யாழ்ப்பாண மாநகரசபை எல்லையில் நடைமுறைப் படுத்தப்படும் 5ஜீ அலைவரிசைத் திட்டத்துக்கு எதிராக, யாழ்ப்பாணத்தில் இன்று (18), ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ். மாநகரசபைக்கு முன்பாக, இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மாநகர சபை முதல்வர் அலுவலகத்துக்கு எதிரில் ஒன்று திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், SMART LAMP POLE என்ற பெயரில் 5ஜீ தொழில்நுட்பத்தைப் பரிசோதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகக் கோஷங்களை எழுப்பினர்.
அத்தோடு ‘அறிவியல் எனக்கூறி ஆபத்தை விதைக்காதே’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும், ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.
அத்துடன், யாழ். முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட், தம்மைச் சந்திக்க வேண்டுமென்றும் இந்தத் திட்டம் குறித்து அவரிடம் விளக்கம் கேட்க விரும்புவதாகவும், ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, போராட்டம் இடம்பெறும் பகுதியில் பொலிஸாரும் இராணுவத்தினரும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal