சீனாவின் முதலீட்டில் உருவாக்கப்படும், துறைமுக நகர நிலப்பரப்பை உள்ளடக்கிய இலங்கையின் புதிய புவியியல் வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது. கடைசியாக இலங்கையின் வரைபடம், 1995ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. இந்த நிலையில் புதிய வரைபடம் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளதாக, அளவையாளர் நாயகம் பி.சங்ககார தெரிவித்துள்ளார். இந்தப் புதிய வரைபடத்தில், கொழும்பு துறைமுக நகரம், அம்பாந்தோட்டை துறைமுகம், நெடுஞ்சாலைகள், மொறகஹகந்த நீர்த்தேக்கம் உள்ளிட்டவை புதிதாக சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன. இந்த வரைபட தயாரிப்பு பணி மார்ச் மாதம் நிறைவு செய்யப்பட்டது. தற்போது அதனை பொதுமக்கள் பெற்றுக் கொள்ள முடியும். இந்த புதிய ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
விசேட விமானம் மூலம் இலங்கையர்களை திருப்பியனுப்பியது அவுஸ்திரேலியா!
அவுஸ்திரேலியாவிற்குள் படகுகள் மூலம் நுழைய முயன்ற இலங்கையர்களை கைதுசெய்துள்ள அவுஸ்திரேலிய அதிகாரிகள் விசேடவிமானம் மூலம் அவர்களை உடனடியாக இலங்கைக்கு அனுப்பியுள்ளனர். கிறிஸ்மஸ் தீவில் உள்ள விமானநிலையத்திலிருந்து விமானமொன்று இலங்கையர்களுடன் புறப்பட்டுள்ளதாக த அவுஸ்திரேலியன் தெரிவித்துள்ளது. 20 இலங்கையர்களை படகுடன் அவுஸ்திரேலியா தடுத்து நிறுத்தியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பிட்ட இலங்கையர்கள் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் விமானநிலையத்திற்கு அழைத்துசெல்லப்பட்டுள்ளனர் அங்கிருந்து விமானமொன்று புறப்பட்டுள்ளது என த அவுஸ்திரேலியன் உறுதி செய்துள்ளது. அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் இதனை உறுதி செய்யாத அதேவேளை சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்குள் ...
Read More »சந்தேகநபர்கள் தொடர்பான அறிக்கையை கோரியுள்ள சட்டமா அதிபர்!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் தொடர்பில், விரிவான அறிக்கையொன்றை தம்மிடம் வழங்குமாறு, சட்டமா அதிபர் தப்புல டீ லிவேரா அறிவுறுத்தியுள்ளார். பதில் பொலிஸ்மா அதிபருக்கே, சட்டமா அதிபர், இன்று இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார். அதற்கமைய, கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் எத்தனை பேர், அவர்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளின் தற்போதைய நிலைமை உள்ளிட்ட காரணங்களை உள்ளடக்கிய தகவல்களை தமக்கு அனுப்புமாறு, சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையை இந்த மாதம் 24ஆம் திகதிக்கு முன்னர் அனுப்புமாறு, பதில் பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் சட்டமா அதிபரின் ...
Read More »கன்னியாவில் விகாரை அமைக்க இடைக்கால தடை!
திருக்கோணமலை – கன்னியா வெந்நீரூற்று மற்றும் பிள்ளையார் கோவிலில் விகாரை அமைப்பதற்கு திருகோணமலை மேல் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன், கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் மற்றும் மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான சொத்துகளை தர்மகர்த்தா சபையே தொடர்ந்தும் நிர்வகிக்கலாம் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கன்னியா வெந்நீரூற்று பகுதியில் அத்துமீறி நுழைந்து சில அடாவடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக திருகோணமலை மேல் நீதிமன்றில் எழுத்தானை மனுவொன்று கடந்த 19ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்டது. குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது வெந்நீர் ஊற்று ...
Read More »அமெரிக்காவில் இம்ரான் கான் உரையாற்றும்போது எழுந்த பலூசிஸ்தான் சுதந்திர கோஷம்!
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் மக்களிடையே உரையாற்றும்போது சிலர் பலூசிஸ்தான் சுதந்திர கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் வாஷிங்டனில் உள்ள உள் விளையாட்டரங்கில் நடந்த நிகழ்ச்சியில், அமெரிக்கவாழ் பாகிஸ்தானியர்களிடையே இம்ரான் கான் உரையாற்றினார். அவர் பேசிக்கொண்டிருந்தபோது சிலர் திடீரென இருக்கையில் இருந்து எழுந்து, பாகிஸ்தானுக்கு எதிராக முழக்கமிட்டனர். பலூசிஸ்தானுக்கு சுதந்திரம் வழங்கக்கோரியும் முழக்கங்கள் எழுப்பினர். இதனால் இம்ரான் கான் தொடர்ந்து உரையாற்றுவதில் இடையூறு ஏற்பட்டது. பலூசிஸ்தான் மாகாணத்தில் பாகிஸ்தான் பாதுகாப்பு ...
