அவுஸ்திரேலியாவில் காட்டுத் தீ பரவி வரும் பிராந்தியங்களில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பருவ கால மழைவீழ்ச்சி இடம்பெற்றதால் அந்தப் பிராந்தியங்களிலான வெப்பநிலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிட்னி நகர் முதல் மெல்போர்ன் நகர் வரையான கிழக்குக் கடற்கரை மற்றும் நியூ சவுத் வேல்ஸ் பிராந்தியத்தின் சில பகுதிகள் என்பனவற்றிலேயே மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. எனினும் எதிர்வரும் வியாழக்கிழமைக்குள் வெப்பநிலை மீண் டும் அதிகளவுக்கு அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப் பட்டுள்ளது.

இதன் பிரகாரம் விக்டோரியா மற்றும் சவுத் வேல் ஸில் மேலும் பாரிய காட்டுத் தீ ஏற்பட்டுப் பரவலாம் என எதிர்வுகூறப்படுகிறது. அத்துடன் மேற்படி காட்டுத் தீயால் ஏற்பட்ட வளிமண்டல மாசாக்கம் காரணமாக பெருந்தொகையான மக் கள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Eelamurasu Australia Online News Portal