மாகாண சபைத் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடாகும் என்று அதன் நாடாளுமன்ற உறுப்பினரும், ஊடகப் பேச்சாளருமான எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேயுடனான கூட்டமைப்புப் பிரதிநிதிகளின் சந்திப்பு பற்றி ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த வேளையில், ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மாகாண சபைத் தேர்தல் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கும் போது, மாகாண சபைத் தேர்தல் உடனடியாக ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தக்கோரி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று எதிர்வரும் 17ஆம் திகதி புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த நீதிக்கான போராட்டத்தில் தமிழ்பேசும் மக்கள் அனைவரும் கலந்து கொண்டு போராட்டத்துக்கு வலுச்சேர்க்க வேண்டும் என வடக்கு கிழக்கு பல்கழலைக்கழகங்களை சேர்ந்த மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத்தொடர் இடம்பெற்றுவரும் இக்காலப்பகுதியில் தமிழர்களுக்கு எதிராக இலங்கையில் நடந்தேறிய இனவழிப்புக்கு நீதி கோரி சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மதகுருக்கள், பல்கலைக்கழக மாணவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், சிவில் ...
Read More »இறுதி அறிக்கையின் மேலும் 22 பகுதிகள் கையளிப்பு
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின், மேலும் 22 பகுதிகள் சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதியின் சட்டப் பிரிவு பணிப்பாளர் நாயகம், சட்டத்தரணி ஹரிகுப்த சேனாதீரவினால் அறிக்கையின் பாகங்கள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை 87 பாகங்களைக் கொண்டதாகும். ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் 65 பாகங்கள் கடந்த 2 ஆம் திகதி சட்ட மா அதிபரிடம் கையளிக்கப்பட்டன.
Read More »புதிய வகை வைரஸ் தொற்றுடன் ஒருவர் அடையாளம்
தென்னாபிரிக்காவில் பரவும் கொரோனா தொற்றின் E484K என்கிற புதிய வகையான வைரஸ் தொற்றுக்கு இலக்கான இலங்கையர் அடையாளம் காணப்பட்டுள்ளார். தனிமைப்படுத்தல் நிலையமொன்றில் இவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இந்த வகையிலான வைரஸ் தற்சமயம் தென்னாபிரிக்க நாட்டில் பரவிவருகின்றதாக கூறப்படுகின்றது. குறித்த நபர் தன்சானியாவில் இருந்து நாடு திரும்பியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
Read More »ஆஸ்திரேலியா, ஜப்பான் பிரதமர்களுடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், மோடி நாளை ஆலோசனை
குவாட் கூட்டணி உச்சி மாநாடு நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. காணொலி காட்சி மூலம் இம்மாநாடு நடக்கிறது. அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் இணைந்து கடந்த 2004-ம் ஆண்டு ‘குவாட்’ கூட்டணி என்ற அமைப்பை உருவாக்கின. 2007-ம் ஆண்டு முதல் இந்த அமைப்பு செயல்படத் தொடங்கியது. வெளியுறவு மந்திரிகள் மட்டத்திலேயே இதுவரை பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இந்தநிலையில், முதல்முறையாக தலைவர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ‘குவாட்’ கூட்டணி உச்சி மாநாடு நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. காணொலி காட்சி மூலம் ...
Read More »பத்திரிகையாளர்கள் மீது கிருமிநாசினி தெளித்த தாய்லாந்துப் பிரதமர்
தாய்லாந்துப் பிரதமர் பிரயுத் சான்-ஓச்சா நேற்றுப் புதன்கிழமை தலைநகர் பாங்கொக்கில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, 3 அமைச்சர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, அமைச்சரவையில் வெற்றிடமாக உள்ள இடங்களுக்கு நியமிக்கும் சாத்தியமான தலைவர்கள் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். இதனால் விரக்தியடைந்த அவர், கேள்விக்கு பதிலளிப்பதை தவிர்க்கும் வகையில் தனது கையில் இருந்த கிருமிநாசினியை(சனிடைசர்) பத்திரிகையாளர்களின் முகத்துக்கு நேரே தெளித்தவாறு புறப்பட்டுச் சென்றார். பத்திரிகையாளர்களுடன் கோபமாகப் பேசியதுடன், அவர்கள் கூறுவதை காது கொடுத்துக் கேட்காமல் சென்றுவிட்டார். அவரது இந்தச் செயற்பாட்டை பார்த்து பத்திரிகையாளர்கள் திகைத்தனர். பிரதமர் பிரயுத் ...
Read More »60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக் கை எதிர்வரும் சனிக்கிழமை முதல் முன்னெடுக்கவுள்ளதாகத் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் அடுத்தகட்டமாக எதிர்வரும் சனிக்கிழமை முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப் பூசியைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தெரியவந்துள்ளது. இந்நிலையில், கொரோனா தொற்றால் 60 வயதுக்கும் மேற்பட்டவர்களே அதிகமாக உயிரிழப்பதாகத் ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. இதனை கருத்திற்கொண்டே இந்த திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக பதில் பிரதி சுகாதார பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
Read More »சட்டவிரோதமாக வெளிநாடு செல்லமுயன்ற இருவர் கைது
சட்டவிரோதமாக வெளிநாடு செல்லமுயன்று இருவர் கைது செய்யப் பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளார். போலி கடவுச் சீட்டு மற்றும் போலி விசாவை பயன்படுத்தி வெளிநாடு செல்ல முயன்ற பெண் ஒருவர் உட்பட இருவர் இன்று அதிகாலை கட்டு நாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் எல்லை பாதுகாப்பு அதிகாரிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது.
Read More »ஆஸ்திரேலிய தடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட ஈரானிய அகதியின் கதை
ஈரானிய அகதியான Ebrahim Obeiszade கடைசியாக பணியாற்றி 8 ஆண்டுகள் கடந்து விட்டன. தெற்கு ஈரானில் உள்ள சர்க்கரை ஆலையில் பணியாற்றிய அவரின் வாழ்க்கை இன்று ஆஸ்திரேலியாவில் வேறொரு கோணத்தில் உள்ளது. ஈரானில் அரசியல் ரீதியாக ஏற்பட்ட பாதுகாப்பற்ற சூழல் காரணமாக ஆஸ்திரேலியாவை நோக்கி கடல் பயணத்தை மேற்கொண்ட அவர், கடந்த 8 ஆண்டுகளை தடுப்பு முகாம்களிலேயே/தடுப்பிலேயே கழித்திருக்கிறார். இவ்வாறான அகதிகள் தொடர்பாக ஆஸ்திரேலிய அரசிடம் ஏற்பட்ட திடீர் எண்ண மாற்றத்தால் இவர் 6 மாத தற்காலிக விசாவில் விடுவிக்கப்பட்டிருக்கிறார். முன்னதாக, கடந்த ஜூலை ...
Read More »யாழில் 11வது நாளாகவும் தொடரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம்..
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி யாழில் இடம்பெற்றுவரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் 11வது நாளாக இன்றும் தொடர்கின்றது. நீதி வேண்டிய இந்த போராட்டம் நல்லூர் – நல்லை ஆதீனம் முன்பாக யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. குறித்த போராட்டத்திற்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், அரசியல் பிரதிநிதிகள், சிவில் அமைப்பினர், மத தலைவர்கள் என பலரும் தனது ஆதரவினை தெரிவித்து வருகின்றனர். போராட்டத்தின் கோரிக்கைகளாவன, சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதினூடாக ...
Read More »