ரஸ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவின் ஏற்பாட்டில் இலங்கைக்கு சுற்றுலாப்பயணம் மேற்கொண்டுள்ளவர்கள் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மீறியுள்ளனர் என ஆங்கிலவாரஇதழ் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கு முன்னர் இலங்கை சுற்றுலாப்பயண அதிகார சபையின் செய்துகொண்ட இணக்கப்பாட்டினை உக்ரைனின் சுற்றுலாகுழுவினர் மீறியுள்ளனர் என ஆங்கிலவார இதழ் தெரிவித்துள்ளது. டிசம்பர் 28 ம் திகதி மத்தல விமானநிலையம் வந்த உக்ரைன் சுற்றுலாப்பயணிகள் கொரோனா வைரஸ் பரிசோதனைகளின் பின்னர் தங்கள் சுற்றுலாப்பயணத்தினை ஆரம்பித்துள்ளனர்.ஐந்து நாட்கள் கூட அவர்கள் தனிமைப்படு;த்தலில் இருக்கவில்லை உக்ரைன் கொரோனா வைரஸ் ஆபத்து அதிகம் ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
சிறிலங்காவின் அடுத்த ஜனாதிபதி சிம்ம ராசியுடைய அமைச்சர்
இலங்கைக்கு அடுத்த முறை புதிய தலைமைத்துவம் ஒன்று கிடைக்கவுள்ளதாக இலங்கையின் பிரபல சோதிடர் சந்திரசிறி பண்டார தெரிவித்துள்ளார். அந்த நபர் தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சராகச் செயற்படுவதாகவும் அவர் சிம்ம ராசி உடையவர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் ராஜபக்ஷ குடும்பத்துக்கு வெளியேயுள்ள ஒருவராவார். அவரது பெயரை தற்போது வெளிப்படுத்த முடியாது. அவரது ஜாதகம் என்னிடம் உள்ளது எனத் தெரிவித்த அவர், 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெறவில்லை என்றால் என்னை நானே துப்பாக்கியில் சுட்டுக்கொல்வதாகக் கூறினேன். எனினும் அது சோதிடத்தில் ...
Read More »எவரும் ஆயுதமேந்துவதற்கு இடமளிக்கப்போவதில்லை- கமால் குணரட்ண
வெளிநாடுகளை தளமாக கொண்டு செயற்படு;ம் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களின் தலைவர்களை கைதுசெய்வதற்காக சிறிலங்கா வெளிநாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ண தெரிவித்துள்ளார். போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள கும்பல்களின் தலைவர்களை கைதுசெய்வதற்கான பேச்நுவார்த்தைகள் ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டன என அவர் குறிப்பிட்டுள்ளார். சந்தேகநபர்களை கைதுசெய்வதற்கான 18 அறிவிப்புகள் இன்டர்போல் ஊடாக விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கைதுசெய்யப்படுவதிலிருந்து தப்பியுள்ள சில குற்றவாளிகள் தற்போது வெளிநாடுகளில் உள்ளனர் அவர்கள் இந்த வருடத்தில் கைதுசெய்யப்படுவார்கள் என கமால் குணரட்ண தெரிவித்துள்ளார்.இவர்களுடைய நடவடிக்கைகள் உட்பட பல விடயங்கள் ...
Read More »யாதவ் வெளியே நடராஜன் உள்ளே
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மீதமுள்ள இரு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் இடது கை வேகப் பந்து வீச்சாளர் த. நடராஜன் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார் என்று இந்திய கிரிக்கெட் நிர்வாகம் இன்று உறுதிப்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலிய மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் அடிலெய்டில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பந்து வீசுகையில் உமேஷ் யாதவ் உபாதைக்குள்ளானார். அந்த இன்னிங்ஸில் அவர் 3.3 ஓவர்கள் மாத்திரமே பந்துப் பரிமாற்றம் மேற்கொண்டார். இதன் காரணமாக அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டு, தொடரிலிருந்து விலக்கப்பட்டுள்ள நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு யாதவ்வின் இடத்திற்கு ...
Read More »புத்தாண்டு பிரார்த்தனையில் போப் ஆண்டவர் பங்கேற்பு இல்லை
போப் ஆண்டவர் பிரான்சிஸ் கடுமையான முதுகு வலியால் அவதிப்பட்டு வரும் நிலையில் வாடிகன் புனித பீட்டர் பேராலயத்தில் நடைபெற்ற 2020-ம் ஆண்டு நிறைவு பிரார்த்தனையில் பங்கேற்கவில்லை. போப் ஆண்டவர் பிரான்சிஸ் (வயது 84), கடுமையான முதுகு வலியால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் அவர் நேற்று மாலை வாடிகன் புனித பீட்டர் பேராலயத்தில் நடைபெற்ற 2020-ம் ஆண்டு நிறைவு பிரார்த்தனையில் பங்கேற்கவில்லை. இதே போன்று புத்தாண்டு நள்ளிரவு பிரார்த்தனையிலும் அவரால் பங்கேற்க முடியாமல் போய்விட்டது. இந்த தகவலை அவரது செய்தி தொடர்பாளர் மேட்டியோ புரூனி தெரிவித்தார். ...
