இடம்பெற்று முடிந்த 2018 ஆம் ஆண்டுக்கான 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளன. இந்நிலையில் தமிழ் மொழி மூலம் அகில இலங்கை ரீதியாக முன்னிலையிலுள்ள 3 தமிழ் மாணவர்களில் இருவர் 2 ஆம் இடத்தினையும் ஒருவர் 3 ஆம் இடத்தினையும் பெற்றுள்ளனர். இந்நிலையில், முதலாம் இடத்தை பிலியந்தல -சோமவீர சந்ரசிறி வித்தியாலயத்தைச் சேர்ந்த புமித் மெத்துனுல் விதானகேயும் வெயங்கொட – சென்.மேரிஸ் கல்லூரியின் குருகுலசூரிய சனுபா திமத் பெரேராவும் பெற்றுள்ளனர். இருவரும் 199 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
சுமந்திரன் மீதான கொலை முயற்சி! சந்தேகநபர்களுக்கு குற்றப்பத்திரம் தாக்கல்!
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனைக் கொலைசெய்ய முயற்சித்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் போராளிகளான 5 சந்தேகநபர்களுக்கும் எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபரால் நேற்று(4) குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. பிரமுகர் ஒருவரைக் கொலை செய்ய முயற்சித்தமை, சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் ஐவர் மீதும் தமிழ் மொழியில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. கொழும்பு, இலக்கம் – 6 சிறப்பு மேல் நீதிமன்றில் நீதிபதி சம்பத் ஜானகிய ராஜரத்ன முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ...
Read More »அவுஸ்திரேலியாவில் உள்ளவர்களுக்கு எச்சரிக்கை!
அவுஸ்திரேலியாவில் வீதி விபத்து ஏற்படும் பகுதியாக மெல்போர்ன் வடக்கிலுள்ள Plenty Road, Bundoora என கூறப்பட்டுள்ளது. இந்த தகவிலினை பிரபல காப்புறுதி நிறுவனமான AAMI-இன் புதிய அறிக்கை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த ஓகஸ்ட் 2017 முதல் திகதியிலிருந்து 31 ஜுலை 2018 ற்க்கு இடையில் நாடு முழுவதும் ஏற்பட்ட வாகன விபத்துக்களை அடிப்படையாக வைத்து இந்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலின் பிரகாரம் கடந்த ஒரு ஆண்டில் மெல்போர்னில் மட்டுமல்லாது அவுஸ்திரேலியா முழுவதிலும் அதிக வீதி விபத்துக்கள் இடம்பெற்ற பகுதியாக மேற்குறித்த பகுதி உள்ளது. ...
Read More »சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் பெயர் வெளியானது!
சாம்சங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் பெயர் மற்றும் புதிய குவால்காம் சிப்செட் விவரங்கள் தெரியவந்துள்ளது. சாம்சங் கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனிற்கான ஆன்ட்ராய்டு பை ஃபர்ம்வேர் லீக் ஆகியுள்ளது. இதில் வெளிவர இருக்கும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8150 சிப்செட் மற்றும் சாம்சங் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் குறியீட்டு பெயர் தெரியவந்துள்ளது. அதன்படி சாம்சங் நிறுவனத்தின் முதல் மடிக்ககூடிய ஸ்மார்ட்போன் வின்னர் என அழைக்கப்படுகிறது. மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் குறித்து சாம்சங் ஏற்கனவே அறிவித்துவிட்ட நிலையில், இதன் வெளியீட்டு தேதி மட்டுமே ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த ...
Read More »இம்ரான்கான் அடுத்த மாதம் சீனா செல்கிறார்!
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் முதல் முறையாக சீனாவுக்கு அடுத்த மாதம் பயணம் மேற்கொள்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான்கான் கடந்த ஆகஸ்டு மாதம் பதவியேற்றுக்கொண்டார். பிரதமராக அவர், அடுத்த மாதம் (நவம்பர்) முதல் முறையாக சீனாவுக்கு செல்வதாக பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா முகமது குரேஷி கூறியுள்ளார். இது தொடர்பாக அமெரிக்காவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘சீனா-பாகிஸ்தான் பொருளாதார மண்டலம் ஒரு சிறந்த திட்டமாகும். இந்த திட்டத்தை விரைவில் முடிக்க பாகிஸ்தான் விரும்புகிறது. இதில் எந்தெந்த துறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம் ...
