பாகிஸ்தான் நாட்டின் நாடாளுமன்றம் வரும் 13-ம் திகதி கூடுகிறது. அன்றைய தினம் புதிதாக தேர்வான எம்.பி.க்கள் பதவி ஏற்கின்றனர். பிரதமராக இம்ரான் கான் 18-ம் திகதி பதவி ஏற்று கொள்கிறார். பாகிஸ்தான் நாடாளுன்றத்துக்கு கடந்த 25-ம் தேதி நடந்த தேர்தலில் 116 தொகுதிகளில் இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி வெற்றி பெற்றது. முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி 64 தொகுதிகளிலும், மறைந்த முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
வெடுக்குநாறி மலைக்கு மக்கள் செல்ல தடை!
நெடுங்கேணி- ஒலுமடு பகுதியில் உள்ள வெடுக்குநாறி மலைக்கு மக்கள் செல்லகூடாது என கூறியிருக்கும் தொல்லியல் திணைக்களம், மீறி சென்றால் கைது செய்யப்படுவீர்கள் என நெடுங்கேணி காவல் துறை ஊடாக கூறியிருக்கின்றது. இது குறித்து நெடுங்கேணி பிரதேச சபை உறுப்பினர் துரைராசா தமிழ்செல்வன் ஊடகங்களுக்கு தகவல் தருகையில், வெடுக்குநாறி மலையையும், அங்குள்ள ஆதி ஐயனார் ஆலயம் மற்றும் அதனை சூழவுள்ள காட்டுப்பகுதியை நெடுங்கேணி பிரதேச மக்கள் மிக நீண்டகாலமாக பாதுகாத்து வந்துள்ளனர். குறிப்பாக 2014 ஆம் ஆண்டு வெடுக்குநாறி மலையை உடைத்து கருங்கல் அகழ்வதற்காக சிலர் ...
Read More »சம்பந்தன் தொடர்ந்தும் எதிர்க்கட்சித் தலைவராக செயற்படுவார்!
நாடாளுமன்ற சம்பிரதாயத்துக்கமைய, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தொடர்ந்தும் எதிர்க்கட்சித் தலைவராக செயற்படுவார் என, சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரை மாற்றுவதற்கான அதிகாரம், அரசமைப்பிலோ மற்றும் சம்பிரதாயத்தின் பிரகாரமோ அதிகாரமில்லையென, சபாநாயகர் கருஜயசூரிய, சபைக்கு அறிவித்தார். நாடாளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில், இன்று (10) கூடியது. இதன்போது சபாநாயகர் அறிவிப்பின் போதே மேற்கண்டவாறு அறிவிப்பு விடுக்கப்பட்டது.
Read More »குழந்தைகள் பலி! – விசாரணைக்கு ஐநா வலியுறுத்தல்!
ஏமன் நாட்டில் சவுதி கூட்டுப்படையினர் நடத்திய விமான தாக்குதலில் அப்பாவி குழந்தைகள் கொல்லப்பட்டது குறித்து ஐநா சபை விசாரணை நடத்த ஆணையிட்டுள்ளது. ஏமன் நாட்டின் அரசுக்கு எதிராக ஈரானின் ஆதரவுடன் உள்நாட்டு ஹவுதி புரட்சிப் படையினர் கடந்த இரண்டாண்டுகளாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் சனா உள்பட பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து அந்த பகுதிகளை சுற்றி சோதனைச் சாவடிகள் அமைத்துள்ளனர். சர்வதேச ஆதரவு பெற்றுள்ள ஏமன் அரசுக்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் ஆதரவு அளித்து வருகின்றன. அவர்கள் ...
Read More »அவுஸ்திரேலியாவில் புகலிடம் நிராகரிக்கப்பட்டவர்களை விமானத்தில் ஏற்ற வேண்டாம்!
அவுஸ்திரேலியாவில் புகலிடம் நிராகரிக்கப்பட்டவர்கள் திருப்பி அனுப்பப்படும்போது அவர்களை Qantas மற்றும் Virgin விமான நிறுவனங்கள் தமது விமானத்தில் ஏற்றுவதற்கு மறுப்புத் தெரிவிக்க வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது. குறித்த விமானங்கள் ஒப்புதல் வழங்கக் கூடாது என வலியுறுத்தும் கடிதம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதில் 60 ற்கும் மேற்பட்ட மனித உரிமை அமைப்புகள், தொழிற்சங்கங்கள், அகதிகள் அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் போன்றவற்றின் கையொப்பங்களுடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. லண்டனில் சட்டவிரோதமாக குடியேறிவர்களை நாடுகடத்தும் செயற்பாட்டிற்கு தமது நிறுவனம் துணைபோகாது என கடந்த ஜுன் மாதம் Virgin Atlantic அறிவித்திருந்தது. அதேபோன்று அமெரிக்காவின் ...
Read More »அதர்வாவின் `குருதி ஆட்டம்’!
