19 ஆவது திருத்தத்தின் மீது கைவைத்துள்ளமை ஜனநாயகத்தின் மரண பொறியாகவே அமைகிறது. தனிநபருக்கான அதிகாரத்தை பாராளுமன்றத்திற்கும் மக்களுக்குமாக 19 ஆவது திருத்தம் பகிர்ந்தளித்தது. நிறைவேற்று அதிகாரம் முழுமையாக இல்லாது ஒழிக்கப்பட்டால் இங்கு பிரச்னை ஏற்படாது. ஆனால், 2015 ஆம் ஆண்டிற்கு முன்னரான காலப்பகுதியை போன்று தனி நபருக்கு அதி கூடிய அதிகாரம் எனும் போது அதற்கு மக்கள் ஆணை கிடையாது. இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சிறிகொத்தாவில் கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய போதே அவர் இதனைக் ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
விடுதலைப் புலிகளை தீவிரவாத பட்டியலில் இருந்து நீக்கலாம்!-மலேஷிய பிரதமர்
தீவிரவாத இயக்கங்களின் பட்டியலில் இருந்து விடுதலைப்புலிகள் இயக்கத்தை நீக்குமாறு தமது அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்த மொகிதின் யாசினுக்கு இந்த ஆண்டின் துவக்கத்தில் தாம் கடிதம் எழுதியதாக மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் மொகமட் தெரிவித்துள்ளார். தாம் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரிக்கவில்லை என்றாலும், தீவிரவாத இயக்கங்களின் பட்டியலில் இருந்து அந்த இயக்கத்தை நீக்குவது மலேசியாவுக்கு நல்லது என்றும் புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர் தெளிவுபடுத்தினார். அதேசமயம் பிற நாடுகளைப் போல் மலேசியாவும் எந்தவொரு குழுவையும் தீவிரவாதிகள் என்று சுலபமாக முத்திரை ...
Read More »எச்சரிக்கையுடன் இருக்குமாறு உலகநாடுகளுக்கு அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை!
கொழும்பில் துறைமுகநகரை நிர்மாணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சிசிசிசி நிறுவனத்துடன் தொடர்புகளை பேணுவது குறித்து நாடுகள் அவதானமாகயிருக்கவேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. அமெரிக்க தூதரகம் மேலும் தெரிவித்துள்ளதாவது- ஆகஸ்ட் 26ம் திகதி அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தென்சீனா கடற்பரப்பில் கட்டுமானப்பணிகள் மற்றும் இராணுவமயப்படுத்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சீன பிரஜைகளுக்கு எதிராகவும், கடலோர வளங்களை பயன்படுத்துவதற்கான உரிமையை கோரிய தென்கிழக்காசிய நாடுகளுக்கு எதிராக பலவந்தத்தை பயன்படுத்தியவர்களுக்கு எதிராகவும் விசா தடையை விதித்துள்ளது. இந்த தனிநபர்கள் எதிர்காலத்தில் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் . அவர்களினது ...
Read More »இங்கிலாந்து – ஆஸ்திரேலியா மோதும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி
இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் இன்று நடக்கிறது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை வெற்றிகரமாக நடத்திக் கொண்டு இருக்கிறது. ஸ்டேடியத்தில் ரசிகர்களை அனுமதிக்காமல் கொரோனா தடுப்பு உயிர் மருத்துவ பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி ஒவ்வொரு போட்டிகளும் நடத்தப்படுகிறது. அயர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் அணிகளைத் தொடர்ந்து இப்போது ஆஸ்திரேலிய அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக அங்கு பயணித்துள்ளது. இதன்படி ...
Read More »இலங்கை உட்பட பல நாடுகளில் சீனா இராணுவதளங்களை உருவாக்க முயற்சி
இலங்கை உட்பட பல நாடுகளில் சீனா இராணுவதளங்களை உருவாக்க முயல்கின்றது என பென்டகன் குற்றம்சாட்டியுள்ளது, சீனா வலுவான வெளிநாட்டு விநியோக தள உட்கட்டமைப்புகளை உருவாக்க முயல்கின்றது என தெரிவித்துள்ள பென்டகன் தொலைதூரங்களில் சீனா இராணுவத்தின் வல்லமையை வெளிப்படுத்துவதும் அதனை தக்கவைப்பதுமே இந்த நடவடிக்கையின் நோக்கம் என தெரிவித்துள்ளது. மியன்மார் தாய்லாந்து சிங்கப்பூர் இலங்கை பாக்கிஸ்தான் உட்பட பல நாடுகளில் சீனா தனது இராணுவ உட்கட்டமைப்புகளை உருவாக்க முயலக்கூடும் என பென்டகன் தெரிவித்துள்ளது. சீனா தனது முப்படைக்களுக்காக மேலதிக இராணுவவிநியோக உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து ஏற்கனவே ...
Read More »கனடாவில் ஈழத்து இளைஞர் படகு விபத்தில் பலி!
