் பயன்படுத்தி வந்தார்கள். தற்போது நாட்டின் அரசியல் செயற்பாடுகளைத் தீர்மானிக்கும் சக்தியாகப் பேரினவாதம் மாறியிருக்கிறது என்று அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்துள்ளார். இதுவிடயம் தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது : தற்போது நாட்டின் அரசியல் செயற்பாடுகளைத் தீர்மானிக்கும் சக்தியாகப் பேரினவாதம் மாறியிருக்கிறது. நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து அரசாங்கங்களை மாற்றியமைப்பதிலும், தீர்மானம் மேற்கொள்வதிலும் இந்தப் பேரினவாதத்தின் ஆதிக்கம் எப்போதும் ...
Read More »