மில்க்மேன் என்ற புத்தகத்துக்காக 2018-ம் ஆண்டிற்கான மேன் புக்கர் பரிசை வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் அன்னா பர்ன்ஸ் வென்றுள்ளார்.
வடக்கு அயர்லாந்து நாட்டின் தலைநகரம் பெல்பாஸ்ட். இங்கு பிறந்தவர் அன்னா பர்ன்ஸ். மில்க்மேன் என்ற புத்தகத்துக்காக 2018-ம் ஆண்டிற்கான மேன் புக்கர் பரிசை இவர் வென்றுள்ளார்.
உலக அளவில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் மிக உயர்ந்த விருது “மேன் புக்கர் பரிசு”. இந்த விருது கடந்த 1969-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த மேன் புக்கர் விருதை இயன் மெக் ஈவன், ஐரிஸ் முர்டோச், சல்மான் ருஷ்டி, ஜார்ஜ் சாண்டர்ஸ் உள்பட பல புகழ்பெற்ற எழுத்தாளர்கள் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான மேன் புக்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மில்க்மேன் என்ற புத்தகத்துக்காக 2018-ம் ஆண்டிற்கான மேன் புக்கர் பரிசு ஐரீஷ் நாட்டைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் அன்னா பர்ன்சுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த புத்தக்கத்தில் கடந்த 30 ஆண்டுக்கு மேலாக வடக்கு அயர்லாந்தில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களை பற்றி விரிவாக எழுதியுள்ளார். அன்னா பர்ன்ஸ் பெற்றுள்ளது 50-வது மேன் புக்கர் பரிசு என்பது குறிப்பிடத்தக்கது.