`குருதி ஆட்டம்’ படத்தில் அதர்வா கதாநாயகனாக நடிக்கிறார். கடந்த வருடம் (2017) வெளிவந்த படங்களில், பெரிதும் பாராட்டப்பட்ட படம், `8 தோட்டாக்கள்.’ இந்த படத்தின் டைரக்டர் ஸ்ரீகணேஷ். இவருடைய அடுத்த படத்துக்கு, `குருதி ஆட்டம்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார். இதில், அதர்வா கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகி மற்றும் நடிகர்-நடிகைகள் முடிவாகவில்லை. டி.முருகானந்தம், ஐ.பி.கார்த்திகேயன் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள். இது, முழுக்க முழுக்க மதுரை பின்னணியில் நடக்கும் கதையம்சம் கொண்ட படம். வியாபார ரீதியிலான திகில் படம், இது. அதர்வாவின் திறமைக்கு தீனி போடும் படமாக ...
Read More »ஈழ விடுதலைப் புரட்சிப் பாடல்களுக்கு இசையமைத்த ரமணன் காலமானார்!
யாழ்.மண்ணின் பிரபல இசையமைப்பாளரும் ஈழத்தின் அதிசிறந்த கிட்டார் வாத்தியக்கலைஞரும் யாழ். ரமணன் இன்று காலமாகியுள்ளார். முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ஈழத்து இசைத்துறையில் பிரபலம் பெற்றிருந்த யாழ் ரமணன் ஈழ விடுதலைப் புரட்சிப் பாடல்களுக்கும் இசையமைத்துள்ளார். ஈழத்தில் ஆயிரக்கணக்கான இசை அரங்குகள் ஊடாக இரசிகர்களை கவர்ந்த இவர் ஈழத்தின் மூத்த இசைத்துறைக் கலைஞர்கள் மற்றும் ஒளி, ஒலிபரப்புத் துறை கலைஞர்களுடன் இணைந்து இசைப் பணியாற்றியவர். காலத்திற்கு காலம் பல்வேறு இசைக்குழுக்களிலும் இவர் முக்கியத்துவமான கலைஞராக இயங்கியுள்ளார். இந்திய இராணுவக் காலப்பகுதியில் மக்களை எழுச்சிப் படுத்தும் பல ...
Read More »சிறிலங்காவில் குற்றவியல் சட்டமூலம் நிறைவேற்றம்!
குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் திருத்தச் (சட்டமூலம்) மீதான இரண்டாம் வாசிப்பு, மேலதிக வாக்குகளினால், நாடாளுமன்றத்தில் சற்று முன்னர் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு, 73 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது. சட்டமூலத்துக்கு ஆதரவாக 97 வாக்குகளும், எதிராக 24 வாக்குகளுமே அளிக்கப்பட்டன. மூன்றாவது வாசிப்பு, குழுநிலையில் வைத்து, நீதி அமைச்சர் தலதா அத்துகோரளவினால், திருத்தப்படுகின்றது. திருத்தப்பட்டதன் பின்னர் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், அந்த சட்டமூலத்துக்கு ஆதரவாக 95 வாக்குகளும் எதிராக 31 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில், 64 மேலதிக வாக்குகளினால் அந்த சட்டமூலம் ...
Read More »முகமாலையில் மர்மப் பொருள் வெடித்து மாணவன் படுகாயம்!
முகமாலை தெற்கு, கோவானம் காட்டுப்பகுதிக்குச் சென்ற மாணவர் ஒருவர் மர்மப் பொருள் ஒன்று வெடித்ததில் தனது கையின் பின்பகுதியை இழந்துள்ளார். குறித்த சம்பவம் தெடர்பாக மேலும் தெரியவருவதாவது, எழுதுமட்டுவாளை சேர்ந்த ஜெயபாலன் நிதர்சன் 18 வயது மாணவனே நேற்று காலை 11.00 மணிக்கு முகமாலை தெற்கு கோவானம் காட்டுப்பதிக்குள் வேலி அடைப்பதற்காக கட்டை தறிக்க சென்ற போது மர்மப் பொருள் வெடித்ததில் கையை இழந்த நிலையில் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த அனர்த்தத்தினால் மாணவனின் இடது கை மணிக்கட்டுடன் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலதிக வைத்திய ...
Read More »அவுஸ்திரேலியாவில் கல்வி கற்க வழங்கப்பட்ட விசாக்கள் ரத்து!
அவுஸ்திரேலியாவில் கடந்த 7 ஆண்டுகளில் 96,542 மாணவர் விசாக்கள் ரத்து செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் கல்வி பயிலுவதற்கென வழங்கப்பட்ட மாணவர் விசாக்களே இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் 2017 டிசம்பர் வரையான காலப் பகுதியிலேயே இவ்விசாக்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. போதைப்பொருள், கொள்ளை, பாலியல், ஆகிய குற்றச் செயல்களில் ஈடுபட்டு அவர்கள் குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்ட மாணவர்களின் விசாக்களே இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளன. இதேவேளை Character and General Visa Cancellation சட்டமூலம் கடந்த ...
Read More »