Read More »நியூசிலாந்தில் 5.2 ரிக்டர் அளவில் திடீர் நிலநடுக்கம்!
பசிபிக் பெருங்கடல் அருகே அமைந்துள்ள பனிமலைகளும், எரிமலைகளும் நிறைந்த நியூசிலாந்து நாட்டில் சுமார் 5.2 ரிக்டர் அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. தென்மேற்கு பசிபிக் பெருங்கடல் அருகே அமைந்துள்ள பனிமலைகளும், எரிமலைகளும் நிறைந்த நியூசிலாந்து நாட்டில் சுமார் 5.2 ரிக்டர் அளவில் நேற்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் நேற்று இரவு 10.35 மணியளவில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் மைய அதிகாரிகள் தெரிவித்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை. ஆனால் நிலநடுக்கம் ஏற்பட்ட அதிர்வை உணர்ந்ததாக அப்பகுதி மக்கள் ...
Read More »ஆஸ்திரேலியா எங்கும் ஆர்ப்பாட்டம்!
ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயன்று மனுஸ் மற்றும் நவுருத்தீவில் 6ஆண்டுகளுக்கு மேலாக சிறைவைக்கப்பட்டுள்ள அகதிகளை விடுவிக்கக் கோரி மெல்பேர்ன், சிட்னி உள்ளிட்ட ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள், ‘அகதிகளை ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு வரவும், நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம், ஆறு ஆண்டுகள் ரொம்ப அதிகம், ’ உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியுள்ளனர். 2013ம் ஆண்டு காலக்கட்டத்தில், ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடையும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்திருந்த நிலையில் அப்போதைய பிரதமர் கெவின் ருட் தலைமையிலான லேபர் அரசாங்கம் ...
Read More »பாரசீக வளைகுடாவில் பதட்டம் – கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம்!
பாரசீக வளைகுடாவில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் உள்ளது. அணு ஆயுத பரவலை தடுக்கும் விதமாக ஈரானுடன் ஆன அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது. அது முதல் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வருகிறது. கடந்த மாதம் ஈரானின் வான்பரப்புக்குள் நுழைந்து உளவு பார்த்த அமெரிக்கா ஆளில்லா விமானத்தை ஈரான் புரட்சிகர படை சுட்டு வீழ்த்தியது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பதட்டம் ஏற்பட்டது. இந்த நிலையில் பாரசீக ...
Read More »மணல் அகழ்வுகளுக்கு காவல் துறை துணை?
கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்ற சட்டரீதியற்ற மணல் அகழ்வுகளுக்கு காவல் துறை முழுமையாக துணை போவதாக கிராம மட்ட அமைப்புக்கள் மாவட்ட பொது அமைப்புக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தின் இயற்கை வளமான மணல் வளம் அண்மைக்காலமாக வகை தொகையின்றி அழிக்கப்பட்டு வருகின்றன என்றும் இதனை தடுப்பதற்கு இதுவரை எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்ட பொதுஅமைப்புக்கள் இதனை தடுக்க வேண்டிய அதிகாரிகள் அதற்கு திரைமறைவில் துணை போவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளன. அதாவது, மணலுக்கான எந்தவிதமான அனுமதிகளும் வழங்கப்படாத வன்னேரிக்குளத்தின் உட்பகுதி கல்லாறு உமையாள்புரம் தட்டுவன்கொட்டி ...
Read More »உண்ணாவிரதம் இருக்கும் கைதி தொடர்பில் மனோவை தலையிடுமாறும் கோரிக்கை!
மகசீன் சிறைச்சாலையில் உள்ள கைதியொருவர் கடந்த 16 ஆம் திகதி முதல் நீரின்றி உண்ணாவிரதம் இருந்து வருகின்றார். இவரது உடல் நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. எனத் தெரிவிக்கப்படுகினறது. முன்னாள் திரைப்படக் கூட்டுத்தாபனத் தலைவரான 62 வயதுடைய கனகசபை தேவதாசன் எனபரே இவ்வாறு நீர் கூட அருந்தாது உண்ணாவிரதம் இருந்து வருகின்றார். கோட்டை புகையிரத நிலையம் குண்டுவெடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட இவருக்கு எதிராக இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு ஒரு வழக்கில் ஆயுள் தண்டனையும், மற்றொரு வழக்கில் 20 ...
Read More »