Read More »ஐந்து கமரா கொண்ட எல்.ஜி. வி40 தின்க்யூ ஸ்மார்ட்போன்!
எல்.ஜி. நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் வி40 தின்க்யூ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட்போனில் எல்.ஜி. ஐந்து கமராவை வழங்கியுள்ளது. எல்.ஜி. நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் வி40 தின்க்யூ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய எல்.ஜி. ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் விஷன் OLED டிஸ்ப்ளே, முந்தைய ஸ்மார்ட்போனை விட மெல்லிய பெசல்கள் வழங்கப்பட்டுள்ளது. புதிய எல்.ஜி. ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக ஐந்து கேமரா செட்டப் இருக்கிறது. எல்.ஜி. வி40 தின்க்யூ ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கமராக்கள்: 16 எம்.பி. 107-டிகிரி சூப்பர் வைடு ஆங்கிள், ...
Read More »அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் போராட்டம்!
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், அநுராதபுரம் சிறையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. யாழ். பண்டத்தரிப்பு மகளிர் உயர்தர பாடசாலைக்கு முன்பாக இன்று மாலை 4.30 மணிக்கு இப்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் 8 பேர், குறுகியகால புனர்வாழ்வளித்தாவது தம்மை விடுவிக்க வேண்டுமென கோரி கடந்த செப்டெம்பர் மாதம் 14ஆம் திகதி முதல் அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக கண்டி ...
Read More »ரோஹிங்கியா விவகாரம் – ஆங் சான் சூ கீ யின் கௌரவ குடியுரிமை ரத்து !-கனடா
மியான்மர் நாட்டின் அரசு ஆலோசகரான ஆங் சான் சூ கீ யின் கௌரவ குடியுரிமையை கனடா நாடாளுமன்றம் நேற்று ரத்து செய்தது. மியான்மர் நாட்டின் வடபகுதியில் அமைந்துள்ள ரக்கினே மாநிலத்தில் சிறுபான்மை ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். வங்காளதேசம் நாட்டில் இருந்து குடிபெயர்ந்து மியான்மரில் பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்டவர்களாக இருக்கும் இவர்களில் சிலர், கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். ராணுவத்தினர் தாக்குதலால் உயிருக்கு பயந்து ரோஹிங்கியா ...
Read More »உலகிலேயே முதன் முறையாக ஆஸ்திரேலியாவில் கர்ப்பபை புற்றுநோய் ஒழிப்பு!
ஆஸ்திரேலியாவில் வருகிற 2022-ம் ஆண்டுக்குள் கர்ப்பபை புற்றுநோயை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கர்ப்பபை புற்றுநோய் பெண்களை பெருமளவில் பாதித்து உயிரை பறிக்கிறது. வளரும் நாடுகள் மற்றும் ஏழை நாடுகளில் இந்த நோய் பாதித்தவர்களில் 10 பெண்களில் 9 பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. இந்த நோய் ‘எச்.பி.வி.’ (கியூமன்) என்ற வைரஸ்களால் ஏற்படுகிறது. இத்தகைய வைரஸ் 100 விதமாக உள்ளன. அந்த வைரஸ் தாக்கிய பெண்களுக்கு தொடக்கத்தில் நோயின் பாதிப்பு தெரியாது. அதற்கான அறிகுறிகள் தென் படாது. பின்னர் ...
Read More »நியூயோர்க் டைம்ஸ் செய்திதொடர்பில் விசாரணை!
சைனா ஹாபர் நிறுவனத்தினால் 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது 7.6 டொலர் மில்லியன் செலவழித்தமை தொடர்பில் ஆங்கில பத்திரிகை ஒன்றில் பிரசுரமாகி இருந்த செய்தி தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களம் மேற்கொண்டுவரும் விசாரணைக்கு அமைவாக இணையத்தள ஊடகவியலார்களின் தேசிய அமைப்பின் தலைவரிடம் இரண்டரை மணி நேரம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. 2015 ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு சைனா ஹாபர் நிறுவனத்தால் 7.6 டொலர் மில்லியன் செலவழித்தமை தொடர்பாக நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை ஊடகவியலாளர் மரியா அபி ஹபியினால் கடந்த ஜூன் மாதம் 25 ஆம் ...
Read More »