ஆஸ்திரேலியர்கள், தனது தளத்தில் செய்திகளைப் பகிர்ந்துகொள்வதைத் தடை செய்யப்போவதாக முகநூல் நிறுவனம் மிரட்டியுள்ளது.
ஆஸ்திரேலிய அரசாங்கம் பரிந்துரைத்துள்ள புதிய ஊடக சட்டத்தின் தொடர்பில் முகநூல் அவ்வாறு தெரிவித்துள்ளது.
பரிந்துரைக்கப்பட்டுள்ள புதிய சட்டத்தின்படி, உள்ளூர் செய்தி நிறுவனங்களின் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியை, தொழில்நுட்ப நிறுவனங்கள், ஆஸ்திரேலிய அரசாங்கத்துடன் பகிர்ந்து கொள்ள வேண்டி வரலாம்.
இணைய விளம்பரங்களின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் பெரும்பகுதியைத் தொழில்நுட்ப நிறுவனங்களே எடுத்துக்கொள்வதாகக் குற்றஞ்சாட்டப்டுகிறது. இந்நிலையில், ஆஸ்திரேலியா பரிந்துரைத்துள்ள புதிய சட்டத்தின் மீது உலக நாடுகளின் கவனம் குவிந்துள்ளது.