இலங்கை உட்பட பல நாடுகளில் சீனா இராணுவதளங்களை உருவாக்க முயல்கின்றது என பென்டகன் குற்றம்சாட்டியுள்ளது,
சீனா வலுவான வெளிநாட்டு விநியோக தள உட்கட்டமைப்புகளை உருவாக்க முயல்கின்றது என தெரிவித்துள்ள பென்டகன் தொலைதூரங்களில் சீனா இராணுவத்தின் வல்லமையை வெளிப்படுத்துவதும் அதனை தக்கவைப்பதுமே இந்த நடவடிக்கையின் நோக்கம் என தெரிவித்துள்ளது.
மியன்மார் தாய்லாந்து சிங்கப்பூர் இலங்கை பாக்கிஸ்தான் உட்பட பல நாடுகளில் சீனா தனது இராணுவ உட்கட்டமைப்புகளை உருவாக்க முயலக்கூடும் என பென்டகன் தெரிவித்துள்ளது.
சீனா தனது முப்படைக்களுக்காக மேலதிக இராணுவவிநியோக உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து ஏற்கனவே ஆராய்ந்து வருகின்றது என பென்டகன் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக அமெரிக்காவின் இராணுவநடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படலாம் என பென்டகன் தெரிவித்துள்ளது.