பங்காளி கட்சிகளுடன் ஆகஸ்ட் 5 ஆம் திகதி புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட்டவுடன் வேட்பாளர் யார் என்பதை அறிவிப்போம் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய முன்னணியின் புதிய கூட்டணி தொடர்பில் தெரிவிக்கையிலேயே அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இவ்வாறு தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சி ஏனைய பல்வேறு கட்சிகளும் இணைந்து அமைக்கவுள்ள கூட்டணியில் கைசாத்திடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. அனைத்து மத குருமார்களினதும் ஆசீர்வாதத்துடன் இந்த கூட்டணி அமைக்கப்படவுள்ளது. இந்த கூட்டணியில் பாராளுமன்ற உறுப்பினர்கள், தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதானிகள் என்று அனைவரும் உள்ளடங்குவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.