யாழ். வடமராட்சி நுணுவில் பிள்ளையார் கோவில் குளத்தில் காணப்பட்ட கழிவுகளை அகற்றி சுத்தப்படுத்திய இளைஞர் குழு ஒன்றில் இடம்பெற்றிருந்த மாணவன் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றதாக நெல்லியடி காவல் துறை தெரிவித்தனர். சம்பவத்தில் கரவெட்டி கிழக்கைச் சேர்ந்த தேவராஜா லக்சன் (வயது -18) என்ற நெல்லியடி மத்திய கல்லூரியில் உயர்தரத்தில் கற்கும் மாணவனே இவ்வாறு உயிரிழந்தார். தாய் தந்தை இல்லாத நிலையில் சகோதரியுடன் வசித்து வந்துள்ள இவர் வடமராட்சி நுணுவில் பிள்ளையார் கோவில் ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
இந்தியா – ஆஸ்திரேலியா தொடர் இங்கிலாந்துக்கு முக்கியமானது: ஜோ ரூட்
இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடரை பார்க்க ஆர்வமாக இருக்கிறேன் என இங்கிலாந்து டெஸ்ட் அணி கப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார். இந்தியா – ஆஸ்திரேலியா இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது. ஆஷஸ் தொடருக்குப்பின் மிகப்பெரிய தொடராக இது கருதப்படுகிறது. இங்கிலாந்து அணி 2021 கோடைக்காலத்தில் ஆஸ்திரேலியா சென்று விளையாட இருக்கிறது. இந்தியா – ஆஸ்திரேலியா தொடர், ஆஸ்திரேலிய கண்டிசன் எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள மிகமிக உதவிகரமாக இருக்கும் என ஜோ ரூட் தெரிவித்துள்ளார். ...
Read More »கொவிட்-19: மிகப்பெரிய அளவில் தடுப்பூசிப் பணியைத் தொடங்குமாறு புட்டின் உத்தரவு
ரஷ்யாவில் அடுத்த வாரத்திலிருந்து கொரோனாத் தொற்றுக்கான தடுப்பூசியை செலுத்தும் பணியை, மிகப்பெரிய அளவில் தொடங்குமாறு அந் நாட்டு விலாடிமிர் புட்டின் (Vladimir Putin) தெரிவித்துள்ளார். இதனால், ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி அடுத்த வாரத்திலிருந்து, அந்நாடு முழுவதிலும் நடைமுறைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிரியர்களுக்கும், சுகாதார பணியாளர்களுக்கும், தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை வழங்கப்படும் எனவும், புட்டின் தெரிவித்துள்ளார்.
Read More »புரெவி சூறாவளி இலங்கையை விட்டு விலகிச் சென்றது
புரெவி என்ற சூறாவளியானது தற்போது நாட்டை விட்டு விலகிச் சென்றுவிட்டதாக வளிமண்டல வியல் திணைக் களம் தெரிவித்துள்ளது. மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரையான வேகம் கொண்ட இந்தச் சூறாவளியானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 90 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் வீசக்கூடும். கொழும்பிலிருந்து மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் நாளை காலை வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளு மாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள். ஏனைய கடற்பரப்புகளில் ...
Read More »உள்ளூர் தேவைக்குப் போதுமான மஞ்சள் விரைவில் அறுவடை செய்யப்படும்
உள்ளூர் தேவைக்குப் போதுமான மஞ்சள் பயிர் விரைவில் அறுவடை செய்யப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இறக்குமதி தடையைத் தொடர்ந்து விவசாயிகள் மஞ்சள் உற்பத்தியை மேற்கொண்டுள்ளதாகவும் உள்ளூர் தேவைக்கு அது போதுமானதாக இருக்கும் என்றும் அவர் கூறினார். உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் மஞ்சள் இறக்குமதிக்கு அரசாங்கம் தடை விதித்தது. மஞ்சள் இறக்குமதிக்கு இலங்கை ஆண்டுதோறும் 7 மில்லியன் டொலருக்கு மேல் செலவிடுகிறது. தடையின் பின் உள்ளூர் சந்தையில் மஞ்சளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு சில்லறை விலை அதிகரித்தது. மேலும் மஞ்சள் கடத்தல் ...
