புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நிபுணர் குழு அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ளது.
குறித்த குழுவிற்கான நிபுணர்களை நியமிப்பது தொடர்பில் நேற்று(02.09.2020) இடம்பெற்ற அமைச்சரவையில் பிரஸ்தாபிக்கப்பட்ட நிலையில், நிபுணர் குழுவில் தமிழ் முஸ்லீம் மக்களின் உணர்வுகளையும் அபிலாசைகளையும் பிரதிபலிக்கும் வகையில் நிபுணர்கள் உள்வாங்கப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில், அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவில் கலாநிதி ஏ. சர்வேஸ்வரன் மற்றும் பேராசிரியை நஜீமா கமுறுடீன் ஆகியோர் அடங்கிய 9 பேர் அடங்கிய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த குழுவினர் இலங்கையில் வாழுகின்ற பல்லின சமூகங்களினதும் அபிலாசைகளையும் காலாச்சார பண்பாடுகளையும் கருத்திலெடுத்து நாட்டின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு உகந்த அரசியலமைப்பை உருவாக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal