நேற்று (3) வெளியாகியுள்ள 20வது திருத்தத்தின் நகல்வடிவில் 19வது திருத்தத்தில் இடம்பெற்றிருந்த பல விடயங்கள் நீக்கப்பட்டுள்ளன.
இரட்டை பிரஜாவுரிமையை உடையவர்கள் நாடாளுமன்றத்துக்கு செல்வதை தடை செய்யும் விதத்தில் 19வது திருத்தத்தில் காணப்பட்ட ஏற்பாடுகள் 20வது திருத்தத்தின் நகல்வடிவில் நீக்கப்பட்டுள்ளன .
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு ஒருவருக்கு இருக்கவேண்டிய வயதெல்லை குறைக்கப்பட்டுள்ளது .
30வயதுக்கு மேற்பட்ட எவரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடலாம்.
அரசாங்கமொன்றில் 30 அமைச்சுகளே காணப்படலாம் என்ற கட்டுப்பாடும் நீக்கப்பட்டுள்ளது.
ஒரு வருடகாலத்தின் பின்னர் ஜனாதிபதி நினைத்தால் நாடாளுமன்றத்தை கலைக்கலாம் என நகல்வடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
19வது திருத்தத்தில் நான்கரை வருடங்களின் பின்னரே நாடாளுமன்றத்தை கலைக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிரதமரை பதவி வகிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் அரசமைப்பு பேரவை என்பது நாடாளுமன்ற பேரவை என பெயர் மாற்றப்பட்டுள்ளது.
Eelamurasu Australia Online News Portal