Read More »கரையோரத்தில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்ப நடவடிக்கை
புரெவி சூறாவளி அதிக விளைவுகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற வடக்கு மற்றும் கிழக்கு மாகா ணங்களில் கரையோரங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு மா காண ஆளுநர்கள், அந்தந்த மாவட்ட அரசாங்க அதிபர் களுக்கு அறிவுறுத்தி இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Read More »தடுப்பு மருந்து வரும் வரையில் சுகாதார விதிமுறைகளை பின்பற்றுவது அவசியம்
கொவிட்-19 தடுப்பு மருந்து வரும் வரையில் வடக்கு மக்கள் உரிய சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவது அவசியம் என்றும் அதுதொடர்பில் அதிகாரிகள் உரிய நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்க வேண்டும் என்றும் ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்; தெரிவித்தார். வடமாகாண கொவிட் 19 தடுப்பு செயலணி மீளாய்வுக் கலந்துரையாடல் இன்று வடமாகாண ஆளுநர் திருமதி. பி.எஸ்.எம். சார்ள்ஸ் தலைமையில் , ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இதில் பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், யாழ் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்கள், மாகாணத்திற்குட்பட்ட மாவட்டச் செயலாளர்கள், வடமாகாண ...
Read More »ஆஸ்திரேலியா மீது போர் குற்றம் – சீனாவுக்கு எதிராக குரல் எழுப்பும் நியூசிலாந்து
போலியான புகைப்படம் மூலம் ஆஸ்திரேலியா மீது போர் குற்றம் சுமத்திய விவகாரத்தில் சீனாவுக்கு எதிராக நியூசிலாந்து குரல் எழுப்பியுள்ளது. உலக நாடுகளை உலுக்கி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து பரவியதால், அந்த நாட்டை விசாரணை கூண்டில் நிற்க வைக்க பல நாடுகள் விரும்புகின்றன. அவற்றில் ஆஸ்திரேலியாவும் ஒன்று. கொரோனா வைரஸ் உருவானது எப்படி என்பது குறித்து சீனாவிடம் விசாரணை நடத்த வேண்டும் என ஆஸ்திரேலியா வலியுறுத்தியது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலுக்கு வித்திட்டது. இந்த மோதல் தற்போது உச்சத்தை எட்டியுள்ளது. ஆஸ்திரேலிய ...
Read More »மைதானத்தில் திரைப்படப் பாணியில் அவுஸ்திரேலிய ரசிகையிடம் காதலைத் தெரிவித்த இந்திய ரசிகர்!
இந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நடைபெற்ற மைதானத்தில், பார்வையாளர் அரங்கில், இந்திய ரசிகர் ஒருவர், அவுஸ்திரேலிய ரசிகையிடம் மோதிரமொன்றை வழங்கி திரைப்பட பாணியில் தனது காதலை தெரிவித்துள்ள சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது, 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட இந்திய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அந்தவகையில் இரு அணிகளுக்கு இடையேயான 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நேற்றைய தினம் நடைபெற்றது. இந் நிலையில் குறித்த போட்டியினைப் பார்வையிட வந்திருந்த இந்திய ரசிகர் ஒருவர், தனது தோழியான அவுஸ்திரேலிய ...
Read More »மன்னாரில் இனங்காணப்பட்ட 4 கொரோனா தொற்றாளர்கள் வட மாகாண தொற்று நோய் வைத்தியசாலைக்கு
மன்னார் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை(29) மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளின் போது 4 நபர்களுக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த நபர்கள் உரிய சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக நேற்று திங்கட்கிழமை மாலை விசேட அம்புலன்ஸ் வண்டி மூலம் கிளிநொச்சியில் அமைந்துள்ள வட மாகாண தொற்று நோய் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் 3 பேர் முசலி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள சவேரியார் புரத்தில் மீன் வாடி அமைத்து கடற்றொழிலில் ஈடுபட சிலாபத்திலிருந்து வந்தவர்களாவர். இவர்கள் கடந்த 19 ஆம் திகதி சிலாபத்திலிருந்து ...
Read More »