தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்வதற்கு கி.துரைராஜசிங்கம் தீர்மானித்திருப்பதாக அவருடன் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.
பொதுத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி, தேசியப் பட்டியல் விவகாரம் போன்றவற்றால் அவர் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவின் கூட்டத்திலும் அவர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டது.
தமிழரசுக் கட்சியின் பொதுச் சபையைக் கூட்டி அவரைப் பதவிநீக்கம் செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்தப் பின்னணியில் அவர் பதவியை இராஜினாமா செய்யலாம் என சில தகவல்கள் வெளிவந்துள்ளன.
Eelamurasu Australia Online News Portal