சஹ்ரான் குறித்து பல இடங்களில் தேடி அவரை நெருங்கினோம். ஆனால் அவர் சூட்சுமமாக எம்மிடம் இருந்து தப்பித்துக்கொண்டார் என உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்தும் நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் குற்றப்புலனாய்வு பிரிவின் பதில் பணிப்பாளர் ஜகத் விசாந்த நேற்று சாட்சியமளித்தார். நாடாளுமன்ற கட்டட தொகுதியில் நேற்று நடைபெற்ற அமர்விலேயே அவர் இவ்வாறு சாட்சியமளித்தார். அவர் மேலும் சாட்சியமளிக்கையில், கேள்வி :- உங்களின் பதவி என்ன ? பதில் :- எஸ்.எஸ்.பி கேள்வி:- ரி.ஐ.ரி யினால் முஸ்லிம் அடிப்படைவாதம் குறித்து முதலில் ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
30ஆம் ஆண்டுகளை கடந்த வல்வை படுகொலை!
வல்வை படுகொலையின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை வல்வெட்டித்துறையில் நடைபெற்றது. கடந்த 1989 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 2 ஆம் திகதி வல்வெட்டித்துறையில் இருக்கும் ஊரிக்காடு, பொலிகண்டி இராணுவ முகாம்களிலிருந்து புறப்பட்ட இந்திய படைகள் அப்பாவி மக்கள் மீது தனது வெறியாட்டத்தினை வழைமை போல தொடங்கியது. ஒகஸ்ட் 2 ஆம் திகதி இச் சம்பவம் நடைபெற 3, 4 திகதிகளில் வல்வெட்டித்துறையிலும் அதைச் சூழ உள்ள பகுதிகளிலும் ஊரடங்கு சட்டத்தினை பிரகடனப்படுத்திவிட்டு வெறியாட்டம் ஆடினர். யாருமே வல்வெட்டிதுறைக்குள் போகவே, அங்கிருந்து ...
Read More »செலவீனங்களை வரி ஊடாக பெற விநோதமான விண்ணப்பங்கள்!
திருமணச்செலவு, குழந்தை பராமரிப்பு, பல்வைத்தியம் போன்ற – வரியில் மீளப்பெறமுடியாத செலவினங்களையெல்லாம் tax return ஊடாக மீளப்பெற்றுக்கொள்வதற்கு சுமார் ஏழு லட்சம் பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள் என்று ATO-ஆஸ்திரேலிய வரித்திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு தரவுகள் குறித்து வரித்திணைக்கள துணை ஆணையர் Karen Foat குறிப்பிடும்போது இந்த தகவலை கூறினார். கடந்த 2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2017 ஆம் ஆண்டு இவ்வாறு முறையற்ற கோரிக்கைகள் மேலும் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறுகிறார். Tax return விண்ணப்பங்களில் தமக்கு கிடைத்த விநோதமான சில சம்பவங்களை அவர் ...
Read More »மெல்பேர்னில் காணாமல்போன இலங்கை மாணவன்! 10 நாட்களாகியும் தகவலில்லை
மெல்பேர்னில் காணாமல்போயுள்ள இலங்கை மாணவன் தொடர்பிலான விவரங்கள் எதுவும் பத்துநாட்களுக்கு மேலாகியும் தெரியவராதநிலையில், இலங்கையிலிருந்து மெல்பேர்னுக்கு வந்துள்ள அவரது பெற்றோர் தங்களது மகனை யாராவது கண்டால் தமக்கு தகவல் தரும்படி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். மெல்பேர்ன் Deakin பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்பவியல் கற்கைநெறியை பயின்றுவந்த 21 வயதான Thidinika Prathibha Kulathunga Kulathunga Mudiyanselage என்ற இளைஞரே கடந்த சனிக்கிழமை முதல் இவ்வாறு காணாமல்போயிருப்பவர் ஆவார். மெல்பேர்ன் Craigieburn பகுதிக்கு வேலைக்கு சென்றுவிட்டு காரில் வந்துகொண்டிருக்கும்போது, தான் வீட்டுக்கு செல்வதாக தொலைபேசியில் பேசிய தகப்பனுக்கு தகவல் கூறியபிறகு, அவர் வீடு ...
Read More »கல்முனை விவகாரம் 10ஆம் திகதிக்குள் தீர்வு காணப்பட வேண்டும்!
கல்முனையில் நீண்டகாலமாக இழுபறி நிலையிலுள்ள நிர்வாக அலகுப் பிரச்சினைகளை எதிர்வரும் 10ஆம் திகதிக்குள் தீர்த்துக்கொள்வதற்கு முஸ்லிம் தரப்பும் தமிழ் தரப்பும் ஓர் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும். இந்த சந்தர்ப்பத்தை நாம் தவறவிட்டால், இதைப்போன்ற இன்னுமொரு சந்தர்ப்பம் நமக்கு கிடைக்காது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். கல்முனை பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் நோக்கில் நேற்று (31) நாடாளுமன்ற குழு அறையில் நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலின்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு கருத்து தெரிவித்த ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது; சாய்ந்தமருதுக்கு தனியான ...
Read More »சிறிலங்கா விமானநிலையத்தில் கைதி போல நடத்தப்பட்டேன்!
பாக்கிஸ்தானை சேர்ந்த சுற்றுலாப்பயணியொருவர் உரிய ஆவணங்களை வைத்திருந்த போதிலும் சிறிலங்கா அதிகாரிகள் தன்னை நாடு கடத்தியுள்ளனர் என தெரிவித்துள்ளார். பாக்கிஸ்தானை சேர்ந்த சுற்றுப்பயண காணொளி புளொக்கரான ஹஸ்னைன் மன்சூர் என்பவரே முகநூலில் சிறிலங்காவில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தினை பதிவு செய்துள்ளார். பாக்கிஸ்தானை சேர்ந்த 2000ற்கும் அதிகமானவர்கள் சுற்றுலாப்பயண விசாவில் இலங்கை வந்து அடைக்கலம் கோரியுள்ளனர் என தெரிவித்த சிறிலங்கா அதிகாரிகள் தன்னை திருப்பியனுப்பினர் என தெரிவித்துள்ளார். அதிகாரிகள் தன்னை மலேசியா செல்லும் விமானத்தில் அனுப்பபோவதாக தெரிவித்தனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சிறிலங்காவில் தங்கியிருப்பதற்கான அனைத்து ...
Read More »ரஷியாவில் பயங்கர காட்டுத்தீ : அவசரநிலை பிரகடனம்
ரஷியாவில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத்தீ காரணமாக பல்லாயிரக்கனக்கான ஏக்கர் நிலப்பரப்புகளில் உள்ள மரங்கள் தீக்கிரையாகின. ரஷிய நாட்டின் சைபீரியா மாகாணத்தில் கிராஸ்னோயார்க் பகுதி அமைந்துள்ளது. இங்கு கடந்த சில நாட்களாக பயங்கர காட்டுத்தீ பரவி வருகிறது. தொடர்ந்து பரவி வரும் இந்த தீயால் 6.7 மில்லியன் ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு நாசமாகி உள்ளது. அங்கு நிலவி வரும் வறண்ட வானிலை மற்றும் வேகமாக வீசி வரும் காற்றால் இந்த காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. இதனால் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு அந்த பகுதிகளில் வாழும் மக்கள் ...
Read More »இங்கிலாந்து-ஆஸ்திரேலியா ஆஷஸ் கோப்பையை வெல்லப் போவது யார்?
ஆஷஸ் கோப்பை முதல் டெஸ்ட் நாளை தொடங்குகிறது இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் டெஸ்ட் கோப்பை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. 5 டெஸ்ட் கொண்ட இந்த தொடரில் முதல் டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடராகவும் கணக்கில் கொள்ளப்படுகிறது. 2001-ம் ஆண்டுக்கு பிறகு இங்கிலாந்து மண்ணில் ஆஸ்திரேலிய அணி ஆஷஸ் கோப்பையை வென்றது இல்லை. ...
Read More »தாமரை மொட்டின் ஆட்சி மலரும் என்கிறார் பஸில்!
“தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவுடன் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான ஆட்சி விரைவில் மலரும்.” என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பிரதான அமைப்பாளருமான பஸில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் இன்று மேலும் தெரிவித்துள்ளதாவது:- “நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலிலும் அதன் பின்னர் இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலிலும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார்பில் தரமான – தகுதியான வேட்பாளர்களே போட்டியிடுவார்கள். இரண்டு தேர்தல்களிலும் எமது கட்சியே வெற்றி பெறும். அது இப்போதே நிர்ணயிக்கப்பட்டுவிட்டது. இந்த இரண்டு தேர்தல்களிலும் சிங்கள ...
Read More »புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பின் வேட்பாளர் யார் ?
பங்காளி கட்சிகளுடன் ஆகஸ்ட் 5 ஆம் திகதி புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட்டவுடன் வேட்பாளர் யார் என்பதை அறிவிப்போம் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய முன்னணியின் புதிய கூட்டணி தொடர்பில் தெரிவிக்கையிலேயே அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இவ்வாறு தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சி ஏனைய பல்வேறு கட்சிகளும் இணைந்து அமைக்கவுள்ள கூட்டணியில் கைசாத்திடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. அனைத்து மத குருமார்களினதும் ஆசீர்வாதத்துடன் இந்த கூட்டணி அமைக்கப்படவுள்ளது. இந்த கூட்டணியில் பாராளுமன்ற உறுப்பினர்கள், ...
Read More »