காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி 22 ஆண்டுகளுக்கு முன்பு தனது திருமணத்தின் போது அணிந்து இருந்த இளம் சிவப்பு பனாரஸ் பட்டு புடவை அணிந்த படத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்தியாவில் பெண்களுக்கான உடை என்றால் முதலில் சொல்வது சேலைதான். எத்தனை விதமான நவநாகரீக உடை வந்தாலும் சேலைதான் பாரம்பரிய உடையாகும். பெண்களின் அழகை வெளிப்படுத்தும் உடையாக கருதப்படுகிறது.
இந்த நிலையில் டுவிட்டரில் கடந்த சில தினங்களாக “சாரி டுவிட்டர்” என்ற ஹேஸ்டேக் பிரபலம் ஆகி வருகிறது. சினிமா நடிகைகள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பல தரப்பு பெண்கள் சேலை அணிந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவும் சேலை அணிந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
22 ஆண்டுகளுக்கு முன்பு தனது திருமணத்தின் போது அணிந்து இருந்த இளம் சிவப்பு பனாரஸ் பட்டு புடவை அணிந்த படத்தை பதிவிட்டுள்ளார்.