மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் சட்டத்துக்கு முரணான நிறுவனமாகும். மீண்டும் இந்த நிறுவனத்தை முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லாவுக்கு கையளிக்க எவராவது முயற்சிப்பார்களாக இருந்தால் அதனை தான் எதிர்ப்பதாகவும் இந்த பல்கலைக்கழகம் தொடர்பில் கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி பற்றிய துறைசார் பாராளுமன்ற மேற்பார்வைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கைதொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்றும் அந்த குழுவின் தலைவர் பேராசிரியர் ஆசு மாரசிங்க தெரிவித்தார். அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இந்த பல்கழைலகழகம் தொடர்பாக விளக்கமளித்த அவர் மேலும் கூறியதாவது ; ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
அனைத்து கட்சிகளும் சிங்கள, பௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கின்றன!
இலங்கையிலுள்ள அனைத்து கட்சிகளும் சிங்கள, பௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கத்திற்காகவே செயற்படுவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது, இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து பிரதமர் தெரிவித்த கருத்து தொடர்பாக எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலையே அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் ஐக்கிய தேசியக் கட்சியாக இருக்கலாம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியாக இருக்கலாம், பொதுஐன பெரமுனவாக இருக்கலாம் இவை அனைத்தும் சிங்கள ...
Read More »குல்பூஷனை விடுதலை செய்யும்படி சர்வதேச நீதிமன்றம் சொல்லவில்லை!
குல்பூஷனை விடுதலை செய்ய வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் சொல்லவில்லை என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார். இந்திய முன்னாள் கடற்படை வீரர் குல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், தீர்ப்பை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அத்துடன், இந்தியா சார்பில் குல்பூஷன் சார்பாக ஆஜராக வழக்கறிஞரை வைத்துக் கொள்ளலாம், உறவினர்களை பார்க்கலாம் எனவும் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை இந்தியா வரவேற்றுள்ளது. இந்நிலையில், தீர்ப்பு ...
Read More »5Gக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்!
யாழ்ப்பாண மாநகரசபை எல்லையில் நடைமுறைப் படுத்தப்படும் 5ஜீ அலைவரிசைத் திட்டத்துக்கு எதிராக, யாழ்ப்பாணத்தில் இன்று (18), ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ். மாநகரசபைக்கு முன்பாக, இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மாநகர சபை முதல்வர் அலுவலகத்துக்கு எதிரில் ஒன்று திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், SMART LAMP POLE என்ற பெயரில் 5ஜீ தொழில்நுட்பத்தைப் பரிசோதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகக் கோஷங்களை எழுப்பினர். அத்தோடு ‘அறிவியல் எனக்கூறி ஆபத்தை விதைக்காதே’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும், ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர். அத்துடன், யாழ். முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட், தம்மைச் சந்திக்க வேண்டுமென்றும் ...
Read More »புகைப்படம் வெளியிட்டு அசத்திய பிரியங்கா!
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி 22 ஆண்டுகளுக்கு முன்பு தனது திருமணத்தின் போது அணிந்து இருந்த இளம் சிவப்பு பனாரஸ் பட்டு புடவை அணிந்த படத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்தியாவில் பெண்களுக்கான உடை என்றால் முதலில் சொல்வது சேலைதான். எத்தனை விதமான நவநாகரீக உடை வந்தாலும் சேலைதான் பாரம்பரிய உடையாகும். பெண்களின் அழகை வெளிப்படுத்தும் உடையாக கருதப்படுகிறது. இந்த நிலையில் டுவிட்டரில் கடந்த சில தினங்களாக “சாரி டுவிட்டர்” என்ற ஹேஸ்டேக் பிரபலம் ஆகி வருகிறது. சினிமா நடிகைகள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என ...
Read More »ஆஸ்திரேலிய மாடல் அழகி 100 மணி நேரம் சமூக சேவை செய்ய உத்தரவு!
ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் பிரபல மாடல் அழகி அடவ் மார்ன்யங்கை, 100 மணி நேரம் சமூக சேவை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் பிரபல மாடல் அழகி அடவ் மார்ன்யங். போரால் பாதிக்கப்பட்ட தெற்கு சூடானில் இருந்து, தனது 10 வயதில் ஆஸ்திரேலியாவில் குடியேறிய இவர், 2017-ம் ஆண்டு உலக அழகி இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா சார்பில் பங்கேற்றார். அத்துடன் தனது பருவ வயதில் தான் பலாத்காரத்துக்கு உள்ளானது குறித்தும், அதன் கொடுமைகள் குறித்தும் ‘பேஸ்புக்’ நேரலையில் பதிவிட்டு மக்களின் கவனத்தை ஈர்த்து மேலும் ...
Read More »கன்னியாவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக் கண்டித்து வவுனியாவில் போராட்டம்!
கன்னியா வெந்நீரூற்று பகுதியில் பிள்ளையார் ஆலய வளாகத்தில் புத்த கோவில் கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் தமிழ் மக்கள் மீது சுடுநீர்த்தாக்குதல் உட்பட சிங்கள பௌத்த மேலாதிக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் இன்று (17) கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. வடக்கு கிழக்கில் கடத்தப்பட்டும் கையளிக்கப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தினால் நடத்தப்பட்ட இப்போராட்டத்தில் புத்த மதத்திற்கு முதன்மையான இடத்தை ஆதரித்த பின்னர் ஏன் சிவனேசன், சிறிதரன், யோகேஸ்வரன் கன்னியாவுக்கு சென்றார்கள் ?, அவர்கள் எம்.பி பதவியை இராஜினாமா செய்ய வேண்டும், ...
Read More »வடக்கு ஆளுநரை சந்தித்த அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர்!
இலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹொலி ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை நேற்று மாலை ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது வடமாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் மற்றும் அவுஸ்ரேலிய அரசாங்கத்தினால் வடமாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் ஆராயப்பட்டதுடன் வடமாகாணத்தின் நீர் பிரச்சனை, அதனை தீர்ப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ள ‘வடமராட்சி களப்பு’ திட்டம் உள்ளிட்ட செயற்திட்டங்கள் குறித்தும் விரிவாக இதன்போது கலந்துரையாடப்பட்டன. இதேவேளை இலங்கை அகதிகள் சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவிற்கு உள்நுழைய முயற்சிப்பது குறித்து கருத்துத் தெரிவித்த உயர்ஸ்தானிகர், சட்டவிரோத குடியேற்றவாசிகளை கட்டுப்படுத்த அவுஸ்திரேலிய அரசாங்கம் ...
Read More »கன்னியா கோயிலுக்கு வழிபட சென்றோருக்கு தடை!
திருகோணமலை-கன்னியா பிள்ளையார் கோயிலுக்கு பௌர்ணமி தினமான் இன்று (16) வழிபடச் சென்ற பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டதை அடுத்து, கன்னியா பகுதியில் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர். கன்னியா பிள்ளையார் கோயிலுக்கு தவத்திரு அடிகளார் தலைமையில் பக்தர்கள் வழிபடச் சென்றபோது, ஆர்ப்பாட்டம் செய்ய வந்துள்ளதாக கூறி, அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட நீதிமன்ற தடை உத்தரவு பத்திரத்தை காவல் துறையினர் கையளித்துள்ளனர். இதனையடுத்து, அப்பகுதியிலுள்ள மக்களுக்கும் காவல் துறையினருகும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதுடன், அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இதன்போது, கன்னியா பிள்ளையார் ...
Read More »ஓமந்தையில் 7 மிதிவெடிகள் மீட்பு!
வவுனியா ஓமந்தை இராணுவச் சோதனை நிலையத்திற்கும் விடுதலைப்புலிகளின் முன்னரங்க காவல் அரணுக்கும் இடைப்பட்ட விளக்குவைத்தகுளம் பகுதியிலிருந்து இன்று காலை 7 மிதிவெடிகளை மீட்டுள்ளதாக ஓமந்தை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். வவுனியா ஓமந்தைப்பகுதியில் முன்னர் இராணுவத்தரப்பினர் விடுதலைப்புலிகளின் முன்னரங்கப்பகுதியான விளக்குவைத்தகுளம் சூனியப்பிரதேசப்பகுதியிலிருந்து இராணுவத்தினர் வெளியேறிய பகுதியில் தனியாருக்குச் சொந்தமான காணி ஒன்றிலில் நேற்று முதல் கனரக இயந்திரத்தின் உதவியுடன் துப்பரவுப்புணிகள் இடம்பெற்று வந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை குறித்த பகுதியில் 7 மிதிவெடிகள் காணப்பட்டுள்ளன இதையடுத்து இத்தகவலை காவல் துறையால் காணி உரிமையாளரினால் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ...
Read More »