Read More »சிட்னியில் கொரோனா பரவல் – இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய பயணம் தள்ளி வைப்பு
சிட்னியில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருப்பதையொட்டி இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஒருநாள் போட்டித் தொடர் தள்ளி வைக்கப்படுவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டியில் விளையாட திட்டமிடப்பட்டு இருந்தது. முதல் போட்டி வருகிற 22-ந் தேதி கான்பெராவிலும், 2-வது போட்டி 25-ந் தேதி மெல்போர்னிலும், 3-வது மற்றும் கடைசி போட்டி 28-ந் தேதி ஹோபர்டிலும் நடக்க இருந்தது. இந்தநிலையில் சிட்னியில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருப்பதையொட்டி இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் ...
Read More »காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் யாழில் கவனயீர்ப்பு போராட்டம்
காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத் தாருங்கள் எனக் கோரி காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் நேற்று யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர். வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலய பின்பக்க வீதியில் அமைந்துள்ள நல்லை ஆதினம் முன்பாக நேற்று புதன்கிழமை காலை 9 மணியளவில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது எங்கள் பிள்ளைகளை எங்களிடம் ஒப்படையுங்கள், இனவாதத்தைக் கக்காதீர்கள், எங்கள் உறவுகளைக் கொல்லாதீர்கள், எங்கள் பிள்ளைகள் எங்களுக்கு வேண்டும், தமிழர்களுக்கு ஒரு நீதி சிங்களவர்களுக்கு ஒரு நீதியா?, மனிதாபிமானத்துடன் எமது பிள்ளைகளை விடுவியுங்கள், ...
Read More »கிளிநொச்சியில் நிலத்தில் புதையுண்ட நிலையில் 55 மோட்டார் எறிகணைகள் மீட்பு
கிளிநொச்சியில் பளை அரசாங்க மருத்துவமனைக்கு அருகிலுள்ள ஒரு காணியில் புதைக்கப்பட்டிருந்த 55 மோட்டார் எறிகணை களை(ஷெல்) நேற்று காவல் துறை விஷேட அதிரடிப் படையினருடன் இணைந்து மீட்டுள்ளனர். நிலத்தின் உரிமையாளர் குழி தோண்டிய போது இவற்றை அவதானித்து காவல் துறைக்கு தகவல் வழங்கியுள்ளார். காவல் துறை விஷேட அதிரடிப்படையினர் சகிதம் அனைத்து மோட்டார் எறிகணைகளையும் மீட்டெடுத்து அவற்றை செயலிழக்கச் செய்யவென கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றின் உத்தரவைப் பெற்றுள்ளனர்.
Read More »ஆஸ்திரேலியாவில் உள்ள அகதிகள் கனடா செல்ல முடியாத நிலை…!
ஆஸ்திரேலியாவில் உள்ள 97 அகதிகளை கனடாவுக்கு வரவேற்க கனடாவில் உள்ள Vancouver குடியமர்த்தல் முகமை தயாராக உள்ள நிலையில், இந்த திட்டத்துக்கு தற்போதைய கொரோனா சூழல் முட்டுக்கட்டையாக இருந்து வருகின்றது. இந்த அகதிகளை கனடாவுக்குள் அனுமதிப்பதற்கான முதல்கட்ட விண்ணப்ப பணி நிறைவடைந்துள்ள நிலையில், சிட்னி நகரில் உள்ள கனடா விசா அலுவலகத்துக்கு அடுத்தக்கட்ட அனுமதிக்காக இந்த விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. “ஆனால், கொரோனா சூழல் இதனை அத்தனையும் மாற்றிவிட்டது,” என்கிறார் அகதிகளுக்கான ஏற்பாட்டை மேற்கொள்ளும் சலீம் ஸ்பிண்டரி. கொரோனா பெருந்தொற்று சூழல் காரணமாக, கனடா ...
Read More »ஆஸ்திரேலியாவில் சித்ரவதைக்கு உள்ளாகும் அகதிகள்
ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களிலிருந்து மருத்துவ சிகிச்சைக்கு என அழைத்து வரப்பட்ட அகதிகள் ஆஸ்திரேலிய ஹோட்டல்களில் சிறைவைக்கப்பட்டுள்ளனர். இதில் சுமார் 65 அகதிகள் வேறொரு ஹோட்டலுக்கு இடமாற்றப்பட்டதற்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ளன. “முந்தைய ஹோட்டலில் ஜன்னல் இருந்தது. அதன் மூலம் வெளியில் எங்கள் பார்த்து புன்னகைப்பதையும் கையசைப்பதையும் பார்க்க முடிந்தது. இப்போதைய ஹோட்டலில் எந்த ஜன்னலும் இல்லை,” எனக் கூறியிருக்கிறார் ஹோட்டலில் சிறைவைக்கப்பட்டுள்ள அகதியான Mostafa Azimitabar. ஆப்கானிஸ்தானின் ஏகாதிபத்திய போரிலிருந்து, இலங்கையின் இனப்படுகொலைப் போரிலிருந்து, ஈரானிலிருந்து என உலகின் பல நாடுகளில் ...
Read More »