யாழ்.வல்வெட்டித்துறையில் சுவரோவியமாக புலியின் படத்தை வரைந்த இளைஞர்களை புலனாய்வு பிரிவை சேர்ந்தவர்களும் காவல் துறையினரும் அச்சுறுத்தியதுடன் , கீறிய புலிப்படத்தையும் அழிக்க வைத்துள்ளனர். நாட்டின் பல பாகங்களிலும் சுவரோவியங்களை இளையோர் கீறி வருகின்றனர். அதற்கு பல தரப்பினரும் ஆதரவு நல்கி வருவதுடன் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். அந்நிலையில் வல்வெட்டித்துறை வேம்படி பகுதியில் நேற்று புதன்கிழமை அப்பகுதி இளையோர் ஒன்றிணைந்து புலி ஒன்றின் படத்தினை சுவரோவியமாக வரைய முனைந்துள்ளனர். புலியின் படத்தினை வரைந்து கொண்டிருந்த வேளை அவ்விடத்திற்கு காவல் துறையுடன் வந்த புலனாய்வு பிரிவினர் புலிப்படம் ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
நாடாளுமன்றத் தேர்தலில் சிங்கள மக்கள் சிந்தித்து செயற்படுவார்கள்!
நாடாளுமன்றத் தேர்தலில் சிங்கள மக்கள் சிந்தித்து செயற்படுவார்கள் என்ற நம்பிக்கை எங்களிடம் இருக்கின்றது என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், நல்லாட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டபோது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க மகிந்த ராஜபச்சவின் அரசாங்கத்தில் இருந்தவர்களை கைது செய்திருந்தால் தற்போதைய அரசாங்கம் ஐக்கியதேசியக் கட்சி உறுப்பினர்களை கைது செய்திருக்கமாட்டார்கள். ரணில் விக்கிரமசிங்க கைது செய்யாது அங்கும் இங்குமாக டீல் போட்டதால் தான் இன்று கைதுகள் இடம்பெறுகின்றது. இன்றைய அரசாங்கத்தில் நாடகங்கள் அரங்கேறுகின்றன தென்னிலங்கை மக்கள் ...
Read More »ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ நிவாரணத்துக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு!
ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ நிவாரண உதவிக்காக 2 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர் ஒதுக்கீடு செய்து அந்த நாட்டின் பிரதமர் ஸ்காட் மாரிசன் உத்தரவிட்டுள்ளார். ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா மாகாணங்களில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் காட்டுத்தீ எரிந்து வருகிறது. இந்த காட்டுத்தீயில் இதுவரை 24 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பல ஆயிரக்கணக்கான வன உயிரினங்கள் செத்து மடிந்துள்ளன. லட்சக்கணக்கான மக்கள் கடும் தவிப்புக்கு ஆளாகி உள்ளனர். இந்த காட்டுத்தீயால் அங்கு கடும் வெயில் வாட்டி ...
Read More »பழிவாங்குவோம்- சொலைமானியின் உடலின் மீது விழுந்து கதறியழுது புதிய தளபதி சபதம்!
அமெரிக்க தாக்குதலில் ஈரானிய தளபதி கசேம் சொலைமானி கொல்லப்பட்ட பின்னர் அவரது இடத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய தளபதி மேஜர் ஜெனரல் இஸ்மாயில் கானி சொலைமானியின் கொலைக்கு பழிவாங்கப்போவதாக சூளுரைத்துள்ளார். கொல்லப்பட்ட ஈரானிய இராணுவ அதிகாரியின் இறுதிநிகழ்வுகள் இன்று இடம்பெற்றவேளை அவரது பிரேதப்பெட்டியின் மேல் விழுந்து கதறியழுத கானி சொலைமானி வீரமரணமடையச்செய்யப்பட்டமைக்கான பழிவாங்கல் இடம்பெறும் என்பது இறைவனிற்கு அளிக்கப்பட்ட வாக்குறுதி என தெரிவித்துள்ளார். சொலைமானியின் பாதையைஅதே வலிமையுடன்தொடர்வதற்கு நாங்கள் உறுதி தெரிவிக்கின்றோம், என குறிப்பிட்டுள்ள கானி அமெரிக்காவை பிராந்தியத்திலிருந்து வெளியேற்றுவதன் மூலம் பல நடவடிக்கைகள் மூலம் ...
Read More »அவுஸ்திரேலியாவில் மழை பெய்தபோதும் பாரிய காட்டுத் தீ அச்சுறுத்தல்!
அவுஸ்திரேலியாவில் காட்டுத் தீ பரவி வரும் பிராந்தியங்களில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பருவ கால மழைவீழ்ச்சி இடம்பெற்றதால் அந்தப் பிராந்தியங்களிலான வெப்பநிலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிட்னி நகர் முதல் மெல்போர்ன் நகர் வரையான கிழக்குக் கடற்கரை மற்றும் நியூ சவுத் வேல்ஸ் பிராந்தியத்தின் சில பகுதிகள் என்பனவற்றிலேயே மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. எனினும் எதிர்வரும் வியாழக்கிழமைக்குள் வெப்பநிலை மீண் டும் அதிகளவுக்கு அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப் பட்டுள்ளது. இதன் பிரகாரம் விக்டோரியா மற்றும் சவுத் வேல் ஸில் மேலும் பாரிய காட்டுத் தீ ...
Read More »அவுஸ்திரேலிய பிரதமருடன் துயர் பகிர்ந்த கோத்தா !
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசனை நேற்று (07) தொலைபேசியில் தொடர்பு கொண்டு தற்போது அந்நாடு எதிர்நோக்கியுள்ள வரலாற்றில் மிகக் கொடிய காட்டுத்தீயினால் ஏற்பட்டுள்ள அழிவுகள் தொடர்பில் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தார். வருடத்தில் இக்காலப்பகுதியில் அவுஸ்திரேலியாவில் காட்டுத்தீ பரவுகின்றமை ஒரு சாதாரண நிகழ்வாயினும் தற்போது பரவியுள்ள காட்டுத் தீ முன்னொருபோதும் இல்லாதவாறு உக்கிரமானதாக காணப்படுகின்றது. இந்த பயங்கர காட்டுத்தீயினால் தற்போது சுமார் முப்பதுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன், அவர்களுள் மீட்புப் பணியாளர்களும் உள்ளடங்குகின்றனர். உயிரிழந்துள்ள வனவிலங்குகளின் எண்ணிக்கை ஐம்பது இலட்சமாக கணக்கிடப்பட்டுள்ள ...
Read More »பலமான நாடாளுமன்றம் தேவைப்படுகிறது!
இந்த நாட்டை சிறந்ததொரு நிலைக்கு கட்டியெழுப்ப ஒரு பலமான பாராளுமன்றம் தேவைப்படுகின்றது. புதிய நாடாளுமன்றத்தில் ஒரு வரவு, செலவுத்திட்டத்தை முன் வைத்து அதனூடாக நாட்டின் அபிவிருத்தியை முன்னெடுக்கவுள்ளோம் என்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். கடந்த 5ஆம் திகதி பின்னவல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் அங்கு உரையாற்றுகையில்; கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷவை வெற்றிபெற செய்த அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து மக்களுக்கும் ...
Read More »52 என குறிப்பிட்ட அமெரிக்காவிற்கு 290 என்ற எண்ணும் நினைவிருக்க வேண்டும்!
52 இடங்களில் தாக்குதல் நடத்துவோம் எனக்கூறிய அமெரிக்காவிற்கு 290 என்ற எண்ணும் நினைவிருக்க வேண்டும் என ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி எச்சரித்துள்ளார். ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே, அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில், ஈரானின் 2-வது சக்தி வாய்ந்த நபராக கருதப்பட்ட ராணுவ தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால், மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்தது. சுலைமானி கொல்லப்பட்டதற்கு அமெரிக்காவை பழிவாங்குவோம் என ஈரான் நாட்டின் ...
Read More »ஆஸி. காட்டுத் தீயால் உண்டான சேத விபரங்களை சீரமைக்க 2 பில்லியன் ஆஸி.டொலர்கள்!
காட்டுத் தீயினால் உண்டான சேத விபரங்களை சீரமைப்பதற்கு அடுத்த இரு ஆண்டுகளில் 2 பில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் ஒதுக்கப்படவுள்ளதாக அந் நாட்டு பிரதமர் ஸ்கொட் மோரிசன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அதற்கமைய எதிர்வரும் ஜூன் மாதம் முடிவடைவதற்குள் 500 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களையும், 2021 ஆம் ஆண்டு 1 பில்லியன் அவுஸதிரேலிய டொலர்களையும், 2022 ஆம் ஆண்டு மேலும் 500 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களையும் ஒதுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார். இந் நிலையில் ...
Read More »இந்தோனேசியாவில் மலர்ந்துள்ள உலகின் மிகப்பெரிய மலர்!
உலகின் மிகப்பெரிய மலரான ராஃப்லீசியா இந்தோனேஷியாவின் மேற்கு சுமத்ரான் காட்டில் மலர்ந்துள்ளது. 117 சென்றி மிற்றர் விட்டம் கொண்ட இந்த மலர் இதுவரை மலர்ந்த ராஃப்லீசியா மலர்களிலேயே மிகப்பெரிய மலர் என மேற்கு சுமத்ராவில் உள்ள இயற்கை வளங்கள் மற்றும் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது. 2017 ஆம் ஆண்டில் இதே பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட ரஃப்லீசியா மலர் 107 சென்றி மிற்றர் விட்டம் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த மலரின் ஒட்டுண்ணி பண்பு, விகாரமான தோற்றம் மற்றும் துர்நாற்றத்தின் காரணமாக “அசுரன் மலர்” , “சடலம் ...
Read More »