மெல்பேர்னில் காணாமல்போன இலங்கை மாணவன்! 10 நாட்களாகியும் தகவலில்லை

மெல்பேர்னில் காணாமல்போயுள்ள இலங்கை மாணவன் தொடர்பிலான விவரங்கள் எதுவும் பத்துநாட்களுக்கு மேலாகியும் தெரியவராதநிலையில், இலங்கையிலிருந்து மெல்பேர்னுக்கு வந்துள்ள அவரது பெற்றோர் தங்களது மகனை யாராவது கண்டால் தமக்கு தகவல் தரும்படி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மெல்பேர்ன் Deakin பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்பவியல் கற்கைநெறியை பயின்றுவந்த 21 வயதான Thidinika Prathibha Kulathunga Kulathunga Mudiyanselage என்ற இளைஞரே கடந்த சனிக்கிழமை முதல் இவ்வாறு காணாமல்போயிருப்பவர் ஆவார்.

மெல்பேர்ன் Craigieburn பகுதிக்கு வேலைக்கு சென்றுவிட்டு காரில் வந்துகொண்டிருக்கும்போது, தான் வீட்டுக்கு செல்வதாக தொலைபேசியில் பேசிய தகப்பனுக்கு தகவல் கூறியபிறகு, அவர் வீடு வந்து சேரவில்லை என்று கூறப்படுகிறது.அதற்குப்பிறகு அவருக்கு என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியவில்லை.

பொலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து, பொலீஸார் தமது தேடுதல் பணியை முன்னெடுத்துள்ளார்கள். தகவல் தெரிந்தவர்கள் தங்களை தொடர்புகொள்ளும்படி பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இவர்பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 9566 1555 என்ற இலக்கத்தில் தொடர்புகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.