60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக் கை எதிர்வரும் சனிக்கிழமை முதல் முன்னெடுக்கவுள்ளதாகத் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் அடுத்தகட்டமாக எதிர்வரும் சனிக்கிழமை முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப் பூசியைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், கொரோனா தொற்றால் 60 வயதுக்கும் மேற்பட்டவர்களே அதிகமாக உயிரிழப்பதாகத் ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
இதனை கருத்திற்கொண்டே இந்த திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக பதில் பிரதி சுகாதார பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal