இலங்­கையின் புதிய வரை­படம் ; முக்கிய மாற்றங்கள் என்ன ?

சீனாவின் முத­லீட்டில் உரு­வாக்­கப்­படும், துறை­முக நகர நிலப்­ப­ரப்பை உள்­ள­டக்­கிய இலங்­கையின் புதிய புவி­யியல் வரை­படம் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

 

கடை­சி­யாக இலங்­கையின் வரை­படம், 1995ஆம் ஆண்டு தயா­ரிக்­கப்­பட்­டது. இந்த நிலையில் புதிய வரை­படம் அண்­மையில் வெளி­யி­டப்­பட்­டுள்­ள­தாக, அள­வை­யாளர் நாயகம் பி.சங்­க­கார தெரி­வித்­துள்ளார்.

இந்தப் புதிய வரை­ப­டத்தில், கொழும்பு துறை­முக நகரம், அம்­பாந்­தோட்டை துறை­முகம், நெடுஞ்­சா­லைகள், மொற­க­ஹ­கந்த நீர்த்­தேக்கம் உள்­ளிட்­டவை புதி­தாக சேர்த்துக் கொள்­ளப்­பட்­டுள்­ளன.

இந்த வரை­பட தயா­ரிப்பு பணி  மார்ச் மாதம் நிறைவு செய்­யப்­பட்­டது. தற்­போது அதனை பொது­மக்கள் பெற்றுக் கொள்ள முடியும்.

இந்த புதிய வரை­ப­டத்தில், துறை­முக நகரம் உள்­ளிட்ட 25 ஆண்­டு­களில் இடம்­பெற்ற அனைத்து  மாற்­றங்­களும் உங்­வாங்­கப்­பட்­டுள்­ளன என்றும் அவர் கூறினார்.

இந்த ஆண்டில் இருந்து வரைபடத்தை புதுப்பிக்கும் பணிகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள் ளப்படும்.