எல்லா ஆண்களையும் குற்றம் சாட்டுகிறீர்களா? என்ற கேள்விக்கு லீனா மணிமேகலை விளக்கம் அளித்துள்ளார். #MeToo மூவ்மென்ட் இந்தியா முழுவதும் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சினிமா, பத்திரிகை, அரசியல் என பல துறைகளைச் சார்ந்த ஆண்களும் இதில் குற்றம் சாட்டப்பட்டு வருகின்றனர். கவிஞர் வைரமுத்து, நடன இயக்குநர் கல்யாணைத் தொடர்ந்து, இயக்குநர் சுசி கணேசன் மீதும் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. கவிஞரும், ஆவணப்பட இயக்குநருமான லீனா மணிமேகலை, சுசி கணேசன் பாலியல் ரீதியாகத் தன்னைத் துன்புறுத்தியாகக் குற்றம் சுமத்தியுள்ளார். இதுகுறித்துப் பத்திரிகையாளர்களிடம் பேசிய லீனா மணிமேகலையிடம், ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
இராணுவம் வசமிருந்த 5 ஏக்கர் காணி விடுவிப்பு!
வடக்கில் முப்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த பொது மக்களின் சுமார் 87 ஏக்கர் காணிகளை விடுவிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ள நிலையில் மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில் இராணுவத்தின் வசம் காணப்பட்ட 5 ஏக்கர் காணிகள் மன்னார் பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக மன்னார் பிரதேசச் செயலக காணி அலுவலகர் க.வசந்தன் தெரிவித்துள்ளார். 1990 ஆம் ஆண்டு முதல் இராணுவத்தின் வசம் இருந்த குறித்த 5 ஏக்கர் காணியும் சுமார் 28 வருடங்களின் பின்னர் உரிமையாளர்களிடம் கையளிக்கும் வகையில் மன்னார் பிரதேசச் செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த 5 ...
Read More »பாகிஸ்தானில் இருந்து வரும் யாத்திரிகர்களுக்கு உம்ரா வரி ரத்து !
பாகிஸ்தானில் இருந்து உம்ரா யாத்திரை செய்ய வரும் பக்தர்களுக்கான வரியை ரத்து செய்ய சவுதி அரேபியா அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. இஸ்லாம் தோன்றிய புனித பூமியான சவுதி அரேபியா மற்றும் ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் அந்த மார்க்கத்துடன் தொடர்புடைய சில புனிதஸ்தலங்களும், முஹம்மது நபியின் மகள், பேர பிள்ளைகள் மற்றும் சில கலிபாக்களின் நினைவிடங்களும் அமைந்துள்ளன. இந்த இடங்களை பார்வையிட்டு தங்களது காணிக்கைகளை செலுத்தும் நோக்கத்தில் உலகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் ஆண்டுதோறும் புனிதப்பயணம் மேற்கொள்கின்றனர். ஹஜ் யாத்திரையைப்போல் கடமையாக்கப்படா விட்டாலும் ...
Read More »தமிழ் குடும்பம் ஒன்று அவுஸ்திரேலியாவுக்கு நாடு கடத்தப்படவுள்ளது!
பிரித்தானியாவில் உள்ள ஈழத் தமிழ் குடும்பம் ஒன்று அவுஸ்திரேலியாவுக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பக்கவாதம் ஏற்படும் அபாயத்தில் உள்ள ஈழத் தமிழர் ஒருவர் மற்றும் அவரது குடும்பத்தினரே இவ்வாறு நாடு கடத்தப்படவுள்ளனர். எனினும் அவருக்கு விமானத்தில் ஆபத்து உள்ளதாக கூறி குடும்பத்தினர் 4 வைத்தியர்களை ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். அவுஸ்திரேலிய குடியுரிமை பெற்ற சங்கரப்பிள்ளை பாலசந்திரன் கடந்த 6 வருடங்களில் பக்க வாத நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். 60 வயதான குறித்த நபர் கடந்த 2007ஆம் ஆண்டு பிரிட்டனுக்கு சென்ற நிலையில் அவரது ...
Read More »என் குடும்பம், வேதனையோடு வடிக்கும் கண்ணீரை நீதிமன்றம் மூலம் கழுவுவேன் – சுசி கணேசன்
மீ டூ சர்ச்சை சூடுபிடித்துள்ள நிலையில், குறும்பட இயக்குனர் லீனா மணிமேகலை இயக்குநர் சுசி கணேசன் மீது குற்றம்சாட்டிய நிலையில், அதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார். இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா மற்றும் தமிழ் பாடகி சின்மயியைத் தொடர்ந்து ‘மீ டூ’ இயக்கம் மூலம் தினந்தோறும் பாலியல் குற்றச்சாட்டுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. திரையுலகம் உட்பட்ட பல்வேறு துறைகளில் உள்ள முக்கிய பிரமுகர்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன. குறும்பட இயக்குனர் லீனா மணிமேகலை, இயக்குநர் சுசிகணேசன் மீது பாலியல் புகார் கூறியுள்ளார். ...
Read More »கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு உண்மையை கூற வேண்டும்!- சுரேஸ்
தமிழ் மக்களுக்கு எந்தவிதமான நன்மைகளை செய்யாத புதிய அரசாங்கத்தினை அதன் இறுதி கட்டத்திலும் காப்பாற்றுவதனையே முதன்மையாக கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவருமான சுரேஸ் பிரேமசந்திரன் புதிய அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பில் சிறிலங்கா சுதந்திர கட்சியும் ஜக்கிய தேசிய கட்சியும் அக்கறையுடன் செயற்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழ் மக்களது இரு பிரதான பிரச்சனைகளான தேசிய இனப் பிரச்சனையையும் , யுத்தத்திற்கு பின்னரான பிரச்சனையையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒன்றோடு ஒன்று கலந்து நியாயம் ...
Read More »ஆஸ்திரேலிய தூதரகம், ஜெருசலேமுக்கு மாற்றம்!-பிரதமர் ஸ்காட்
கிறிஸ்தவர்கள், யூதர்கள், இஸ்லாமியர்கள் என 3 மதத்தினருக்கும் புனித நகரமாக திகழக்கூடிய ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டார். உலகளாவிய எதிர்ப்புக்கு இது வழிவகுத்தது. ஆனாலும், அடுத்த கட்டமாக கடந்த மே மாதம், ஜெருசலேம் நகரில் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டது. இந்த நிலையில் அமெரிக்காவை பின்பற்றி ஆஸ்திரேலியாவும் இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்கவும், தனது தூதரகத்தை ஜெருசலேம் நகருக்கு மாற்றவும் பரிசீலித்து வருகிறது. இதை ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரீசன் அறிவித்தார். ...
Read More »வடக்கு அயர்லாந்து எழுத்தாளர் அன்னா பர்ன்ஸ் மேனுக்கு புக்கர் பரிசு!
மில்க்மேன் என்ற புத்தகத்துக்காக 2018-ம் ஆண்டிற்கான மேன் புக்கர் பரிசை வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் அன்னா பர்ன்ஸ் வென்றுள்ளார். வடக்கு அயர்லாந்து நாட்டின் தலைநகரம் பெல்பாஸ்ட். இங்கு பிறந்தவர் அன்னா பர்ன்ஸ். மில்க்மேன் என்ற புத்தகத்துக்காக 2018-ம் ஆண்டிற்கான மேன் புக்கர் பரிசை இவர் வென்றுள்ளார். உலக அளவில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் மிக உயர்ந்த விருது “மேன் புக்கர் பரிசு”. இந்த விருது கடந்த 1969-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மேன் புக்கர் விருதை இயன் மெக் ஈவன், ஐரிஸ் முர்டோச், ...
Read More »பெண்கள் தைரியமாக தங்கள் பிரச்சினைகளைப் பேச வேண்டும்!- லீனா மணிமேகலை
‘தமிழ் சினிமா இயக்குநர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம் எல்லாமே பாய்ஸ் கிளப்தான். அவர்களிடம் இருந்து பெண்ணுக்கான நீதியை எதிர்பார்க்க முடியாது’ எனத் தெரிவித்துள்ளார் லீனா மணிமேகலை. இந்தியாவில் #MeToo மூவ்மென்ட் மிகப்பெரிய அளவில் பிரபலமாகி வருகிறது. அரசியல், சினிமா, ஊடகம் எனப் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழகத்தில் கவிஞர் வைரமுத்து, நடன இயக்குநர் கல்யாண், இயக்குநர் சுசி கணேசன் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. சுசி கணேசன் மீது பாலியல் குற்றச்சாட்டைச் சுமத்தியிருக்கும் கவிஞரும், ஆவணப்பட இயக்குநருமான ...
Read More »ஈழப் போராட்டத்திற்கு இந்திய அரசு மட்டுமல்ல எந்த அரசும் உறுதுணையாக இருக்கவி்ல்லை!
ஈழத்தில் நடந்த போராட்டத்தில் இந்திய அரசாக இருக்கட்டும் எந்த அரசாக இருக்கட்டும் அவர்கள் உறுதுணையாக இருந்து செயற்பட்டதில்லை. தெரிந்தோ தெரியாமலோ தமிழ்நாட்டில் இருந்து குரல்கொடுக்கிறார்களே ஒழிய அதை அவர்கள் அரசியல் போராட்டமாக நினைக்கிறார்கள். ஒரு இனப்போராட்டமாக மொழிப்போராட்டமாக இந்திய அரசு நினைக்கிறதில்லை என்று இயக்குநர் சிகரம் பாரதிராஜா தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்று (15) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தென்னிந்திய சினிமா இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, இந்தக் காலச்சூழலில் ஈழம் பற்றி படம் எடுத்தால் கூட என்ன ...
Read More »