இந்த நாட்டை சிறந்ததொரு நிலைக்கு கட்டியெழுப்ப ஒரு பலமான பாராளுமன்றம் தேவைப்படுகின்றது. புதிய நாடாளுமன்றத்தில் ஒரு வரவு, செலவுத்திட்டத்தை முன் வைத்து அதனூடாக நாட்டின் அபிவிருத்தியை முன்னெடுக்கவுள்ளோம் என்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
கடந்த 5ஆம் திகதி பின்னவல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் அங்கு உரையாற்றுகையில்;
கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷவை வெற்றிபெற செய்த அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவிக்கின்றோம். கடந்த நான்கரை வருடமாக இந்த நாடு படுபாதாளத்திற்கு தள்ளப்பட்டது. வெளிநாட்டு சக்திகளின் கட்டளைகளுக்கு கீழ்பட்டு செயற்பட்ட ஒரு துரதிஷ்டமான காலப்பகுதியாகும்.
நாட்டின் விவசாயம் அராஜகமான நிலைமைக்கு ஐ.தே.க. அரசாங்கத்தினால் கொண்டுசெல்லப்பட்டது. தற்போது இந்த நாட்டின் எதிர்காலம் தொடர்பில் ஒரு புதிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த நாட்டு மக்களின் முதலாவது நம்பிக்கையாக நம்பிக்கையுள்ள நாட்டை கட்டியெழுப்புவதே காணப்படுகின்றது இதன் அடிப்படையிலேயே ஜனாதிபதி செயற்பட்டு வருகின்றார்.
எமது அரசாங்கம் வரிச்சலுகைகளை வழங்கியிருக்கிறது. பல வரிகள் குறைக்கப்பட்டிருக்கின்றன. எனவே எமக்கு இந்த நாட்டை சிறந்ததொரு நிலைக்குக் கட்டியெழுப்ப ஒரு பலமான பாராளுமன்றம் தேவைப்படுகின்றது. புதிய பாராளுமன்றத்தில் ஒரு வரவு, செலவுத்திட்டத்தை முன்வைத்து அதனூடாக நாட்டின் அபிவிருத்தியை முன்னெடுக்கவுள்ளோம்.
பில்லியன் கணக்கில் கடனை வைத்துவிட்டே ஐக்கிய தேசியக்கட்சி வீடு சென்றுள்ளது. வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய பில்லி யன் கணக்கிலான நிதியைப் பெற மின் சாரக்கட்டணத்தை அதிகரிக்குமாறு ஆலோ சனை வழங்கப்படுகின்றது. ஆனால் அவ் வாறு மின்சாரக்கட்டணத்தை அதிகரிக்க மாட் டோம். மக்களின் எதிர்பார்ப்பை நிறை வேற்ற எமது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றார்.
Eelamurasu Australia Online News Portal