அவுஸ்திரேலியாவில் புகலிடம் நிராகரிக்கப்பட்டவர்கள் திருப்பி அனுப்பப்படும்போது அவர்களை Qantas மற்றும் Virgin விமான நிறுவனங்கள் தமது விமானத்தில் ஏற்றுவதற்கு மறுப்புத் தெரிவிக்க வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விமானங்கள் ஒப்புதல் வழங்கக் கூடாது என வலியுறுத்தும் கடிதம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதில் 60 ற்கும் மேற்பட்ட மனித உரிமை அமைப்புகள், தொழிற்சங்கங்கள், அகதிகள் அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் போன்றவற்றின் கையொப்பங்களுடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
லண்டனில் சட்டவிரோதமாக குடியேறிவர்களை நாடுகடத்தும் செயற்பாட்டிற்கு தமது நிறுவனம் துணைபோகாது என கடந்த ஜுன் மாதம் Virgin Atlantic அறிவித்திருந்தது.
அதேபோன்று அமெரிக்காவின் American, Frontier, Southwest, United airlines விமான நிறுவனங்கள் ‘zero tolerance’ கொள்கையின் கீழ் குடும்பங்களிடமிருந்து பிரிக்கப்படும் சிறுவர்களை தமது விமானத்தில் ஏற்றமாட்டோம் என அறிவித்திருந்தது.
மேலும் ஜேர்மனியின் தேசிய விமான நிறுவனமான Lufthansa, நாடுகடத்தப்படும் செயற்பாட்டிற்கு தமது நிறுவனம் துணைபோகாது என்ற அறிவிப்பினை வெளியிட்டிருந்தது.
இதேவேளை அவுஸ்திரேலியாவில் சட்டவிரோதமாக குடியேறி நாடுகடத்தப்படுவோரை Qantas, Virgin போன்ற விமான நிறுவனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.