உள்ளூர் தேவைக்குப் போதுமான மஞ்சள் பயிர் விரைவில் அறுவடை செய்யப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
இறக்குமதி தடையைத் தொடர்ந்து விவசாயிகள் மஞ்சள் உற்பத்தியை மேற்கொண்டுள்ளதாகவும் உள்ளூர் தேவைக்கு அது போதுமானதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் மஞ்சள் இறக்குமதிக்கு அரசாங்கம் தடை விதித்தது.
மஞ்சள் இறக்குமதிக்கு இலங்கை ஆண்டுதோறும் 7 மில்லியன் டொலருக்கு மேல் செலவிடுகிறது. தடையின் பின் உள்ளூர் சந்தையில் மஞ்சளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு சில்லறை விலை அதிகரித்தது. மேலும் மஞ்சள் கடத்தல் செயற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றன.
இலங்கைச் சமையலில் அன்றாடம் பயன்படுத்தப்படும் மஞ்சளின் பிரதான இறக்குமதிச் சந்தையாக இந்தியா இருப்பது குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal