கன்னியா வெந்நீரூற்று பகுதியில் பிள்ளையார் ஆலய வளாகத்தில் புத்த கோவில் கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் தமிழ் மக்கள் மீது சுடுநீர்த்தாக்குதல் உட்பட சிங்கள பௌத்த மேலாதிக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் இன்று (17) கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
வடக்கு கிழக்கில் கடத்தப்பட்டும் கையளிக்கப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தினால் நடத்தப்பட்ட இப்போராட்டத்தில் புத்த மதத்திற்கு முதன்மையான இடத்தை ஆதரித்த பின்னர் ஏன் சிவனேசன், சிறிதரன், யோகேஸ்வரன் கன்னியாவுக்கு சென்றார்கள் ?,
அவர்கள் எம்.பி பதவியை இராஜினாமா செய்ய வேண்டும், ரணில் தமிழர் தாயகத்தில் விகாரை கட்டுவதை நிறுத்து, சிங்கள புத்த மத பயங்கரவாத்தினை நிறுத்த தமிழர்களுக்கு அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவி தேவை போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகள் ஏந்தியவாறும் அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றிய கொடிகளை தாங்கியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
879 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கபட்டோரின் உறவினர்கள் தாம் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கொட்டகைக்கு முன்பாகவே இப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal