இந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நடைபெற்ற மைதானத்தில், பார்வையாளர் அரங்கில், இந்திய ரசிகர் ஒருவர், அவுஸ்திரேலிய ரசிகையிடம் மோதிரமொன்றை வழங்கி திரைப்பட பாணியில் தனது காதலை தெரிவித்துள்ள சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது,
3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட இந்திய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

அந்தவகையில் இரு அணிகளுக்கு இடையேயான 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நேற்றைய தினம் நடைபெற்றது.
இந் நிலையில் குறித்த போட்டியினைப் பார்வையிட வந்திருந்த இந்திய ரசிகர் ஒருவர், தனது தோழியான அவுஸ்திரேலிய பெண்ணிடம் காதலை தெரிவிக்க, அந்த பெண்ணும் அதற்கு சம்மதம் தெரிவித்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகின்றது.
மேலும் போட்டியை நேரலை ஒளிபரப்பு செய்த பொக்ஸ் கிரிக்கெட் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal