அமெரிக்க தாக்குதலில் ஈரானிய தளபதி கசேம் சொலைமானி கொல்லப்பட்ட பின்னர் அவரது இடத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய தளபதி மேஜர் ஜெனரல் இஸ்மாயில் கானி சொலைமானியின் கொலைக்கு பழிவாங்கப்போவதாக சூளுரைத்துள்ளார்.
கொல்லப்பட்ட ஈரானிய இராணுவ அதிகாரியின் இறுதிநிகழ்வுகள் இன்று இடம்பெற்றவேளை அவரது பிரேதப்பெட்டியின் மேல் விழுந்து கதறியழுத கானி சொலைமானி வீரமரணமடையச்செய்யப்பட்டமைக்கான பழிவாங்கல் இடம்பெறும் என்பது இறைவனிற்கு அளிக்கப்பட்ட வாக்குறுதி என தெரிவித்துள்ளார்.
சொலைமானியின் பாதையைஅதே வலிமையுடன்தொடர்வதற்கு நாங்கள் உறுதி தெரிவிக்கின்றோம், என குறிப்பிட்டுள்ள கானி அமெரிக்காவை பிராந்தியத்திலிருந்து வெளியேற்றுவதன் மூலம் பல நடவடிக்கைகள் மூலம் பதிலடிகொடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
புதிய தளபதி கானி நீண்ட காலமாக கொல்லப்பட்ட தளபதியின் கீழ் சேவையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது
Eelamurasu Australia Online News Portal