கனடா ரொரன்ரோவில் வூட்பைன் பீச்சில் நேற்று வியாழக்கிழமை மதியம் 12:30 மணியளவில் படகு ஒன்று விபத்துக்கு உள்ளான போது வல்வெட்டித்துறை தீருவிலையைச் சேர்ந்த இலங்கைகொன் பல்லவநம்பி (46வயது) என்பவர் மிகவும் பரிதாபமாக பலியாகியுள்ளார். இவர் 3 பிள்ளைகளின் தந்தை எனவும் அறியப்படுகிறது. இச்சம்பவத்தின் போது 7 தமிழர்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் மூவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனைய மூவர் படகிலிருந்து தூக்கியெறியப்பட்டு நீந்தி கரைசேர்ந்துள்ளனர். சம்பவம் நடைபெற்றதும் உடனடியாக காவல் துறையினரும் , மருத்துவ அவசரஉதவியும் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சென்றதாகவும், மேலும் ...
Read More »பதவியை இராஜினாமா செய்வதற்கு துரைராஜசிங்கம் தீர்மானம்
தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்வதற்கு கி.துரைராஜசிங்கம் தீர்மானித்திருப்பதாக அவருடன் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. பொதுத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி, தேசியப் பட்டியல் விவகாரம் போன்றவற்றால் அவர் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவின் கூட்டத்திலும் அவர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டது. தமிழரசுக் கட்சியின் பொதுச் சபையைக் கூட்டி அவரைப் பதவிநீக்கம் செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்தப் பின்னணியில் அவர் பதவியை இராஜினாமா செய்யலாம் என சில தகவல்கள் வெளிவந்துள்ளன.
Read More »19ஆவது திருத்தத்தில் இடம்பெற்றுள்ள விடயங்கள் என்ன?
நேற்று (3) வெளியாகியுள்ள 20வது திருத்தத்தின் நகல்வடிவில் 19வது திருத்தத்தில் இடம்பெற்றிருந்த பல விடயங்கள் நீக்கப்பட்டுள்ளன. இரட்டை பிரஜாவுரிமையை உடையவர்கள் நாடாளுமன்றத்துக்கு செல்வதை தடை செய்யும் விதத்தில் 19வது திருத்தத்தில் காணப்பட்ட ஏற்பாடுகள் 20வது திருத்தத்தின் நகல்வடிவில் நீக்கப்பட்டுள்ளன . ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு ஒருவருக்கு இருக்கவேண்டிய வயதெல்லை குறைக்கப்பட்டுள்ளது . 30வயதுக்கு மேற்பட்ட எவரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடலாம். அரசாங்கமொன்றில் 30 அமைச்சுகளே காணப்படலாம் என்ற கட்டுப்பாடும் நீக்கப்பட்டுள்ளது. ஒரு வருடகாலத்தின் பின்னர் ஜனாதிபதி நினைத்தால் நாடாளுமன்றத்தை கலைக்கலாம் என நகல்வடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
Read More »கலாநிதி சர்வேஸ்வரன், பேராசிரியை நஜீமா அடங்கிய புதிய அரசியலமைப்பிற்கான நிபுணர் குழு
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நிபுணர் குழு அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவிற்கான நிபுணர்களை நியமிப்பது தொடர்பில் நேற்று(02.09.2020) இடம்பெற்ற அமைச்சரவையில் பிரஸ்தாபிக்கப்பட்ட நிலையில், நிபுணர் குழுவில் தமிழ் முஸ்லீம் மக்களின் உணர்வுகளையும் அபிலாசைகளையும் பிரதிபலிக்கும் வகையில் நிபுணர்கள் உள்வாங்கப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில், அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவில் கலாநிதி ஏ. சர்வேஸ்வரன் மற்றும் பேராசிரியை நஜீமா கமுறுடீன் ஆகியோர் அடங்கிய 9 பேர் அடங்கிய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவினர் இலங்கையில் வாழுகின்ற பல்லின சமூகங்களினதும் அபிலாசைகளையும் ...
Read More »ஆஸ்திரேலியர்களை முகநூல் நிறுவனம் மிரட்டியுள்ளது!
ஆஸ்திரேலியர்கள், தனது தளத்தில் செய்திகளைப் பகிர்ந்துகொள்வதைத் தடை செய்யப்போவதாக முகநூல் நிறுவனம் மிரட்டியுள்ளது. ஆஸ்திரேலிய அரசாங்கம் பரிந்துரைத்துள்ள புதிய ஊடக சட்டத்தின் தொடர்பில் முகநூல் அவ்வாறு தெரிவித்துள்ளது. பரிந்துரைக்கப்பட்டுள்ள புதிய சட்டத்தின்படி, உள்ளூர் செய்தி நிறுவனங்களின் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியை, தொழில்நுட்ப நிறுவனங்கள், ஆஸ்திரேலிய அரசாங்கத்துடன் பகிர்ந்து கொள்ள வேண்டி வரலாம். இணைய விளம்பரங்களின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் பெரும்பகுதியைத் தொழில்நுட்ப நிறுவனங்களே எடுத்துக்கொள்வதாகக் குற்றஞ்சாட்டப்டுகிறது. இந்நிலையில், ஆஸ்திரேலியா பரிந்துரைத்துள்ள புதிய சட்டத்தின் மீது உலக நாடுகளின் ...
Read More »