எல்.ஜி. நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் வி40 தின்க்யூ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட்போனில் எல்.ஜி. ஐந்து கமராவை வழங்கியுள்ளது.
எல்.ஜி. நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் வி40 தின்க்யூ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய எல்.ஜி. ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் விஷன் OLED டிஸ்ப்ளே, முந்தைய ஸ்மார்ட்போனை விட மெல்லிய பெசல்கள் வழங்கப்பட்டுள்ளது.
புதிய எல்.ஜி. ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக ஐந்து கேமரா செட்டப் இருக்கிறது. எல்.ஜி. வி40 தின்க்யூ ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கமராக்கள்: 16 எம்.பி. 107-டிகிரி சூப்பர் வைடு ஆங்கிள், 12 எம்.பி. ஸ்டான்டர்டு ஆங்கிள் மற்றும் 12 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ் 2X சூம் வசதியுடன் வழங்கப்பட்டுள்ளது.
மூன்று கமராக்களில் உள்ள டிரிபில் ஷாட் அம்சம் புகைப்படங்களை ஒன்றாக அடுக்கி, சிறிய வீடியோ போன்று உருவாக்கும். இதனை பயனர்கள் தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்ள முடியும்.
முன்பக்கம் செல்ஃபிக்களை எடுக்க 5 எம்.பி. வைடு-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 8 எம்.பி. ஸ்டான்டர்டு கமரா வழங்கப்பட்டுள்ளது. கமரா ஆப் திறக்கும் போது ஸ்கிரீனில் காணப்படும் ஸ்லைடர் கொண்டு பொக்கே எஃபெக்ட் மாற்றிக்கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் டூயல் PDAF அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது, இது 50% வேகமாகவும் மேம்படுத்தப்பட்ட ஹெச்.டி.ஆர். அம்சம் வழங்கப்பட்டுள்ளது.
எல்.ஜி. வி40 தின்க்யூ சிறப்பம்சங்கள்:
– 6.4 இன்ச் 3120×1440 பிக்சல் 19.5:9 ஃபுல் விஷன் OLED டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்
– அட்ரினோ 630 GPU
– 6 ஜி.பி. ரேம்
– 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ எல்.ஜி. UX
– 12 எம்.பி. கேமரா, f/1.5, 1.4µm பிக்சல், 78° லென்ஸ்
– 16 எம்.பி. சூப்பர் வைடு கேமரா, f/1.9, 1.0µm பிக்சல், 107° லென்ஸ்
– 12 எம்.பி. டெலிபோட்டோ கேமரா, f/2.4, 1.0µm பிக்சல், 45° லென்ஸ், டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ்
– 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/1.9, 1.12μm பிக்சல், 80° லென்ஸ்
– 5 எம்.பி. இரண்டாவது செல்ஃபி கேமரா, f/2.2, 1.12μm பிக்சல், 90° வைடு ஆங்கில் லென்ஸ்
– கைரேகை சென்சார்
– வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68), MIL-STD 810G
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், 32-பிட் மேம்படுத்தப்பட்ட ஹை-பை குவாட் DAC
– DTS: X 3D சரவுன்டு சவுன்ட், பூம்பாக்ஸ் ஸ்பீக்கர்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
– 3,300 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– குவால்காம் குவிக் சார்ஜ் 3.0, வயர்லெஸ் சார்ஜிங்
எல்.ஜி. வி40 தின்க்யூயூ ஸ்மார்ட்போன் புதிய அரோரா பிளாக், புதிய பிளாட்டினம் கிரே, மொராக்கன் புளு மற்றும் கார்மைன் ரெட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது