கிளிநொச்சியில் பளை அரசாங்க மருத்துவமனைக்கு அருகிலுள்ள ஒரு காணியில் புதைக்கப்பட்டிருந்த 55 மோட்டார் எறிகணை களை(ஷெல்) நேற்று காவல் துறை விஷேட அதிரடிப் படையினருடன் இணைந்து மீட்டுள்ளனர்.
நிலத்தின் உரிமையாளர் குழி தோண்டிய போது இவற்றை அவதானித்து காவல் துறைக்கு தகவல் வழங்கியுள்ளார்.
காவல் துறை விஷேட அதிரடிப்படையினர் சகிதம் அனைத்து மோட்டார் எறிகணைகளையும் மீட்டெடுத்து அவற்றை செயலிழக்கச் செய்யவென கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றின் உத்தரவைப் பெற்றுள்ளனர்.
Eelamurasu Australia Online News Portal